கூட்டாஞ்சோறு வார சமையல் குறிப்புகள்

அன்புள்ள அறுசுவை நேயர்களுக்கு, சகோதரி ஹர்ஷினியின் "அறுசுவை குறிப்பில் சமையல்"என்ற பகுதியின் தொடர்ச்சியாக, வாரா வாரம் இடம்பெற உள்ள சமையல் குறிப்புகளுக்கான குறிப்புகள் மட்டும் அடங்கிய பகுதி இது.குறிப்புகளை தேர்வுச் செய்து கொடுப்பவர் இங்கு வந்து தங்களின் தேர்வை பதித்துவிடுங்கள். இதனால் இனி நேயர்கள், வார குறிப்புகளை இந்தப் பகுதிக்கு வந்து அந்த வார குறிப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு தேர்வு செய்யும் நேயர்களுக்கு ஒரு வேண்டுகோள்,சைவப் பிரியர்களுக்கு வேறு சாய்ஸ் இல்லாததால் அசைவக் குறிப்புகளை தேர்வுச் செய்யும் பொழுது, அதற்கிணையாக சைவ குறிப்பையும் கட்டாயம் தேர்வுச் செய்யவும். அதைப் போல் இனிப்பு பிரிவில் முட்டை சேர்க்கபட்டிருந்தால், முட்டை இல்லாத சைவ குறிப்பையும் தேர்வுச் செய்யவும்.மேலும் ஒரு வேண்டுகோள் செய்து பார்த்த குறிப்புகளின் பின்னூட்டத்தை மறக்காமல் குறிப்பு கொடுத்தவருக்கு அனுப்பி விடுங்கள்.

அன்பு தங்கை ஹர்ஷினி, தாங்களே அடுத்த வாரத்திற்கான தேர்வுச் செய்த குறிப்புகளையும் கொடுத்து இந்த பதிவை ஆரம்பித்து வைக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

தொடரும்......

1. மெட்ராஸ் மீன் குழம்பு(மனோகரி)#2399 (and/or)
செட்டிநாட்டு கொண்டக்கடலைக் குழம்பு(சித்ரா செல்லதுரை)#1797

2. ஆந்திரா பிரியாணி (அஸ்மா)#2208 (and/or)
ஈசி வெஜ் பிரியாணி(வாணி ரமேஷ்) 1808

3. புதினா ரசம் (செய்யத் கதீஜா)#3106 (and/or)
தாய்லாந்து சீ ஃபுட் சூப் ( டாம் யாம் தாலே) (தேவா)#1930

4. கிட்னி பீன்ஸ் மசாலா(ஹவ்வா அலியார்)#3874 (and/or)
மீன் வறுவல்(சரஸ்வதி திருஞானசம்பந்தம்)#4474

5. இறால் அவரை பொரியல்(ஜுலைஹா)#4031(and/or)
காலிபிளவர் ஃபரை(முத்துலஷ்மி) #2782

6.கிரிஸ்பி கார பிரெட்(ஃபாய்ஜா காதர்) #3618 (and/or)
உள்ளி பிரெட் (Garlic Bread)(நர்மதா) tamil/garlic_bread

7.அம்பலப்புழா பால் பாயாசம் (கவிசிவா) #5185 (and/or)
ஈச்சங்கொட்டை பனியாரம் (ரஸியா) #2960

அன்புடன்
ஹர்ஷினி :)

அன்புடன்
ஹர்ஷினி :)

ஹர்ஷினி, மனோகிரி அவர்களே,

நான் பிரண்ட் வீட்டில் தங்கியிருப்பதால் என்னால் எதையும் செய்து பார்க்க முடியவில்லை. உங்களுடைய மெனுவை பார்க்கும் போது எனக்கு ஆசையாக இருக்கிறது. நான் மெனுவை குறிப்பு எடுத்து வைத்து இருக்கிறேன் சந்தர்ப்பம் வரும் போது கண்டிப்பாக செய்து பார்த்து சொல்வேன்.

