கணச்சூட்டை போக்க வழி என்ன?

உடல் சூட்டை (கணச்சூட்டை) போக்க ஏதாவது வழி இருக்கா? கோடை காலத்தில் சூடு அதிகமாகி தலை வலிக்கிறது. ஏதாவது tips please? நன்றி

ஹாய் அபி,
நிறைய தண்ணீர் குடிங்க. மோர், இளநீர் சேர்த்துக்குங்க. வெந்தயம் சூட்டை குறைக்கும். நீர்சத்து மிக்க பழங்கள் சேர்த்துக்குங்க. ஃபார்ஸ்ட் ஃபுட் தவிர்த்தல் நலம். கண்களுக்கு போதிய ஓய்வு கொடுங்க. அதிக நேரம் கண் விழிப்பது, குறைவான ஒளியில் படிப்பது, தலை சூடு இவைகளும் கண்களை பாதிக்கும். வாரத்தில் 2 நாள் நல்லெண்னை தேய்த்து 1/2 மணி நேரம் ஊற் வைத்து குளிக்கவும். சைனஸ் தொந்திரவு இருந்தால் எண்ணெய் குளியலுக்கு மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் போது உடல் சூடாகும்.

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

என் குழந்தைக்கு மிகவும் காய்ச்சல் இருந்தது. எனக்கு டாக்டரிடம் செல்ல பிடிக்கவில்லை.இங்கே ஊசி கூட போடுவார்கள்.
அப்படி ஒரு நாளில் விளக்கெண்ணையை ஒரே ஒரு சொட்டு உச்சந்தலையில் வைத்தேன். 30 மணி நேரத்தில் குழந்தை நன்றாக விளையாட ஆரம்பித்து விட்டேன்.
நீங்கள் விளக்கெண்ணையை யூஸ் பண்ணிப் பாருங்கள்.
நல்ல பலன் தரும் என்று நினைக்கிறேன்.

1. எப்பொழுதும் சீரகம் அல்லது சோம்பு போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் குடியுங்கள்.
2. காய்ந்த திராட்சைப் பழம் எடுத்துக் கொள்ளலாம்.
அன்புடன்
ஜெயந்தி

திவ்யா, சுபா, ஜெயந்தி உங்கள் எல்லாருக்கும் நன்றி. நீங்கள் சொன்னவற்றை செய்கிறேன். thanks again.

வீட்டு வைத்தியத்தில் தலை வறட்சியை ,பொடுகை போக்க ஏதாவது சொல்ல முடியுமா? டான்ரவ் சம்பூ வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகித்து முடி உதிர்ந்தது. அது தான் ஆயுள் வேத முறை. நன்றி

அபினவிக்கு,
www.arusuvai.com/tamil/form/no/5059
இங்கு பார்வையிடுங்கள்.உங்களுக்கு தீர்வு கிடைக்க வழியுள்ளது.
நன்றி

மேலும் சில பதிவுகள்