அழகிய தஞ்சாவூர் பாட் பெயிண்டிங் செய்வது எப்படி?

தேதி: October 8, 2007

5
Average: 4.8 (9 votes)

அழகிய தஞ்சாவூர் பாட் பெயிண்டிங் செய்வது எப்படி? இதனை உங்களுக்கு விளக்குகின்றார், அலங்காரப் பொருட்கள் செய்வதில் வல்லவரான செல்வி. சிந்து அவர்கள்.

 

பானை
ஒய்ட் பென்சில்
அரபிக் கம்
சாக் பவுடர்
ஃபேப்ரிக் கலர் - கருப்பு, காப்பர்
பீட்ஸ் - வெள்ளை மற்றும் கோல்டன் கலர்
ஸ்பாஞ்சு
பெவிக்கால்
பாலிதின் பேப்பர்
பிரஷ்
கோல்டன் பேப்பர்

 

தேவையானப் பொருட்களைத் தயாராய் எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ள மாதிரியான பானைதான் பெயிண்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும்.
முதலில் பானையை சுத்தமான துணியை வைத்து துடைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதில் கருப்பு நிற பெயிண்ட் அடித்து 2 மணிநேரம் காயவைக்கவும்
சாக் பவுடருடன் அரபிக் கம் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
பானையின் மீது அடிக்கப்பட்ட பெயிண்ட் காய்ந்ததும் வெள்ளை நிற பென்சிலை வைத்து விரும்பிய டிசைனில் வரைந்து கொள்ளவும். கரைத்த பேஸ்டை ஒரு பிரஷ்ஷால் எடுத்து வரைந்து இருக்கும் டிசைனில் மேலே அப்படியே வைக்கவும். பெயிண்ட் பண்ணக்கூடாது. பானை முழுவதும் உள்ள டிசைனில் இந்த பேஸ்டை வைத்து 2 மணிநேரம் காயவைக்கவும். இதன் பெயர் உப்பல் வேலைப்பாடு.
பிறகு கலந்து வைத்த பேஸ்டுடன் மேலும் சிறிது சாக் பவுடர் சேர்த்து சற்று கெட்டியாக கலந்து கொள்ளவும். ஒரு பாலித்தின் பேப்பரில் கோன் போல செய்துக் கொண்டு, இந்த கெட்டியான கலவையை கோனில் வைத்து கோனின் பின்புறம் மடக்கி பேஸ்ட் வெளியே வராமல் இருக்க பின் பண்ணிக் கொள்ளவும். உப்பல் வேலைப்பாட்டிற்கு மேல் கோனை வைத்து படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் டிசைனை வரைந்து கொள்ளவும்.
பிறகு அதில் கோல்டன் பேப்பரை வைத்து அழுத்தி, அந்த டிசைன் பேப்பரில் பதிந்த பிறகு எடுத்து அதே டிசைன் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். இதே போல் பானை முழுவதும் இருக்கும் டிசைன் அளவிற்கு எத்தனை பேப்பர் தேவைப்படுமோ அத்தனை பேப்பர் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டி எடுத்த பேப்பரின் பின்புறம் கம் தடவி டிசைனில் ஒட்டவும். ஒட்டி கையை வைத்து அழுத்தாமல் ஒரு துணியை வைத்து நன்கு அழுத்தி விடவும்.
இதே போல் பானையில் கீழே வரைந்து இருக்கும் டிசைனில் ஒட்டவும். முழுப் பானையிலும் உள்ள சாக் பவுடர் கோட்டிங் மீது பேப்பரை வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
ஒரு தட்டில் அல்லது ப்ளேட்டில் கருப்பு கலர் மற்றும் காப்பர் கலர் இரண்டையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும். ஸ்பாஞ்சால் முதலில் கருப்பு கலரை தொட்டு பானையின் மேல் புறத்தில் ஒற்றி எடுக்கவும். அதன் பிறகு காப்பர் கலரை தொட்டுக் கொண்டு அதன் மேலே ஒற்றி எடுக்கவும். கருப்பு கலர் காய்வதற்கு முன்பே காப்பர் கலரை வைக்கவும்.
இதே போல் பானை முழுவதும் வைக்கவும். கோல்டன் பேப்பரில் படாமல் ஸ்பாஞ்சை ஒற்றி எடுக்கவும். அதன் பிறகு டிசைனின் ஓரத்தில் கருப்பு பெயிண்டால் பார்டர் வரையவும்.
இப்படி செய்வதால் பேப்பரின் ஒழுங்கற்ற ஓரம் தெரியாமல், அழகாக இருக்கும். எங்கெல்லாம் பேப்பர் ஒட்டியுள்ளதோ அதன் ஓரம் முழுவதும் கறுப்பு வண்ணம் கொண்டு தீட்டவும்.
பார்டர் வரைந்த பிறகு அதன் ஓரங்களில் பெவிக்கால் துளியளவு வைத்து அதில் மணிகள் ஒட்டவும்.
இதே போல் பீட்ஸ் மற்றும் கற்களை உபயோகித்து, விருப்பத்திற்கு ஏற்றாற் போல் பானையை அலங்கரிக்கவும்.
அழகிய தஞ்சாவூர் ஓவியப் பானை தயார். இதனை அப்படியே அலங்காரப் பொருளாக வைக்கலாம். இதனுள் காகித மலர்களையும் சொருகி வைக்கலாம். இந்த அழகிய தஞ்சாவூர் பாட் பெயிண்டிங்கை செய்து காட்டியவர், செல்வி. சிந்து அவர்கள். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹை இதை செய்ததும் சென்பகமா?அழகா இருக்கே

தளிகா:-)

சிலோன் சிந்துவா?
எப்படி நம்ம ஆளுங்களுக்குள்ள இருக்கும் திறனை வெளிக்கொண்டு வந்த அண்ணணுக்கு ஒரு ஓ!!
திறனை கொண்டு புதிது புதிதாக தோழிகளுக்கு விளக்கம் கொடுக்கும் தோழிகளுக்கும் நன்றி!!

