கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

மூளை, இதயம், கண், என பல உறுப்புகளை வைத்து மனிதனை உண்டாக்கிய விஞ்ஞானி கடவுள்.

இதில் சில உறுப்புகள் இல்லாமல் குறையோடு பிறக்கும் மனிதர்கள் எல்லாம் விஞ்ஞானியின் தடுமாற்றத்தால் உருவானவர்களோ?!

// நீக்கப்படுகின்றது //

*** மேலே கொடுத்துள்ளபடி கடவுள் என்பதை பொதுப் பொருளாக வைத்து விவாதிக்க மட்டுமே இங்கு அனுமதி. தனி மதம், தனி நபர், தனிக் கடவுள் என்று எதைப் பற்றியும் கருத்து சொல்லவேண்டாம். அத்தகைய பதிவுகள் நீக்கப்படும்.

உலகம் சீராக இயங்க இறைவன் நிறைகளையும் குறைகளையும் பகிர்ந்து வழங்கியுள்ளான்.
சிலருக்கு வறுமையை கொண்டும் சிலரை ஊனம் மற்றும் நோய்களால் சோதிக்கிறான். சிலருக்கு செல்வத்தை கொடுத்து கணவன் அல்லது மனைவி, மக்களை கொண்டு சோதிப்பான்.சிலர் கட்டாந்தரயிலும் நிம்மதியுடன் தூங்குவார், சிலர் பஞ்சு மெத்தயிலும் தூக்கமின்றி அவதி படுவர்
எல்லோரிடமும் தேர் இருந்தால், தேரை தூக்க யார் வருவார்கள்.ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து வாழும்போது தான் உலகம் சீராக இயங்கும்.
குறை இருந்தால் தான், அதை கலைய முயர்சி யெடுப்பார். முன்னேருவார்.இல்லையேல் இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்ந்து சோம்பேரிகளாகி விடுவார்கள்.
குறையை நீக்கி வாழ்ந்தால் முன்னேறி வருகிறார்.அல்லது நீக்கமுடியாத ஊனமாக இருப்பின்,அதை பொருத்து வாழ்ந்தால், மறுமையில் இறைவனிடத்தில் மகத்தான நற்கூலி கிடைக்கும்.
நோன்பு நேரமாக இருப்பதால் ,ரொம்ப நேரம் எடுத்து கொள்ள முடிய வில்லை.ஆனால் நன்மயை ஏவும் விஷயத்தில் ,அருசுவை மூலம் பலருக்கும் சென்றடைய வாய்ப்புள்ளதால்,அருசுவைக்கு மீண்டும் எனது நன்றி!!!

இது என்னுடைய சொந்த வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.
எங்கள் வீட்டில் என் அம்மா,அப்பா,தம்பி எல்லோரும் பழனி பாத யாத்திரை செல்வார்கள். நான் மட்டும் சென்றது கிடையாது. காலேஜ் (பீஜி) முடித்து சென்னையில் வேலை பார்த்து வந்தேன். பின் திருமணத்திற்காக வரன் பார்த்து வருவதால் வேலையை விட சொன்னார்கள்.
அப்பொழுது நானும் என் அப்பாவும் மட்டும் பாதயாத்திரை சென்றோம்.
முதல் நாள் பரவாயில்லை நடந்து விட்டேன். மறுநாள் ஆரம்பித்து விட்டது கால் வலி அழுது அழுது பாதயாத்திரை வந்த அனைவரும் என்னை எல்லோரும் வேடிக்கை பார்க்க பார்க்க எனக்கு மேலும் ஒரே அழுகை....
நான் அப்பாவிடம் என்னை ஆட்டோவிலோ பஸ்ஸிலோ ஏத்தி விடுங்கள் என்று ஒரே ஆர்பாட்டம்.
பாதயாத்திரை நடந்தது , நல்ல வரன் அமைய வேண்டும் என்பதற்காக ( பாதயாத்திரை நடந்து அடுத்த மாதமே திருமணம் முடிந்து விட்டது)
அப்பொழுது 6 பேர் கொண்ட ஒரு குழு கையில் வேலுடனும்,தாரை தப்பட்டமாய் எங்களை க்ராஸ் பண்ண அப்பொழுதும் நான் அழுதுகொண்டே தான் வந்தேன்.
திடீரென்று அக்குழு என்னை பார்த்து நின்றது. அந்த வேலை என் கையில் கொடுத்து வா ... சாமி நாங்க இருக்கோம் என்றது.
அதன் பிறகு நடந்தவைகள் என் வாழ்வில் நடந்தஒரு அதிசயம். அழுத நான் வேலை கையில் பிடித்தபடி அனைவருக்கும் முன்னால் ஓடுகிறேன். 5 கீமீ 15 நிமிடத்தில் கடந்து விட்டேன். ஆச்சர்யம்!! என் அப்பா மிகவும் பின்னால் வர எனக்கு எதுவும் தெரியாது!! ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
என்னுடன் வந்த என் அத்தை, மாமா அவர்கள் எல்லாம் இந்த விசயம் தெரியும் முன்னே நடந்து முன்னால் சென்றுவிட்டார்கள்.
அதனால் அவர்கள் என்னை கூப்பிட்டார்கள் நான் நின்று விட்டேன். அவ்வளவுதான் ஒரு கீமீ தான் கோவில் மறுபடியும் அழுகை அப்பறம் விஞ்சில் தான் பயணம்.
இந்த நிகழ்ச்சியை என்ன வென்று சொல்வது. அன்றிலிருந்து எனக்கு முழுவதுமாக நம்பிக்கை வந்து விட்டது.

மொத்தம் எத்தனை கடவுள்கள் இருக்கின்றார்கள் என்று யாராவது சொல்லுங்களேன். ஒவ்வொரு மதத்து கடவுள் சொல்லும் விசயங்களும் வேறு வேறாக இருக்கிறது. அப்படியென்றால் அந்த மதத்தை சேர்ந்தவர்களை மட்டும்தான் அந்த கடவுள் படைத்தாரா? எல்லாரையும் படைத்தது கடவுள் என்றால் எல்லாருக்கும் ஒரே மதத்தை கொடுத்து, ஒரே கொள்கைகளை கொடுத்து இருக்க வேண்டியதுதானே? இதை யோசித்துப்பார்த்தால் மனிதர்கள்தானே கடவுளை படைத்தவர்களாக தெரிகின்றனர். இந்த உலகையே படைத்த கடவுளால் வித்தியாசங்களை நீக்கி எல்லாரும் ஒன்று என்பதை உருவாக்கும் சக்தி கிடையதா? இந்த சின்ன விசயத்தைக்கூடவா கடவுளால் செய்யமுடியாது? நானும் கடவுளை நம்புகின்றேன். ஆனால் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. யாராவது விளக்கம் சொன்னால் தெரிந்துகொள்வேன்.

எல்லா மதமும் ஒன்றையேதான் சொல்கிறது. மனிதன் ஒழுங்காக இருக்க வேண்டும். இதைச்செய், இதைச் செய்யாதே என்றால் ஒருவரும் கேட்க மாட்டார்கள். சாமி குத்தம் என்றால் கேட்பார்கள். எனவே மனிதனை நெறிப் படுத்தவே ஏற்பட்டதாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இளம் வயது மகனை எமனிடமிருந்து மீட்ட கதை எல்லா மதத்திலும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். (பாபு நான் கோடியிட்டுத்தான் காட்டி இருக்கிறேன்).

மனிதர்கள் தான் கடவுளைப்படைத்ததாக நான் நினைக்கிறேன். நான் சிறு வயதில் கேள்விப்படாத கடவுள்களின் பெயர்களை இன்று கேள்விப்படுகிறேன்.

ஆனால் கண்டிப்பாக நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியாது

அன்புடன்
ஜெயந்தி

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் முன், கடவுள் என்ற விஞ்ஞானிக்கு தடுமாற்றம் என்பதே கிடையாது என்பதை கடவுள் நம்பிக்கையில்லாத பாபு அண்ணனுக்கு முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கடவுளால் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களையும் ஏதாவது ஒரு வகையில் குறையோடுதான் கடவுள் படைத்திருக்கிறார். 100% குறையேயில்லாத மனிதன் இவ்வுலகில் இருக்க முடியாது.

