வெந்தய களி

தேதி: October 1, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெந்தயம் - 50கிராம்
புழுங்கல் அரிசி - ஒரு டம்ளர்
சுக்கு பொடி - 1/2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்
கருப்பட்டி - 200 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிது


 

அரிசியையும், வெந்தயத்தையும் தனித் தனியே ஊற வைக்கவும்.
ஊறவைத்த வெந்தயத்தை பொங்க அரைக்கவும்.
பின்பு அரிசியை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கருப்பட்டியை போட்டு அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய கருப்பட்டியை மீண்டும் அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
கொதித்ததும் அரைத்த மாவை சேர்த்து ஏலம், சுக்கு பொடி சேர்த்து கட்டி தட்டாமல் கிண்டவும்.
சிறிது நல்லெண்ணெய் சேர்த்து களி கையில் ஒட்டாமல் வரும் வரை கிண்டி அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று காலை உங்க வெந்தயக்களி பண்ணினேன். ரொம்ப நல்லா இருந்தது.

akka evlo nal nalla irukum

பீவி என்பவர் இப்ப அறுசுவை பார்ப்பவரான்னு தெரியல. ஒரு நிமிஷம் இருங்க, சீதாகிட்ட சொல்லி வந்து உங்க கேள்விக்கு பதில் சொல்ல சொல்றேன். அவங்களுக்கு ஒருவேளை தெரிஞ்சு இருக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா