முதலுதவி

எப்பவோ ஒரு முறை படிச்சேன்..இப்ப நியாபகம் வந்தது..அதை எழுதரேன்..ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க..ஏன்னா எனக்கு கொஞ்சம் மறந்து போன மாதிரி இருக்கு.....வீட்டில் எப்பவும் ஒரு 2 கப் அளவு ஐஸ் கட்டி ஃப்ரீசர்ல வெச்சிருக்கனும்.
என்னடா ரஹ்தக் களறியா எழுதி பயமுறுத்துராளேன்னு நெனச்சுடாதீங்க...சின்ன விஷயம் வாழ்க்கையையே மாத்திப் போட்டுடும் ஒரே நிமிஷத்தில்.....வீட்டில் ஆக்சிடன்ட் நடப்பது சகஜம்..சின்ன அளவில் மன்டை உடையரது ,ரத்தம் வர்ரதுன்னா ஐஸ் கட்டியில் ஒத்தடம் கொடுத்தா வீகம் குறைந்து ரத்தக் கசிவு நிக்கும்......விரல் துன்டாகும் விபத்துக்கள் அதிகம் நடக்கும்...அதநால் விரலை இழந்தவர்கள் நிறைய இருப்பாங்க.....சுன்டு விரல் போனா கூட அது ரொம்ப கஷ்டம்....
விரல் துண்டாகி கீழே அறுந்து விழுந்ததுன்னா அதை ஐஸ் கட்டியில் வெச்சுட்டு மருத்துவமனைக்குப் போவோம்...ஆனா சரியான முறையில் அதை கொன்டு போவாட்டி மருபடியும் நம்ம உடலில் அதைப் பொருத்துவது கஷ்டம்.
ஒரு கவரில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை நிரப்பி வேறு ஒரு கவரில் துண்டான விரலை வெச்சுட்டு மூடி ஐஸ் உள்ள கவைனுள் வெச்சுட்டு மருத்துவமனைக்கு ஓடனும்....அதாவது நேரடியா ஐஸ் விரலில் படக் கூடாது.....
இப்படி ஒரு முறை படிச்சேன்...இட்ஜில் ஏதாவது மாற்றம் உள்ளதான்னு நேரம் கிடைக்கும்பொழுது படிச்சுட்டு இருந்தால் எடிட் செய்கிரேன்....உங்களுக்கும் தெரிந்த முதலுதவிக் குறிப்புகள் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளவும்

குழந்தைகள் கீழே விழுந்து தலையில் அடி பட்டால், அலுத்தி தேய்த்தால் தான் ரத்தம் சீக்கிரம் வரும், அதனால் அப்படியே அழுத்தி பிடித்து கொல்லுங்கள். தேய்க்கும் போது அடி பட்ட இடத்தில் உள்ள தசை லேசாகி விடுவதால், தேய்க்காமல் அழுந்த பிடித்து கொள்வது நல்லது

mk

எப்டீருக்கீங்க தளிகா?

உங்களோட முதலுதவிக்குறிப்பு உண்மையிலேயே ஸூப்பர்!!!
உங்களுக்கு ஒரு பொண்ணு மாத்ரமா?
எங்க போட்டிருக்கீங்க பொண்ணோட போட்டோ லிங்க்?

நன்றி மீண்டும் சந்திப்போம்:-))

நேற்று பக்கத்து வீட்டு பையனுக்கு அறிவியல் கண்காட்ச்சிக்காக தயார் செய்து கொடுக்கும் போது சேகரித்த தகவல் இது, இதை அனைவருடனும் பகிர்ந்துக் கொள்ளனும்னு நினைச்சேன் அதான் இங்கே பதிவு செய்றேன். நிச்சயம் இது எல்லாருக்குமே உதவியா இருக்கும்னு நம்பறேன்.

எதிர்ப்பாரத விபத்துகள் ஏற்படும் போது செய்ய வேண்டிய முதல் உதவி சில யோசனைகள்:
எலும்பு முறிவு ஏற்பட்டால்:
1. கால் அல்லது கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் அடிபட்ட இடத்தில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருக்கவும், அப்படி இல்லை என்றால் நரம்பு மண்டலம் அல்லது முதுகு தண்டு பாதிப்படைந்திருக்கும் அப்போது தாமதிக்காமல் டாக்டரிடம் எடுத்து செல்லவது நல்லது.

2. டாக்டரிம் பாதிக்கப்பட்டவரை அழைத்து செல்லும் வரை முறிவு ஏற்பட்ட இடத்தை அசைக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

3. முறிவு ஏற்பட்டு எலும்பு வெளியில் தெரியும் அளவிற்கு இருந்தால் அந்த இடத்தை சுத்தமான வெள்ளை துணியால் மூடி டாக்டரிம் அழைத்து செல்லவும். நாமாகவே முறிந்த எலும்பை பழைய நிலைக்கோ அல்லது அந்த இடத்தில் நிவீ விடவோ கூடாது.

தீக்காயம் ஏற்பட்டால்:
1. தீகாயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலில் அதில் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சியாக வைத்திருங்கள்.

2. சாதாரண தீக்காயமாக இருந்தால் அதில் ஸ்ப்ரே அல்லது அதற்கான ஆயின்மென்ட் போடவும்.

3. பாதிக்கப்படவருக்கு தலை சுற்றல், தாங்கமுடியாத ஜுரம், நடுக்கத்தோடு உதறல், உடல் வியர்த்து வியர்த்து குளிர்ந்து போனால் உடனடியாக டாக்டரிடன் அழைத்து செல்லுங்கள்.

சரியான நேரத்தில் செய்யும் முதல் உதவி உயிரையே காக்கும்.

யாழு எனக்கு தெரிந்த வரை தீக்காயம் ஏற்பட்டால் அதில் உடனடியாக தண்ணீர் பட்டால் அப்போதைக்கு குளிர்ச்சி தருமே தவிர கொப்பலம் வந்துவிடும்பா!! எங்க பாட்டி எப்பவுமே தீக்காயம் பட்டா உடனே மண்மெண்ணெ தான் அதில் தடவுவாங்க, அதிக எரிச்சல் இருந்தாலும் தீக்காயம் பட்ட தழும்பு கூட பின்னர் இருக்காது. இது நானும் கண்ட உண்மை. வெந்நீர் கையில் ஊத்திட்டா கூட மண்ணென்ணெய் தான். எப்பவுமே வீட்டில் மண்ணென்ணெய் இருக்கும் படி பாட்டி பார்த்துக்கொள்ளுவாங்க.

அன்புடன்
பவித்ரா

வெந்நீர் மேலே ஊற்றிக்கொண்டால் முதலில் கைகளை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி அதில் ஐஸ் கட்டி வைத்தால் கொப்பளிக்காது.......

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஆமாம் பவி. எங்கள் பாட்டி கூட இதே தான் செய்வாங்க. பெரியவர்கள் கைவைத்தியம் எப்போதுமே தப்பாகாது.
ஒரு முறை அப்படி தான் அம்மாக்கு வெந்நீர் ஊத்தினப்ப செய்தாங்க. அய்யோ ஏற்கனவே எறியும் அதுல போய் மண்ணெண்ணெய வச்சா என்னாகுனுட்டு நான் வைக்கவே விடல அப்பறம் என்ன சமாதானம் படுத்திட்டு வச்சாங்க. முதலில் அம்மாக்கு ரொம்ப வலி இருந்துச்சு ஆனா பெரிசா எதுவும் கொப்பளம் எல்லாம் ஆகல. அப்பறம் silverex போட்டு சரி செய்தாச்சு.

வீட்டில் சமையல் செய்யும்போது , ஏதாவது சுட்டுகொண்டால்(தெரியாமல்) உடனே ஏதாவது fair &lovely cream மாதிரி தடவினா, எரியாது, வடுவும் வராது, ஏதாவது தெரியாமல் மார்பில் மோதி , மயக்கமடைந்தால் உடனே , நாம் என்ன செய்வோம், மார்பை அடிப்போம், குத்துவோம் அல்லவா? அதைவிட உடனே நினைவு திரும்ப ஒரு தீக்குச்சி, நெருப்பு ஒரு தடவை, மார்பில் வைத்தால் சுரிரென்று இருக்கும். நினைவு வந்தவுடனே தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துசெல்லுங்கள்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

சமைக்கும் போது குக்கரில் அல்லது சுடான பாத்திரத்தில் சூடு பட்டுக்கிட்டா உடனே தண்ணீரில் காட்டிவிட்டு வெண்ணெய் அல்லது நெய் தடவினால் எரிச்சலும் அடங்கும் காயமும் பெரிதாகாது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எல்லோருடைய முதலுதவி டிப்ஸ்ம் ரொம்ப உதவியா இருக்கும். கவிசிவா நீங்க சொன்னது எனக்கு அடிக்கடி உதவும்னு நினைக்கிறேன்.

மாரடைப்பிற்கான அறிகுறிகள்:
செஞ்சினை அப்படி கசக்கி பிழிவது போன்ற வலி, தோல்பட்டை, கழுத்து, முதுகை சுற்றிலும் கடுமையான வலி, கத்தியால் குத்துவது போன்ற மார்பில் வலி, படபப்பு, மூச்சுவிடச் சிரமப்படுதல், வாந்தி அல்லது கடுமையான அஜீரணம், உடல் தளர்ச்சி அடைதல், தலை சுற்றுதல், வியர்த்து விடுதல் இவை அனைத்து மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் நம்க்கு தோன்றும் அறிகுறிகள்.
முதல் உதவி:
உடனடியான ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து விட்டு முதல் உதவியை ஆரம்பிக்கவும். ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை விழுங்க செய்யவும். காற்றோட்டமான இடத்தில் அவரை படுக்க வைக்கவும். சுவாச மூச்சு போயிருந்தால் செயற்கை சுவாசம் தர முயற்சிக்கவும். மூக்கின் நாசி இரண்டையும் மூடிக் கொண்டு பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயை வைத்து காற்றை உள்ளே செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர் மூச்சு விடும் வரை இப்படி செய்யலாம்.

சமைக்கும் போது குக்கரில் அல்லது சுடான பாத்திரத்தில் சூடு பட்டுக்கிட்டா

இட்லி மாவு பிரிட்ஜில் இருந்தால் தடவலாம்.

பேஸ்ட் தடவலாம்.

தேங்காய் எண்ணெய் உடனே கேக்கும்

வெண்ணெய் தடவலாம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்