ஜானகி

சிறிது இடைவெளிக்கு பிறகு அறுசுவையில் வந்து பார்த்தால் நிறைய மாற்றங்கள் இப்போது தெரிகிறது. அறுசுவையின் சுவை இன்னும் பலமடங்கு கூடியிருக்கிறது. சுவை கூட்டிய தோழிகளுக்கு வாழ்த்துக்கள். நானும் இதில் கலந்து கொண்டு என்னால் முடிந்த அளவிற்கு சமைக்கின்றேன். லஞ்ச் வகை உணவுகளுக்கு இம்பார்ட்டென்ஸ் கொடுப்பதை விட டிபன் வகைகளுக்கு ஆரம்பத்தில் இம்பார்ட்டென்ஸ் கொடுத்தால் என் போன்ற வேலை பார்ப்பவர்களுக்கு ஈஸியாக இருக்கும். நான் சமைப்பது காலை, இரவு இரண்டு வேளைதான். இல்லையென்ரால் லீவு நாட்களில் தான் செய்ய வேண்டும். லீவு நாட்களில் வெளியில் சுற்றுவதால் சமைப்பது கிடையாது. எல்லாவற்றையும் செய்ய முடியாவிட்டாலும் என்னால் செய்ய முடிந்ததை கண்டிப்பாக செய்கின்றேன்

அன்பு தங்கை மலர் எப்படி இருக்கீங்க? இந்த கூட்டாஞ்சோறு சமையலைப் பற்றிய தங்கள் கருத்தினை மிகவும் தெளிவாக கூறியிருக்கின்றீர்கள் நன்றி. தற்போதைக்கு இந்த முயற்சியின் வாயிலாக, அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் இருக்கும் வல்லுனர்களின் குறிப்புகளை வெளிக்கொணர்வதில் மட்டும் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம், அதில் நிச்சயமாக நீங்கள் கூறியிருப்பதுப் போல் டிபன் வகைகளையும் அடுத்து வரும் உறுப்பினர்கள் அவர்களின் தேர்வில் சேர்த்துக் கொள்வார்கள் என்றே நம்புவோம். நன்றி

ரொம்ப நாளாவே நம்ம சகோதரிகள் சொல்லிக்கிட்டு இருக்காங்களே, சரி நாமளும் கலந்துக்கிட்டா என்னன்னு இந்த வாரக் குறிப்புகள்ல இருந்து ஒரு ரெண்டு மூணு சமைச்சுப் பார்ப்போம்னு முடிவு பண்ணினோம்(அறுசுவை அலுவலக டீம்). வீட்டிலதான் சமைச்சாகணும். இது புரட்டாசி மாசம், அம்மா அடுப்படிக்குள்ள அசைவத்தை விடமாட்டாங்க.(இப்ப தெரியுதா.. நான் ஏன் வாரத்துக்கு 5 நாள் ஹோட்டல்ல சாப்பிடுறேன்னு..) சமைச்சா எதாவது சைவமா சமைக்கணும். என்ன சமைக்கலாம்னு யோசனை.

லிஸ்ட்லருந்து முதல்ல மூணு குறிப்பு எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி, ஒரு குழம்பு, ஒரு ரசம், ஒரு கறின்னு முடிவு பண்ணினோம். செட்டிநாட்டு கொண்டைக்கடலை குழம்பு, புதினா ரசம், காலிப்ளவர் ப்ரை இந்த மூணுதான் நாங்க செலக்ட் பண்ணுனது. டீம் (அட்மின், பத்மா, பாப்பி, ரேவதி) தயாராச்சு. தேவையான பொருட்களையும் வாங்கியாச்சு..

அம்மா அசைவம் எதுவும் உள்ளே நுழையுதான்னு, ஏர்போர்ட் செக்யூரிட்டி மாதிரி food detector வச்சு செக் பண்ணிட்டு அப்புறம் அடுப்படி உள்ளே விட்டாங்க. நுழையும்போதே வாழ்த்து "நாலு பேரா சேர்ந்து செஞ்சா நல்லா வராது. யாராவது ஒருத்தர் செய்யுங்க.."

