முதல் இடத்தைப் பிடித்த பெண்கள்

ஒவ்வொருவர் மனதிலும் சிலரைப் பற்றிய உயர்ந்த எண்ணம் இருக்கும். மனதிற்குள் ஒரு பட்டியல் இருக்கும். இந்த இடம் இவருக்கு என்று.
என் மனத்தில் முதல் 10 இடங்களைப் பெற்ற பெண்களைப் பற்றி எழுதுகிறேன். நீங்களும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே.

1. என் பாட்டி (அப்பாவின் அம்மா) - இறந்து 31 வருடங்கள் ஆன் பின்பும் எங்கள் குடும்பத்து உறுப்பினர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பவர். அன்பின் உருவம்.
2. என் அம்மா - நாங்கள் 4 சகோதரிகளும் படித்து கண்டிப்பாக வேலைக்குப் போகவேண்டும் என்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் விருப்பப்படி எல்லோருக்கும் நல்ல வேலை கிடைத்தது கடவுள் அர்ளால்.
3, 4 - மதர் தெரெசா, பாண்டிச்சேரி அன்னை மிரா - பிறந்த மண்ணை விட்டு வந்து நம் நாட்டிற்கு சேவை செய்தவர்கள்.
5. அனிதா புஷ்பவனம் குப்புசாமி - செந்தமிழ் நாட்டு தமிழச்சிகள் சேலை கட்ட மறந்தபோதும் வடக்கிலிருந்து வந்தாலும் சேலையை மறக்காத பெண். அழகாகத் தமிழ் பேசும், அழகாக சிரிக்கும் அழகுப் பெண்.
6.குஷ்பு - தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் எல்லாம் உளறு தமிழ் பேச இவர் பேசும் தமிழையும் இவரையும் பிடிக்கும்.
7.என் செல்லமகள் சந்தியா - நான் சோர்ந்து போகும் போதெல்லாம் க்ளூகோஸாக இருக்கும் என் பெண். நல்ல தோழியும் கூட.
8.என் தோழியர் - அறுசுவை, அலுவலகம் முதல் ரயில் சினேகிதிகள் வரை - (ஆனால் எங்கள் சினேகிதம் ரயில் சினேகம் அல்ல).
9.எங்கள் வீட்டில் வேலை செய்யும் வாசுகி - 'அம்மா பாவம். காலையில் 8 மணிக்கு கிளம்பி ராத்திரி 8 மணிக்கு வராங்க' என்று அந்த நேரத்திலும் வந்து பாத்திரம் தேய்த்துத்தரும் ஆதங்கம்.
10.பத்தாவது இடம் யாருக்கு. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,எனக்கேதான். என்னையே நான் நேசிக்கிறேன்.

உங்கள் மனத்தில் இடம் பிடித்தவர்களையும் சொல்லலாமே விரும்பினால்.
அன்புடன்
ஜெயந்தி.

1என் அம்மா-பொறுமையின் சிகரம்.இன்று எனக்கு கொஞ்சமாவது பொறுமை இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அம்மா.அவர்கள் கற்று கொடுத்த பொறுமைதான் இன்று என் சந்தோஷத்திற்கு காரணம்.
2பாட்டி-சிறு வயதிலேயே கணவரை இழந்து விட்டாலும் தைரியமாக என் அம்மாவை வளர்த்து நல்ல நிலைக்கு உயர்த்தியவர்.
3 என் மாமியார்(ஐஸ் இல்லை)அவரது தைரியம் தன்னம்பிக்கை.மருமகளை மகளாக பார்க்கும் அவர் குணம்.அவரிடம் கற்று கொண்டது ஏராளம்.
4.என் நாத்தனார்கள்-எனக்கு சகோதரி இல்லை என்ற குறையை நீக்கியவர்கள்.நல்ல தோழிகள்.
5.மதர் தெரேசா
6.ஜெயலலிதா-பல குறைகள் இருந்தாலும் அவரது அறிவு கூர்மை,தன்னம்பிக்கையும்,ஆளுமை தன்மையும் பிடிக்கும்.
அப்புறம் சாதனை படைத்த அத்தனை பென்களும் பிடிக்கும்.
அரு சுவை தோழிகளை பற்றி சொல்லியா தெரிய வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

1. என் அம்மா - என் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முதற்காரணமானவர்.என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். தனக்குனு யோசிக்காம எங்களை பற்றி மட்டுமே நினைப்பவர்.
2. என் அம்மாயி (அம்மாவோட அம்மா) - இந்த வயதிலும் உழைப்பிற்கு அஞ்சாதவர். உழைப்பு, சுத்தம், கண்டிப்பு, பாசம் எதிலும் குறையாதவர்.
3.மதர் தெரசா - அன்பு, மனித நேயம், சேவை இவற்றால் அசர வைத்தவர்.
4.என் தோழிகள்
5.எம்.எஸ்.சுப்புலட்சுமி - இனிய குரல், பக்தி,தெய்வீக அழகு இவற்றால் ஈர்ப்பவர். கர்நாடக இசை கச்சேரியில் தேன் தமிழ் பாடல்களை புகுத்தி தனக்கென தனி சாம்ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டவர்.
6.Condoleezza Rice - அமெரிக்காவின் சக்தி மிக்க பெண்மணி. போராடி வெற்றி பெற்றவர். அமெரிக்கவின் செக்ரட்ரி(U.S. secretary of state) ஆக உள்ள முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்.
7.என் அக்கா
8. ஜெயலலிதா - இவருடைய துணிச்சல், போராடும் குணம், ஆளுமை திறன் பிடிக்கும்.
9.பி.டி.உஷா - தன்னம்பிக்கை மங்கை.தடகள அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்.
10.கமலா செல்வராஜ் - சாதனை மருத்துவர். டெஸ்ட் டூப் முறையால் ஆயிரக்கணக்கான தம்பதிகளுக்கு குழந்தை கொடுத்து குளிர வைத்தவர்.

கிரன் பேடி, அனிதா குப்புசாமி, மீரா நாயர்,சுஷ்மிதா சென்,பானுமதி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இத யாரும் பார்க்கலையாப்பா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மேலும் சில பதிவுகள்