அதிர்ச்சிகரமான உண்மை

தோழிகளே,
இங்கு நடந்த ஒரு அதிர்ச்சியான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.பலகீனமான மனதுடையவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்.
இது 1 மாதத்திற்கு முன் இறந்து போன ரியா எனும் பெண்ணின் கதை. அவள் ஒரு call centerல் வேலை பார்த்தாள். அவளுடைய காதலன் சங்கர். உண்மையான காதல் ஜோடிகள். ரியா பெரும்பாலான நேரத்தை தன் காதலனுடன் செல்லில் பேசுவதிலே செலவிடுவாள்.அவள் தன் செல்லை பிரிந்ததே இல்லை.தன் தோழிகளிடம் நான் இறந்தால் கூட என் செல்லை பிரிய மாட்டேன் என்றிருக்கிறாள்.மணிக்கொரு முறை சங்கருடன் பேசி விடுவாள்.இருவரின் வீட்டிலும் இவர்கள் காதல் தெரியும். இந்நிலையில் வேலை காரணமாக சங்கர் வெளிநாடு சென்று இருந்த சமையத்தில் சாலை விபத்தில் ரியா இற்ந்து விட்டாள்.இறுதி சடங்கு முடிந்து அவளை தூக்க முயர்ச்சித்தால் முடியவில்லை. பலரும் முயற்ச்சித்தும் முடியவில்லை.
அனைவரும் திகைத்த நேரத்தில் ரியாவின் தோழிகள் சொன்னதை கேட்டு அவளின் செல்லையும் அவளோடு வைத்தனர்.என்ன ஆச்சரியம்! இப்போழுது தூக்க முடிந்தது.
ஒரு வாரம் கழித்து சங்கர் வந்தான்.அவனுக்கு ரியா இற்ந்த விஷயம் தெரியாது. அவன் ரியா வீட்டுக்கு போன் செய்து அவள் அம்மாவிடம், நான் வருகிறேன்.ரியாவிடம் சொல்ல வேண்டாம். சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்றான். அவன் வந்த பின் ரியா பற்றி கூற அவன் சிறிதும் நம்பவில்லை. எல்லாரும் எடுத்து கூறி நம்ப வைத்தனர்.உடனே அவன் அதிர்ந்து போனான்.அவனுக்கு வியர்த்து கொட்டியது.அவன் "நேற்று வரை தினமும் அவளிடம் பேசி கொண்டிருக்கிறேன்" என்றான். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
பிறகு தான் உண்மை தெரிந்தது.ரியா உபயோகித்தது "Hutch" என்று. நீங்கள் எங்கு சென்றாலும் "ஹட்ச்" நெட்வொர்க் உங்களை பின் தொடரும்.
Hutch has the best Network coverage. "Wherever you go, hutch network really follows U"

ஹா! ஹா! ஹ!. வேண்டாம்.வேண்டாம். யாரும் என்னை திட்டாதீங்க. சும்மா விளையாட்டுக்கு :-) . இது என் கணவருக்கு வந்திருந்த ஒரு மெயில்."யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு" உங்களுக்கு சொல்லிட்டேன்.அவ்வளவுதான். மத்தபடி திவ்யா ரொம்ப சமர்த்துங்க.

அன்புடன்
திவ்யா

உங்க அட்ரஸ் என்னங்க?எங்கயும் வெளிய போயிடாதீங்க நான் வந்து கிட்டே இருக்கேன்...

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

யாருங்க, அந்த கறார் மெட்ராஸ் பொண்ணு. விதுவும் அம்பியும் சொல்லி இருக்கீங்க? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க.

எனக்கு தெரிஞ்சு இங்க ஹேமா, மனோகரி மேடம், ஜெயந்தி மேடம், இவங்க தான் மெட்ராஸ். வேற யாரு இருக்காங்க????

அப்ப வேற யாரு அந்த கறார் பொண்ணு???

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நானும் மெட்ராஸ் தான்.
ஆனா யாரு அந்த கறார் மெட்ராஸ் பொண்ணு?

பிரியமுடன்
பாப்பு

மெட்ராஸ் கேர்ள்னு மனோகரி அவர்களை தான் சொன்னேன்...அவங்க தான எனக்கு கறார் ராணி பட்டம் கொடுத்தாங்க... நீங்களும்(பாப்பு,ஹர்ஷினி) மெட்ராஸ் கேர்ளா?ஏதோ ஒரு படத்துல ராதிகாவை மெட்ராஸ் கேர்ள்னு சொல்லுவாங்க..அதான்

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

நான் யாரை கறாரா இருக்காங்கன்னு சொன்னேன்னு தெரியனும்னா மனோகரிக்கா கொடுத்த லிங்கை பாருங்க..ஃப்பூ நிச்சயமா அடுத்த அலட்டல் ராணி பட்டம் எனக்குதான்..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

ஹாய் எப்படி இருக்கீங்க?
ஆமா நான் மெட்ராஸ் கேர்ள் தான்.
ஆனா இப்போ US ல இருக்கோம்.

பிரியமுடன்
பாப்பு

ஹாய் திவ்யா,
எனக்கு மனசு முழுவதும் திக் திக் என்று பயத்துடன் படித்தேன்.
கடைசியில் தான் நீங்கள் ஹட்ச் போன் டீலர் என்று தெரிந்து ஆஆஆஆஆ....
உண்மையில் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!!!!!!!!!

எனக்கு சொந்த ஊர் வேற!
ஆன செட்டில் ஆகி இருப்பது சென்னையில் தான்
எனவே நானும் சென்னை தமிழச்சிதானுங்கோ!!!

ஹாய் அம்பி,
அட்ரஸ் வேணுமா? அஸ்கு புஸ்கு! அட்ரஸ் எல்லாம் சொல்ல மாட்டேன். அடி தாங்க வடிவேலு மாதிரி யாராவது கிடைச்சதுக்கப்புறம் சொல்றேன்.:-)

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நானும் சென்னை தானுங்கோ!!!

ஜானகி

மேலும் சில பதிவுகள்