மட்டன் ஸ்ப்ரிங் ரோல்

தேதி: October 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறி -- 1/2 கிலோ (கொத்துக்கறியாக கொத்தி வாங்கிக் கொண்டால் நல்லது )
பெரிய வெங்காயம் -- 2 ( நறுக்கியது)
முட்டை -- 1
இஞ்சி,பூண்டு விழுது -- 1 டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் -- 150 கிராம்
மஞ்சள்பொடி -- 1/2 ஸ்பூன்
பச்சரிசிமாவு -- 200 கிராம்
மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்
சோயா சாஸ் -- 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் -- 1ஸ்பூன்
அஜினோமோட்டோ -- 2 சிட்டிகை
உப்பு -- தே.அ
எண்ணைய் -- தே.அ


 

கறியை உப்பு,மஞ்சள்தூளுடன் சேர்த்து வேகவிடவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி இஞ்சி,பூண்டு விழுது சேர்த்துவதக்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் கறி, சோயா சாஸ்,தக்காளி சாஸ் சேர்த்து சுண்ட வதக்கவேண்டும்.
சோளமாவு,பச்சரிசி மாவுடன் முட்டை, மிளகுத்தூள் ,அஜினோமோட்டோ சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் சிறு சிறு தோசைகளாக ஊற்றி 10 லிருந்து 15 தோசைகள் ஊற்றிக்கொள்ளவும்.
ஒவ்வொரு தோசைக்குள்ளும் வதக்கிய காய்கறி கலவைகளை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து ரோல் செய்து இரண்டு ஓரங்களையும் மாவு கொண்டு ஒட்டவும்
இந்த ரோல்களை எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து உண்ணலாம்.
மட்டம் ஸ்ப்ரிங் ரோல் ரெடி


மேலும் சில குறிப்புகள்