இலை அடை

தேதி: October 3, 2007

பரிமாறும் அளவு: 20 அடை

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப் (200 கிராம்)
வெல்லம் - 2 கப்
தேங்காய் - ஒரு மூடி
பலாச்சுளை - 15
ஏலக்காய் - 3
உப்பு - சிறிது
வாழை இலை - தேவைக்கு


 

பச்சரிசியை ஊற வைத்து உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். கரண்டியால் எடுத்து ஊற்றும் பதத்திற்கு கரைக்கவும்.
வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
வெல்லம் கரைந்ததும் அதை அரித்து எடுத்து, அதனுடன், தேங்காய்ப்பூ, சிறு துண்டுகளாக நறுக்கிய பலாச்சுளையையும் போட்டு கொதிக்க விடவும். ஏலக்காய் பொடியையும் சேர்க்கவும்.
வாழை இலையை சிறுதுண்டுகளாக நறுக்கவும்.
பச்சரிசி மாவை வாழை இலையில் எழுதுவது போல் தடவிக் கொள்ளவும்.
பூரணத்தை நடுவில் வைத்து இலையை இரண்டாக மடிக்கவும்.
இலையை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.


பலா சுளைக்கு பதில் முழு சிறுபயறு, தேங்காய்ப் பூ, ஏலம் சேர்த்தும் செய்யலாம். சிறுப் பயறை வேகவைத்து சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்