முட்டைகோஸ் பொரியல்

தேதி: October 3, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டைகோஸ் - 1 கப் ( 1/4கி)
பாசிப்பருப்பு - 1 குழிக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு ௧ ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 குழிக்கரண்டி


 

முதலில் முட்டைகொஸை பொடியாக நறுக்கி அதனுடன் பாசிபருப்பை போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து (1/4 டம்ளர்) குக்கரில் 2 விசில் வரும்வரை விட்டு அடுப்பை அணைத்து வைத்துக் கொள்ளவும்
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்
பிறகு அதில் கடுகு உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பொரியவிட்டு அதில் வெங்காயம் சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கி அதனுடன் வேகவைத்த கோஸை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
பிறகு 2 நிமிடம் கிளறி அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறி இறக்கவும்
சுவையான முட்டைகோஸ் பொரியல் தயார்


விருப்பபட்டவர்கள் முட்டை கோஸை வேகவைக்கும்போது அதனுடன் பாசிபருப்புக்கு பதிலாக கடலை பருப்பையும் பொடலாம். ஆனால் கடலைபருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைக்கவேண்டும்

மேலும் சில குறிப்புகள்