கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்திற்கு ஆங்கில, ஹிந்தி பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும். "kalvanji" என்பது என்ன?

அன்புடன்
திவ்யா

கருஞ்சீரகம் பற்றி சில பதிவுகளிள் படித்தேன்.எனது உறவினர் ஒருவர் தினமும் சிறிது சாப்பிடலாம் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிவித்தார்கள்.அப்படி தினமும் சாப்பிடலாமா?

சகோதரி திவ்யா மற்றும் பர்வீன் பானுவுக்கு,
இருவரும் நலமா? உங்களின் கேள்விகளுக்கான விடைகளை இங்கே பார்க்கவும். மீண்டும் எதுவும் சந்தேகமிருந்தால் கேளுங்கள். நன்றி.

http://www.arusuvai.com/tamil/forum/no/3327

அஸ்ஸலாமு அலைக்கும்.
அந்த பதிவை படித்து பார்த்துவிட்டு மீண்டும் சந்தேகம் எதும் இருந்தால் கேட்கிறேன்.
உங்கள் உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி.

பர்வீன்

டியர் அஸ்மா

எனக்கு உடல் பிரச்சனை எதும் கிடையாது.

சும்மா ஆரோக்கியத்திர்க்காக தினமும் கருஞ்சீரகம் பொடி சிறிது சாப்பிடலாமா?(கருஞ்சீரகம் மிகவும் சூடு என்று பார்தேன்)

பர்வீன்.

கருஞ்சீரகம்
டியர் பர்வீன், அஸ்மா,திவ்யா தெரிஞ்சா சொல்லுங்களேன்.
கருஞ்சீரகத்தை எப்ப்டி சாப்பிடனும், வாயல் தான் தெரியும் எதில் சேர்த்து சாப்பிடனும்.சீரகத்திற்கு பதில் கருஞ்சீரகம் வாங்க வந்துவிட்டேன்.

ஜலீலா

Jaleelakamal

அன்பு சகோதரி ஜலீலா,
கருஞ்சீரகத்தை வறுத்து பொடியாக்கி தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். எதுவும் வேண்டாம்னா தண்ணீல கூட கலக்கி குடிக்கலாம். கேட்காத நான் வந்து பதில் சொல்லிட்டேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள ஜலீலா!
தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

கருஞ்சீரகத்தை நான் வறுத்து பொடியாக்கி சிறிது சாப்பிடுவேன்.சாப்பிட்டவுடன் தண்ணி குடிப்போன்.உடலுக்கு சூடுன்னு சொல்ராங்க.ஆனால் நிறய மருத்துவ குணங்கல் நிறைந்ததாம்.நான் சும்மா ஆரோக்கியத்திர்க்காக சாப்பிடுகிறேன்.இன்னும் இது பற்றி தெரிந்தவர்கள் வந்து சொல்வாங்க.அப்பரம் முகத்துக்கு பயித்த மாவுடன் ஒரு துளி கருஞ்சீரக பொடி செர்த்து முகத்துக்கு போட்டால் முகம் சுத்தமாக இருப்பது போல இருக்கு.இது பற்றி எனக்கு அதிகம் தெரியாதுப்பா.இவை என் உறவினர் தெரிவித்தது.இன்று ரொம்ப பிஸி மதியம் ஒரு பதிவு மட்டும் அவசரமா எலுதிட்டு போனேன்.

அப்பரம் ஒரு விஷயம் ஜலீலா நீங்க சொல்லியது போல வாய்ல போட்டு தான் சாப்பிடுராங்க.ஆனா நான் கைய்ல எடுத்து வாய்ல போட்டு சாப்பிடுவேன்.
உங்க வசதிபடி செய்ங்க ஜலீலா!!!hahaha....

அன்புடன் பர்வீன்.

ஹை பர்வீன் நீங்கள் கருஞ்சீரகத்தை கையில் எடுத்து சாப்பிடுவீர்களா.
சரி இது எதற்கு நல்லது.
ஹாஸ்பிட்டலில் ஒரு பாம்பே நர்ஸ் பிரெஷருக்கு கலோஞ்சி சாப்பிடுங்கள் என்றார்கள் நானும் போய் சூப்பர் மார்கெட்டில் கலோஞ்சி என்று கேட்டால் கிடக்கவில்லை இப்பதான் புரிந்தது.
இனி நானும் சாப்பிடுகிறேன்.
ஜலீலா

Jaleelakamal

செல்வி மேடம் நல்ல இருக்கிறீர்களா
ரொமப் தேங்க்யு பொடி செய்து தேனில் கலந்து பால் சேர்த்து குடிக்கனும் சரி எதற்கு நல்லது.
ஜலீலா

Jaleelakamal

ஐயோ ஜலீலா(அக்கா!?), கருஞ்சீரக பொடிய தேனில் கலந்து, பால் சேர்த்து குடிக்க கூடாது.
ஒன்று தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.
அல்லது பாலில் மட்டும் கலந்து சாப்பிட வேண்டும்.
ஏதோ ஒன்று மட்டுதான். கர்ப்பப்பை பிரச்னைகளுக்கு நல்லது. மன்றத்தில் கருஞ்சீரகம் தலைப்பில் இருப்பதை ஒரு முறை விசிட் அடியுங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்