மசாலா அவல்

தேதி: October 1, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் -- 1 கப்
மஞ்சள் பொடி -- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
பொட்டுக்கடலை -- 1/4 கப்
நிலக்கடலை -- 1/4 கப்
எண்ணைய் -- 2 ஸ்பூன்
உப்பு -- 1 சிட்டிகை


 

அவலை ஒரு நிமிடம் வாணலியில் போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
ஒரு ஸ்பூன் எண்ணையை ஊற்றி பச்சை மிளகாய் , கறிவேப்பிலையை போட்டு பொறியும் வரை வதக்கி பின் மஞ்சள்தூள் , அவல் போட்டு நன்றாக கிளறவும்.
நிலக்கடலை,பொரிகடலையை ரவை பக்குவத்திற்கு பொடித்துக் கொள்ளவும்.
இதை அதே வாணலியில் போட்டு 1 நிமிடம் வறுக்கவும்.
பின் உப்பு தூவி இறக்கலாம்.
மசாலா அவல் ரெடி.


தேவை எனில் சிவப்பு மிளகாய் பொடி சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

I tried this recipe today,it came out very well
Thanx Suba Mam

Live & Let Live

ராஜி மகேஷ்
Live & Let Live