எலுமிச்சங்காய் ஊறுகாய் - 2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முற்றிய எலுமிச்சங்காய் - 25
பெரிய காய்ந்தமிளகாய் - 50
உப்பு - ஒரு கப்
மஞ்சள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - 2 தேக்கரண்டி


 

வாணலியில் பெருங்காயம், வெந்தயம், மிளகாய் மூன்றையும் தனித்தனியாக போட்டு வறுத்து பொடி செய்யவும். உப்பைத் தூள் செய்யவும்.
எலுமிச்சங்காயை நறுக்கி துண்டுகளோடு மஞ்சள் பொடி, காரப் பொடியைக் கலந்து அதனுடன் உப்பையும் சேர்த்து மூடி வைக்கவும். கைப்படாமல் கிளறி வைக்கவும்.
5 பழங்கள் எடுத்து செய்தால் அதற்குத் தேவையான அளவு பொருள்களை குறைக்கவும்.
எலுமிச்சங்காய்களை நான்காகக் கீறி உள்ளே உப்பு, காரப்பொடி அடைத்து, மிகுந்த காரப்பொடியை மேலாகத் தூவி வைக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்