சென்ற வார மன்றம் - 4 (16-09-07 ல் இருந்து 22.09.07 வரை)

கடந்த வாரம் (16.09.2007 - 22.09.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவை உறுப்பினர்  திருமதி. மனோகரி அவர்கள் தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே இருந்த பட்டங்களைத் தவிர்த்து வேறு சில புதிய பட்டங்களையும் கொடுத்துள்ளார். அறுசுவை அரசி பட்டம் கொடுக்கப்பட்டுள்ள பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில் கொடுக்கப்படுவதாலும், பதிவுகளை எண்ணுவது எங்களுக்கு எளிது என்பதாலும், ஜட்ஜஸ்களுக்கு சிரமம் வைக்காமல் அதை நாங்கள் செய்து வருகின்றோம். மனோகரி மேடம் எல்லாப் பக்கங்களையும் பார்வையிட்டு, மொத்த பதிவுகளையும் கணக்கிட்டு, ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுத்துள்ளார் என்பதையும் கணக்கிட்டுள்ளார். இன்னமும் ஆச்சரியமாக இருக்கின்றது. எப்படி அதை செய்தார் என்று. எங்களது scriptல் கூட ஒரு பிரச்சனையுள்ளது. ஒரே பதிவு இரண்டு முறை பதிவாகியிருக்கும்போது, அதை ஒன்றாக கணக்கிடாமல், இரண்டாக கணக்கில் கொள்ளும். இங்கே மனோகரி மேடம் அவற்றையெல்லாம் சரிசெய்து மிகத்துல்லியமாக கணக்கிட்டுள்ளார். அவருக்கு எங்கள் பாராட்டுகள்.

அதேநேரம் இனிவரப்போகும் ஜட்ஜஸ்களுக்கு எங்களின் தாழ்மையான வேண்டுகோள். அறுசுவை அரசி பட்டத்திற்கான அதிக குறிப்புகள் கொடுத்தவரை நீங்கள் கஷ்டப்பட்டு எல்லா பதிவுகளையும் பார்த்து கணக்கிட்டு கண்டறிய வேண்டாம். அதை நாங்கள் எளிதாக செய்து விடுகின்றோம். அரை நிமிட வேலை. மற்ற பட்டங்களுக்கு மட்டும் உறுப்பினர்களை தேர்வு செய்தால் போதுமானது.

திருமதி. மனோகரி அவர்களுக்கு அறுசுவை நிர்வாகம் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதிக பதிவுகள் கொடுத்து இந்த வாரமும் அறுசுவை அரசி பட்டத்தினை தட்டிச் செல்பவர் -

திருமதி. தளிகா (99 பதிவுகள்)

அடுத்த இடங்களில்

2. சுபா ஜெயப்பிரகாஷ் - 82
3. ஹர்ஷினி - 73
4. கவி சிவா - 72

சிறந்த தலைப்பு கொடுத்து டைட்டில் ராணி பட்டத்தை தட்டி செல்பவர்,
திருமதி ஜெயந்தி. அவர் கொடுத்த தலைப்பு - " ஒரு மொட்டு மலராகும் பொழுது "

http://www.arusuvai.com/tamil/node/5192

நகைச்சுவையான பதிவு கொடுத்து நகைச்சுவை ராணி பட்டத்தினை பெறுபவர் திருமதி. ஹர்ஷினி அவர்கள்.

பதிவு: "செருப்பே வளராதே"

http://www.arusuvai.com/tamil/node/5204

ஐடியா ராணி திருமதி தேவசேனா பதிவு - மனதில் உறுதி வேண்டும்

http://www.arusuvai.com/tamil/node/5193

அடுத்த இடத்தை பிடித்தவர் திருமதி நித்ஸ். பதிவு - ஆலோசனை பிளீஸ்.

http://www.arusuvai.com/tamil/node/5257

கறார் ராணி திருமதி அம்பிகா பதிவு- காயா? பழமா?
http://www.arusuvai.com/tamil/node/5247

அடுத்த இடத்தில் இருப்பவர் திருமதி வினோதா பதிவு- சிம்பிளா எதுக்கு.
http://www.arusuvai.com/tamil/node/5192

