தந்தூரி சிக்கன்

தேதி: October 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி -- 1/2 கிலோ(சுத்தம் செய்து கொள்ளவும்)
கிராம்பு -- 6
இஞ்சி -- 1 அங்குலம்.
தனியா -- 1 டீஸ்பூன்
கருஞ்சீரகம் -- 1/2 டீஸ்பூன்
வினிகர் -- 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு -- 2 டேபிள்ஸ்பூன்
தயிர் -- 1 கப்
வெள்ளை மிளகுத்தூள் -- 1/2 டீஸ்பூன்
சிவப்பு கலர் பவுடர் -- 1 சிட்டிகை
முந்திரி பருப்பு -- 10 என்னம் (வறுத்தது)
கொத்தமல்லி தழை -- 1/4 கப் (நறுக்கியது)


 

கிராம்பு, இஞ்சி, தனியா, கருஞ்சீரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
உப்பு,வினிகர்,எலுமிச்சை சாறு, அரைத்த மசாலாவையும் சேர்த்து இவற்றைக் கோழி துண்டுகள் மீது நன்கு தடவவும்.
இதனுடன் தயிர்,வெள்ளை மிளகுத்தூள், சிவப்பு கலரையும் கலந்து கோழி துண்டுகளை 3 மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் தந்தூரி அடுப்பு அல்லது ஓவனில் 15 நிமிடம் வைத்து சிவந்தபின் எடுக்கவும்.
வறுத்த முந்திரி, நறுக்கிய மல்லிதழைகளை தூவி அலங்கரித்து பறிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்