ஒரு வழியா எல்லாத்தையும் தயார் பண்ணிட்டுப் எதை முதல்ல சமைக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்தா, பாப்பி திடீர்னு.. "அய்யோ பாபு.. கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கணும்.. "
"அடடா.. முதல் நாள் இரவு போச்சே.. அடுத்த நாள் இரவு ஊற வைக்கலாமான்னு தெரியலையே.. குறிப்புல எதுவும் போட்டிருக்கான்னு பாரு.."
"விளையாடாதே.. இப்ப எப்படி பண்றது."
"சரி, விடு. கொண்டைக்கடலை குழம்பை நாளைக்கு வச்சுக்கலாம்."
பத்மா: "ரசமும் நாளைக்கே வச்சுக்கலாம் பாபு, இன்னைக்கு டைம் வேற ஆச்சு. கோபி ப்ரை மட்டும் பண்ணுவோம்"

இதுக்கப்புறம் நிறைய கூத்துக்கள் நடந்துச்சு. டைம் இருந்தா அப்புறம் அதை தனிப் பதிவா போடுறேன். ஒருவழியா முதல்நாள் காலிஃப்ளவர் ப்ரையும், அடுத்த நாள் கொண்டைக்கடலை குழம்பும், புதினா ரசமும் பண்ணிட்டோம். காலிஃப்ளவர் ஃப்ரையை கொஞ்சம் சொதப்பியாச்சு. இருந்தாலும் ஒரு மாதிரியான ருசியில ஃப்ரை வந்துடுச்சு. செட்டிநாட்டு கொண்டைக்கடலை குழம்பு சூப்பர். புதினா ரசம் சூப்பரோ சூப்பர். எல்லாத்திலயுமே எடுத்துக்கிற பொருளோட அளவை கொஞ்சம் மாத்திக்கிட்டோம்.

இப்ப படம் பாருங்க..

இதுதான் காலிப்ளவர் ப்ரை

இது கொண்டைக்கடலை குழம்பு

இது புதினா ரசம்

எப்படி நம்ம சமையல்..?

தவறுதலாக இரண்டு பதிவுகள் வந்தமையால் அதிலொன்று அழிக்கப்பட்டுள்ளது.

ஆஹா!!! பார்த்ததுமே வாயூறூதே!!!
முயற்சிக்கு வழ்த்துக்கள்!!

அப்படியே அட்மின் அண்ணவிற்கு சின்னதா ஒரு ஞாபகப்படுத்தல்:
ஸோன்பப்டிக்கு என்னாச்சு?
என்னோட ஸோன்பப்டி பற்றிய கனவெல்லாம் கனவாவே போயிடுமா?

"ஆ....!! ஸோன்பப்டியா அதென்னாது?" அப்டீல்லாம் கேட்கமாட்டீங்கதானே?
நன்றி,
மீண்டும் சந்திப்போம்

இந்த த்ரட்டத்தான் தேடிகிட்டு இருக்கேன்.நானும் காய்கறி கீர் செய்யனுன்னு நினைத்துகொண்டே இருக்கிறேன்.அந்தநல்ல நேரம் வரமாட்டேங்குது ரசம் குழம்பு பார்க்குறதுக்கு நல்லா இருக்கு.காலிப்ள்வர் மட்டும் கொஞ்சம் வேறமாதிரி வந்திருக்குது. பூப்பூவாக தனியாக இருக்க வேண்டும்.ஆசிரியருக்கே பாடமா?நாங்களும் செய்து பார்த்து படங்கள் அனுப்பி வைக்கிறோம்.இது நல்ல ஐடியா.படத்தை பார்த்தா செய்து பார்க்க நிச்சயம் தோணும்.

சூப்பரா சமச்சிருக்கீங்க. சூப்பரான படங்கள காட்டி நீங்க சமச்சத நிரூபிச்சிட்டீங்க. அதற்கு உங்களுடைய முன்னுரை அதவிட சூப்பர். (எத்தனை சூப்பர் போட்டுட்டேன் பாருங்க). எங்க வீட்டிலயும் புதினா ரசம் செம ஹிட்.
சகோதர சகோதரிகளே, நாமும் இதுபோல சமச்சு கூட்டாஞ்சோறு உறுப்பினர்களை ஊக்கப்படுத்துவோம் வாருங்கள்.

Hi All
I know you are all busy cooking.. I just need a weekly menu that i will hv to cook during the weekend trying to manage a full time job and life. If any one has any plans.. please post it on friday so that i will start my cooking onsaturday and sunday. I dont hvae any pref as to veg or non veg..

Really appriciate your help. Right now i am planning on my own.. sometimes flops... i need 1 veg/1 protein( chicken/fish/egg/lentil) combo for lunch and dinner.

Thanks
ila
"Hope is just the part of the equation"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்