புலம்பல் ராணி திருமதி ஹர்ஷினி பதிவு- சமையலில் ஒரு வருட அனுபவம்.no:5194
http://www.arusuvai.com/tamil/node/5194

அடுத்த இடம் திருமதி ஹேமா பதிவு- ஏன் இப்படி?
http://www.arusuvai.com/tamil/node/5257

கடி ஜோக் ராணி திருமதி செந்தமிழ் செல்வி பதிவு- சின்னம்மா பெரியம்மா
http://www.arusuvai.com/tamil/node/5297

கடி ஜோக் ராஜா திரு ரஹ்மத் பதிவு-டீச்சர்/மானவன்
http://www.arusuvai.com/tamil/node/5237

தொடர்ந்து மிரட்டலான தலைப்புகள் கொடுத்து துணிச்சல் ராணி பட்டத்தை தட்டிச் செல்பவர் திருமதி
தளிகா. பதிவுகள்- கொல விழும் கொல, செயினை இழுக்கட்டா, தோலை உரிச்சு போடுவேன்.
http://www.arusuvai.com/tamil/node/5257
http://www.arusuvai.com/tamil/node/4975
http://www.arusuvai.com/tamil/node/5179

கடந்த வார பயனுள்ள பதிவு இடுப்பு வலிக்கான ஆலோசனையை வழங்கியவர் திருமதி தளிகா அவர்கள் பதிவு - எனக்கு தெரிந்தவை.
http://www.arusuvai.com/tamil/node/5258

அடுத்த பயனுள்ள பதிவாக கர்பிணிக்கான உணவை வழங்கியவர் திருமதி ஜலீலா பானு
http://www.arusuvai.com/tamil/node/1816

சிரிக்க வைத்த தலைப்புகள் -

1. எழுதினது நீங்கள்...சாகப் போறது நானா? வழங்கியவர் திருமதி விதுபா
http://www.arusuvai.com/tamil/node/5257

2. சுமோக்கெல்லாம் பயப்படமாட்டோம் இந்த சுமோ வீராங்கனைகள். வழங்கியவர் திருமதி ஹர்ஷினி.
http://www.arusuvai.com/tamil/node/5204

மனோகரி மேடம்,

எப்படி மேடம் இதெல்லாம்:-). சான்ஸே இல்ல, என்னமா எல்லாத்தையும் படிச்சு, இவ்ளவு அழகா குடுத்திருக்கீங்க. உங்களுக்கு ஒரு பெர்ரிய சபாஷ்:-)

இப்படி செலக்ட் பண்ணனும்னா நிச்சயம் கம்யூட்டர பார்த்து முறச்சிட்டே தான் இருந்திருக்கனும். கரெகடா தான் மாமா, கேட்டிருக்காங்க:-). முறக்காதேன்னு.
க்ரேட் மேடம். அப்புறம் நீங்க குடுத்த ஹிண்ட் வெச்சு நான் வேற ஒருத்தங்கள ஊகிச்சேன். ஆனா அவங்க இல்ல.

எனக்கு கூட பட்டம் கிடச்சிருக்கு, உங்க கையால. ரொம்ப நன்றி மேடம்:-)

தளிகா,

இந்த வாரமும், அவ்ளவு பிஸிலயும் இவ்ளோ பதிவு பண்ணி அடிச்சிட்டீங்க அறுசுவை ராணி பட்டத்தை. வாழ்த்துக்கள். உங்க துணிச்சல் ராணி பட்டத்துக்கான பதிவுகள், இப்ப கூட சிரிப்பு வருது.

பட்டங்கள் வென்ற அனைவருக்கும், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்:-)

அன்புடன்
ஹர்ஷினி :)

அன்புடன்
ஹர்ஷினி :)

ஹர்ஷினி, அப்புறம் பட்டங்கள ஜெயிச்ச எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

மனோஹரி மேடம் ரொம்ப நல்லா SELECT பண்ணியிருகாங்க, ரொம்ப பொறுமையா SELECT பண்ணிண அவங்களுக்கும் வாழ்த்துக்கள்.