ஓஹ் சிந்துவா....இதில் பீட்ஸ் என்ம்னவா இருக்கும்னு யோசிச்சேன்...அப்ரம் தான் beads புரிஞ்சது

தளிகா:-)

இதனை செய்து காட்டியவர் நாகையைச் சேர்ந்த சிந்து என்பவர். அவரது படத்தை இணையத்தில் வெளியிடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை. எனவே செய்தவர் படம் இடம்பெறவில்லை.

பாபுத்தம்பி, பேசாம மாம்பலத்தில (உங்க அலுவலகத்திலே) ஒரு கை வேலை வகுப்பு ஆரம்பிச்சுடுங்க.
சிந்துவின் பாட் பெயின்டிங் அருமை. இந்த கை வேலைகள் தனி பகுதியில் சேர்ந்து விடும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
ஜெயந்தி

அக்கா, இதுபோன்ற கைவினைப்பொருட்கள் செய்வது மொத்தத்தையும் இணையத்தில் (அறுசுவையில்) கொண்டு வரப் போறோம். தி.நகர்ல வகுப்புகள் எடுத்தா கொஞ்ச பேரைத்தான் ரீச் ஆகும். இது உலகத்துக்கே போகுதுல்ல :-)

நீங்க குறிப்பிட்ட மாதிரி இது தனிப்பகுதியில சேர்ந்திடும். "நீங்களும் செய்யலாம்" னு ஒரு செக்சன் கொண்டு வந்திருக்கேன். முறையான லிங்க் இன்னும் கொடுக்கலை. மகளிர் சிறப்பு பக்கம் ரெடி பண்ணி அதுல கொடுத்துடுறேன்.

இந்த உலகத்தில் பல பாகங்களில் வசிக்கும் அனைத்து தமிழ் மகளிரையும் அறுசுவை ஒன்றாய் இணைப்பதை பார்க்கும்ப்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இதுமாதிரியான புதிய பகுதிகள் எங்களுக்கு ரொம்பவே யூஸ்புல்லாக இருக்கும். அறுசுவை தமிழ் இணையத்தளங்களில் நம்பர் 1 ஆக மாறும் காலம் சீக்கிரமே வரும். உங்களின் முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Hai சென்பகம்

ரொம்ப சிம்பில்லா அழகா இருக்கு.............வாழ்த்துக்கள்

leemacyril

leemacyril

ஹாய் சிந்து உங்கள் தஞ்சாவூர் பாட் பெய்ண்டிங் ரொம்ப நன்றாக இருக்கிறது. சிந்துக்கு எனது வாழ்த்துக்கள். அறுசுவையில் சமையல் மட்டும் கற்று ருசித்து கொண்டிருந்த எங்களுக்கு இது போன்ற கைவினைப்பொருட்களை செய்து கற்றுக் கொள்ள வாய்ப்பு அளித்த பாபு அண்ணாவிற்கு மிக்க நன்றி. அறுசுவை மேன்மேலும் வளர்வதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.

Amazing but its true. what a miracle work is this. I expect more from urside. Its beautiful keep it up. I want to share some ideas. can i?

அன்பு தங்கை சிந்து,
அருமையான வேலைப்பாடுகள். படிப்படியான படங்களுடன் கூடிய குறிப்புகள் பார்க்கும் போதே எவருக்கும் செய்ய தூண்டும்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உங்களுடைய கை வேலைபாடு ரொம்ப அழகாக இருக்கிறது. இப்பவே செய்து பார்க்கனும் போல் ஆவலை ஏற்படுத்துகிறது. நன்றி எங்களுக்காக இவ்வுளவு அழகாக செய்து காட்டியதற்கு. அட்மின் எங்கெயோ போய்விட்டீர்கள், உங்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து கோயில் கட்ட போகிறார்கள்.

ஜானகி

மண்பானையைப் பிடித்து பொன்பானையாக்கிய சிந்துவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

சிந்து உங்க கைக்கு வைர வளையலே போடலாம்.எவ்வளவு அழகா செய்திருக்கீங்க.really superb.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Kai kulanthai vachundu Arita romba kashtama iruku Aka. Easyana painting onu solikodunga pls

muthalil vanakkam tamileelam.en arivu pasikku kidaitha inaiya thalam enrae sollalam.inruthan muthalil parthen .migavum kavarnthu vittathu .en tamil makkalidam meendum kalanthu vitta mattatra magilchi kondullen.vaalga en inam ,vaalga en eelam...........ippadiku eela magal chandravathni

Hai Aarusuvai,

hai sindhu

Thanjur pot painting super. yannamathiri pudusa kathukiravaingalukku ethu rommba usefulla erukkum. thanks.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

வெகு அழகாக இருக்கிறது சிந்து. இன்னும் அதிகமாக உங்கள் குறிப்புகளை எதிர்பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்