அறுசுவையின் அட்டன்டன்ஸ்

அன்புள்ள அறுசுவை குடும்பமே/நேயர்களே, நீங்கள் வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருக்கலாம் அல்லது உள்நாட்டிலேயே வாழ்பவர்களாக இருக்கலாம், எதற்கு இந்த விளக்கம் என்றால், நாம் எல்லோருமே விடுமுறைக்கோ,அல்லது மற்ற காரணங்களுக்காக ஒரு சில நாட்களிலிருந்து ஒரு சில மாதங்கள் வரையில் கூட அறுசுவைக்கு லீவ் போட்டு விடுகின்றோம். அதில் ஒரு வருத்தம் என்னவென்றால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் (என்னையும் சேர்த்து தான்) யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் காணாமல் போய்விட்டு திடீர் என்று ஆஜராவது. எனக்கும் அவ்வாறு நேரிட்ட போது உதித்தது தான் இந்த தலைப்பு அதை இப்பொழுது தான் எழுத சந்தர்ப்பம் கிடைத்தது. இனி அறுசுவைக்கு லீவ் போடுகின்றவர்களும், திரும்பி வந்தவர்களும் இங்கு அட்டன்டன்ஸ் கொடுத்து விட்டால் இதனால் இனிமேலாவது யாரையும் காணவில்லை என்ற நிலை அறுசுவையில் இருக்காது என்பது என் கருத்து. ஒரே குடும்பமாக கருதும் நேயர்களுக்குள் இதுப் போன்ற இணைப்பு இருப்பதில் தவறொன்றுமில்லயே? இதில் நேயர்களின் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி.

அன்பு தோழி அஸ்மா, எப்படி இருக்கின்றீர்கள். ஊரிலிருந்து வந்து வீட்டீர்கள் என்று அறிந்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.விடுமுறை காலம் எப்படி இருந்தது, ஊரில் அனைவரும் நலமா? நீங்கள் விட்டுச் சென்ற நமது அறுசுவைக்கும், இப்பொழுது காணும் அறுசுவையைக் குறித்து தாங்களின் மேலான கருத்தை அறிய ஆவல். தங்கை திருமதி வாணி ரமேஷை நீண்ட நாட்களாக அறுசுவையில் காணவில்லை, மேற் காணும் பதிவைப் பார்க்கும் போதாவது அவரின் நிலையைப் பற்றி கூறினார்களானால் நன்றாக இருக்கும், அவர்களும் ஊருக்கு போய் இருக்கின்றார்களோ என்னவோ தெரியவில்லை. ஒகே டியர் மீண்டும் சந்திக்கலாம் நன்றி.

மனோகரி மேடம் அவர்களே!!
இந்த ஐடியா சூப்பர்.
எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது .
ஏன்ன நானும் ஊருக்கு செல்லும் சமயம் வந்துவிட்டது.
நன்றிகள்.

மனோகரி அக்கா, சூப்பர் ஐடியா. நானும் அடுத்த மாசம் ஒரு வாரம் லீவு போடனும்.

என்னோட ஃப்ரெண்ட் கன்சீவ் ஆகீருக்கா. இப்ப தான் 2 மாசம் ஆகுது:-) ஆனா அவளுக்கு ரொம்ப nausea-வ இருக்கு. அதனால அவளுக்கு ஹெல்ப் பண்ணனும். ஒன்னுமே சாப்பிடமாட்டேங்கறா. கூட இருந்து இன்னொரு ரெண்டு வாரம் பாத்துக்கனும். அவளுக்கு ஒரு பொன்னு இருக்கா, அதனால தான். அப்புறம் அவளோட மாமியார் வராங்க:-). அதனால ப்ராப்லெம் இல்ல. அவங்க பாத்துப்பாங்க.
என் பொண்ணும், அவபொண்ணையும் பாத்துக்கவே டைம் கிடைக்காதுன்னு நினக்கறேன். கிடச்சா நிச்சயம் ப்ரெசண்ட்-ஆக இருப்பேன்:-). இப்பத்தைக்கு Bye.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹலோ சுபா நலமா

Jaleelakamal

சனிக்கிழமை ஊருக்கு போறேன்.திரும்ப வர ஒன்னரை மாதம் ஆகும்.வியாழ கிழமை சிங்கப்பூர் போயிடுவேன்.ஊரில் இருக்கும் போது அப்பப்போ வர பாக்கிறேன்.thursday வரைக்கும் கண்டிப்பா வருவேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் எல்லோரின் பதிவுகளைப் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.உண்மையிலேயே அறுசுவையை ஒரு குடும்பமாகவே உணருகின்றேன். கருத்து தெரிவித்த நேயர்கள் அனைவருக்கும் நன்றி. சரி இனிமேல் யாரும் அறுசுவைக்கு அனாவசியமாக லீவ் போடக் கூடாது ஓகேவா. உடம்பு சரியில்லா விட்டாலும் கூட அட்டென்டன்ஸ் கொடுத்து விட்டு தான் லீவ் போட வேண்டும்,ஏனென்றால் இந்த டீச்சர் ரொம்ப கண்டிப்பானவ சொல்லிட்டேன் ஆமாம்...(சும்மா விளையாட்டுக்கு)மீண்டும் சந்திப்போம். நன்றி.

சரி மனோகரி மேடம் அப்படியே ஆகட்டும்.
உங்கள் குறிப்புகள் எல்லாம் சூப்பர் அதும் கொவில் புளியோதரை அருமையிலும் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஜலீலா

Jaleelakamal

தயவு செய்து அட்டென்டென்ஸை க்ளோஸ் பண்ணாதீங்க. இதோ வந்துட்டேன்.
அன்புடன்
ஜெ

ஜெயந்தி மேடம் ஆயிசு நூறு இப்ப இப்பதான் உங்கள் குறிப்புகளில் ஏதாவது புது வகை இருக்கான்னு செக் பண்ணி கொண்டிருக்கிரேன்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்