உதாரணத்திற்கு, இவ்வுலகின் மாந்தர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்று வைத்துக்கொள்வோம். எல்லோருக்குமே பல ஏக்கரில் நிலபுலன்கள் இருக்கின்றன. ஏழைகளே இல்லை என்றிருக்கும் இந்நிலையில் அந்த நிலங்களை உழுவது முதல் அறுவடை செய்வது வரையிலான எல்லா வேலைகளையும் அவரவர்களே செய்யும் நிலைதான் ஏற்படும். இது சாத்தியமா? உலகம் இயங்குமா? அப்படி உலகம் சீராக இயங்கவேண்டுமென்றால், மனிதர்களிடையே வித்தியாசம் இருந்தால்தான் இயங்கமுடியும். அதானால்தான் ஒருவருக்கு காசு பணத்தை குறைத்து வழங்கியுள்ள கடவுள், இன்னொருவருக்கு உடல் உறுப்புகளில் குறைபாடுகளை வழங்கியுள்ளார்.

இப்படியே,
-சிலருக்கு அறிவை குறைத்தோ
-அழகை குறைத்தோ
-சந்தோஷத்தை குறைத்தோ
-அல்லது எல்லாவற்றையும் கொடுத்து கூடவே ஓயாத நோய் நொடிகளையும் கொடுத்தோ
-அல்லது எல்லாம் கிடைக்கப்பெற்ற இன்னொருவருக்கு பல பிரச்னைகளால் நிம்மதியை குறைத்தோதான் கடவுள் இந்த மானிட உலகை அமைத்திருக்கிறார். இதில் கடவுளின் குறைபாடு என்று கடவுளை குற்றம் சொல்வதற்கு இடமேயில்லை.

ஒருவர் இன்னொருவரை சார்ந்து வாழும்போதுதான் இவ்வுலகம் முறையான, சீரான அமைப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதற்காகத்தான் கடவுள் சில குறைபாடுகளை மனிதனுள் ஏற்படுத்தியுள்ளார்.

உதாரணத்திற்கு,
நோயாளிகளை வைத்துதான் டாக்டர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நிலக்கிழார்களைக்கொண்டுதான் ஏழ்மை என்ற குறைபாடுடைய உழவர்கள் வாழ்க்கை தள்ள முடிகிறது. கடவுள் அளவில்லாத அறிவுடையவராக இருப்பதால்தான் ஒவ்வொருவருக்கும் ஒன்றைக்கொடுத்து இன்னொன்றை எடுப்பது என்ற ஒரு அருமையான ஏற்பாட்டில் இவ்வுலகை சீராக இயங்கவைத்துக்கொண்டிருக்கிறார். தயவு செய்து சிந்தித்து பாருங்கள்!

(கடவுள் இருக்கிறார் என்பதை என்னுடைய அடுத்த பதிவில் கூறுகிறேன்.)

அன்பு சகோதரி ஷமி! கடவுள் இருக்கிறார் என்பதற்கு இவ்வுலகில் நிறைந்து காணப்படும் அடுக்கடுக்கான சான்றுகளில் சிலவற்றை அழகாக கூறியிருந்தீர்கள். இன்னும் தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்!

அண்ட சராசரங்களை எல்லாம் ஆட்டிபடைக்கிற ஒர் சக்தி இருக்கிறது.

நாம் காணுகிற இந்தப்பூமியின் அமைப்பு பருவ காலங்கள் உயிரினங்களின் அமைப்பு ஆகியற்றில் ஒரு அழகிய நியதியும் ஒலுங்கும் இருப்பதைக் கான்கிறோம்!

இதெல்லாம் இயற்கைய்யாக அமைந்தவை என்று எளிதாக சொல்லிவிட முடியாது.அப்படி இயற்க்கை என்றால் தொடர்ந்து இருக்கவேண்டியவை உயிரினங்களும் தாவரங்கலும் அழிந்து போவதேன்?.

எல்லாவற்றிக்கும் மேலாக மனிதன் என்ற அர்புதபடைப்பும் பிரியும் மனித உயிரை யாராலும் தடுக்க முடிந்ததா ?

சற்று சிந்தித்தோமானால் இது போல எத்தனையோ கேள்விகள் சுற்றி வளைக்கிற போது அண்ட சராசரங்களை எல்லாம் ஆளும் ஒர் சக்தி இருப்பது உண்மைய்யே.

இப்படி ஒரு வாய்பை தந்தமைக்கு பாபுஅண்ணாவிர்க்கு
எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் சில பதிவுகள்