தேதி: March 31, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிடாரங்காய் - ஒன்று
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயப்பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கிடாரங்காயை போட்டு 3 மணி நேரம் மூடிவைக்கவும்.
பிறகு அதை எடுத்து நன்கு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கிடாரங்காயுடன் உப்பு, வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுப்பில் வாணலியியை வைத்து எண்ணெயை ஊற்றி காயவைத்து அதில் கடுகு, பெருங்காயம் இவற்றை வறுத்து கிடாரங்காயுடன் போடவும்.
கடாரங்காய் வெந்தவுடன் மிளகாய்ப் பொடி கலந்து கிளறி இறக்கவும்.
கடாரங்காய் உப்பு போட்டு உலர்த்தி எலுமிச்சங்காயை செய்வது போல் ஊறுகாய் செய்யலாம்.