பிரியமுடன்
பாப்பு

பட்டம்னா இப்படித்தான் குடுக்கனும். மனோகரி அக்கா உங்களுக்குத்தான் முதல் வாழ்த்து. பட்டங்களை வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இங்கு தளிகாவை பீட் பண்ண ஆட்களே இல்லையா:-)

பட்டம் வாங்கின அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மானோஹரி மேடம் அனைவரையும் மகிழ்வடைய்யச் செய்ததர்க்கு மிகவும் நன்றி.

பட்டம் வாங்கின அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

அனிதா

hi

இவ்வளவு அழகாக, பொறுமையாக தேர்ந்து எடுத்த மனோகிரி மேடத்திற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என்று யோசியுங்கள்.

பட்டம் வாங்கின அனைவருக்கும் என்து மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தளிகா அடுத்த வாரம் இந்த பட்டம் "தொடர் அரசி பட்டம்" அதற்காக இப்பொழுதே எனது வாழ்த்துக்கள்.

ஜானகி

பட்டம் வாங்கின அனைவருக்கும் பாராட்டுக்கள்(யப்பா...இந்த தளிகாவை அடிச்சுக்க ஆளே இல்லையா).மனோஹரி மேடத்துக்கு ஒரு ஸ்பெஷல் சலாம் போட்டுக்கரேன்.ரொம்ப பொறுமையா எல்லா பதிவையும் படிச்சு பொருத்தமா பட்டம் கொடுத்திருக்கீங்களே அதுக்குதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என் பேர் இதில் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் போன வாரம் உடம்பு சரியில்லாததால் கொடுத்ததே ஒரு பதிவுதான். அதுக்கு ஐடியா ராணி பட்டமா. மனோஹரி மேடம், எப்படி இத்தனை பொறுமையா செலெக்ட் பண்ணீங்க? நாங்களெல்லாம் உங்ககிட்ட நிறைய விஷயம் கத்துக்கணும். முக்கியமா எந்த வேலையா இருந்தாலும் சிரத்தையோட செய்யறது எப்படின்னு. எப்படி அத்தனை பதிவையும் பொறுமையா எண்ண முடிஞ்சது? கொஞ்சம் அந்த சீக்ரட்டையும் சொல்லுங்க.

உங்களுக்கு பர்பெக்ட் ராணி பட்டம் கொடுக்கலாம். பட்டம் வாங்கிய அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள். உடம்பு குணமாயிடுச்சு. அதனால் நிறைய எழுதலாம்னு சந்தோஷப்பட்டேன். ஆனால் அடுத்த வாரம் முழுக்க சைட் விசிட். யாருக்காவது வெயிட் குறையணுமா, எனக்கு வந்த இன்பெக்ஷனை அனுப்பறேன். ஒரு வாரத்தில் 6 கிலோ குறைஞ்சாச்சு. எந்த டயட்டும், எக்சர்சைசும் இல்லாமல். இந்த வாரம் 1 கிலோன்னு வெயிட் குறையுது. இப்படி இன்னும் ஒரு வாரம் இன்பெக்ஷன் இருந்திருந்தா நினைச்ச வெயிட்டை ஈசியா அடைஞ்சுருக்கலாம் போலிருக்கு. அடிக்க வராதீங்க. என்னதான் டயர்டா இருந்தாலும் வெயிட் குறைஞ்து சந்தோஷமா இருக்கு. இனி இதை மெயிண்டெய்ன் பண்ணிக்கணும் வேற.

பட்டங்களைத் தட்டிச் சென்ற அனைத்து சகோதர, சகோதரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இதில் எனது பங்கையும் சேர்த்து பாராட்டிய திரு அட்மின் அவர்களுக்கும் நேயர்கள் அனைவருக்கும் எனது நன்றி. என்னங்க அட்மின் எப்போழுது அடுத்த ஜட்ஜை அறிவிக்க போகின்றீர்கள்?

முறைச்சு முறைச்சுப் பார்த்தாலும் நீங்க ஒரு சூப்பர் ஜட்ஜம்மான்னு நிரூபிச்சிட்டீங்க...நன்றி. ஆனா ஒரே வருத்தம், நம்ம மெட்ராஸ் மினியம்மாவுக்கு எந்தப் பட்டமும் கெடைக்கலேங்கறதுதான்...

ஓக்கே,பரவால்ல...இந்த வாரம் பாக்கலாம்.

மேலும் சில பதிவுகள்