சில்லி சிக்கன்

தேதி: September 28, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு)

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலும்பு நீக்கபட்ட சிக்கன் - அரை கிலோ (சிறு சிறு துண்டங்கள்)
ஊறவைக்க:
கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
உப்பு - தேவைகேற்ப
சிவப்பு கலர் - கால் தேக்கரண்டி
சோயா சாஸ் மற்றும் டொமேட்டோ சாஸ் - அரை தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
வதக்குவதற்கு:
நறுக்கிய வெங்காயம் - 2
சோயா சாஸ் மற்றும் டொமேட்டோ சாஸ் - ஒரு தேக்கரண்டி
சிக்கன் க்யூப் - ஒன்று
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி - 1/2
நறுக்கிய குடைமிளகாய் - ஒன்று


 

சிக்கனில் மேற்கண்ட பொருட்களை சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். எண்ணெயில் சிக்கனை முக்கால் அளவு வேகும் வரை பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
பிறகு சிறிது எண்ணெயை காய வைத்து வெங்காயத்தை வதக்கி குடைமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் சிக்கன் க்யூப் சேர்த்து வதக்கி சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி ஒரு தேக்கரண்டி கார்ன் ஃப்ளார் மாவை 4 தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறினால் கெட்டியாகத் தொடங்கும். பிறகு சாஸ்களை சேர்த்து தீயை அணைக்கவும்.


சிக்கன் க்யூபில் உப்பு இருப்பதாலும், சோயா சாஸிலும் உப்பு இருப்பதாலும் உப்பை வதக்கும் பொருளில் சேர்க்க தேவையில்லை. சிக்கனிலும் உப்பை கவனமாக சேர்க்கவும். சப்பாத்தி, பரோட்டா, நாண் ஆகியவற்றிற்கு ஏற்ற உணவு இது.

மேலும் சில குறிப்புகள்