அன்பான தோழிகளிற்கு !!!

அன்பான தோழிகளிற்கு,
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

நானும் அறுசுவையினை பல நாட்களாகப்பார்த்துவருகிறேன்,
ஆனாலும் உரையாடல்களில் பங்குபற்றுதல் என்பது மிகமிகக் குறைவே.
இனி வரும் நாட்களில் வரமுயற்சிக்கிறேன்,
(அறுசுவை சகோதரசகோதரிகள்) உங்கள் அனைவரினதும்
ஆதரவு கண்டிப்பாகத் தேவை.

அன்புடன்,
ஷாந்தா

ஷாந்தா, வரவேற்பு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? உங்க த்ரெட்டை நான் இப்பதான் பார்க்கறேன். எல்லாம் இப்ப அறுசுவை சமையல் குறிப்புகள்ல பிஸியாயிட்டோமா, சே நான் கவனிக்கவே இல்லை. இப்பகூட நான் அந்த த்ரெட்டில உங்க பதிவ பாத்ததுக்கப்புறம்தான் இங்கவே வந்தேன். நம்ம ஜோதியில வந்து கலந்துட்டீங்க இல்ல இனி அடிக்கடி பேசலாம்.

அன்புள்ள ஷாந்தா,
வருக! வருக! உங்கள் வரவு நல்வரவாகட்டும். அறுசுவை தோழிகளின் சார்பில் வரவேற்க்கிறேன். வானதி சொன்ன மாதிரி ஜோதியில கலந்து ஜமாய்ங்க.

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

வானதி, திவ்யா மற்றும் சமையலில் அசத்திக்கொண்டிருக்கும் அனைத்து தோழிகளிற்க்கும் எனது நன்றி.
உரையாடல்களில் அதிகமாகப்பங்கேற்க ஆசைதான், ஆனாலும் முடிவதில்லை, அதிலும் தமிழில் type பண்ணி முடிவதற்குள் எனக்கு விடிந்துவிடும் போலிருக்கே.

ஷாந்தா ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். போக போக பழகிவிடும். விடாது முயற்சி செய்யுங்கள்.

ஹாய் ஷாந்தா ....இப்டியே டைப் பன்னுங்க...கொஞ்ச்ச நாள் தான்..அப்ரம் சுலபமாய்டும்
தளிகா:-)

இப்பத்தான் உங்க எல்லா பதிவையும் பார்த்தேன்,மதிய போசன இடைவேளையில் (எப்படி இருக்கு தமிழ்?) சந்திக்கலாமா?அதிகம் பதிவுகள் தரல்லேன்னு மறந்திடமாட்டீங்களே :-)

மதிய போசனமா....லன்ச் ப்ரேகா..ஸ்கூல் டீசெரா?

தளிகா:-)

லன்ச் ப்ரேக் தான், ஆனால் டீச்சரா? அம்மாடி நான் டீச்சராவதற்கு பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள்? இல்லை தாளிகா, நான் Finance assistantஆக பணிபுரிகிறேன். நான் ட்டைப் பண்ணி முடிவத்ற்க்குள்ள ப்ரேக் முடியாம இருந்தா சரிதான் !!
எனக்கு சமையல்னா ரொம்பவே பிடிக்கும் ஆனாலும் விதவிதமா சமைக்க நேரம் கிடைக்கமாட்டேங்குது.
அறுசுவையைப் பார்த்து அப்பம்(சூப்பரா வந்திச்சு!!),பூரி மசாலா, மைசூர்பா,காரசேவ் எல்லாமே செய்து பார்த்திருக்கிறேன்.
அப்புறமா சோன் பப்டி செய்முறைக்காக அட்மின் அண்ணாவை ரொம்பவே அறுத்திட்டேன்(முன்பு) ஆனாலும் இன்றுவரை அது கிடைக்கவேயில்லை.
யாருக்காவது தெரிந்தால் ப்ளீஸ் உபயம் பண்ணுங்களேன் :-)
மீண்டும் சந்திப்போம்!!

//டீச்சரா? அம்மாடி நான் டீச்சராவதற்கு பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள்?//
சாந்தா ஆசிரியர்னா ஏன் அலர்றீங்க.உங்களுக்கு கோபம் நிறைய வருமா?அடி போட்டுவீங்களா என்ன?அப்படினா தான் பிள்ளைங்க பாவம்.நீங்க எப்படி? :-)

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஆமா திவ்யா, ட்டீச்சரா இருக்கணும்னா ரொம்ப பொறுமை அவசியம்,ஆனா எங்கிட்ட அது நிறைய கம்மிதான்(கொஞ்சம் கம்மி இல்ல).
வீட்லேயும் அப்படித்தான், செய்யறத எல்லம் செய்திட்டு அப்புறமா ரொம்ப மனவருத்தப்படுவேன்(இதெல்லாம் தேவைதானா என்று திட்டுவது இங்க கூடக்கேட்குது :-) ) )

மேலும் சில பதிவுகள்