குழந்தையின் கால் நகம்

இன்னக்கி எனக்கு பேட் டே....என் பொன்னு காலையில் மிக்சி ஜாரை என்கிட்ட இருந்து பிடுங்க அது காலில் விழுந்து விட்டது...ஜார் நல்ல வெயிட் இருந்ததால் விழுந்த வேகத்தில் கால் பெருவிரலின் நகம் பிளந்து ரத்தம் நிறைய போனது....நகமும் பிளந்து சதையும் நல்ல அடி...மேலிருந்து கீழாக நகம் இர்ண்டாக நிற்கிரது..எமெர்ஜென்சிக்கு போனதும் நகம் 6 மாசத்தில் வளர்ந்துவிடும் என்றும் இன்ஃபெக்ஷன் நாகாமல் இருக்க மருந்தும்,ஆன்டிபயாடிக்கும் டிடி வேக்சினும் எடுத்தோம்.....அப்படி இன்று முழுவதும் ஒரே கவலை..அவளுக்கு வலி இருக்கு இருந்தாலும் நொன்டி நொன்டி ஓடரா....பிடிச்சு வெக்க முடீல..ட்ரெசிங் எல்லாத்தயும் பிச்சு விட்டாச்சு..இப்ப நகத்தை நோன்டி வெளிய எடுக்க ட்ரை பன்ரா.....இன்னக்கி ஒரு நாளில் நான் பட்ட டென்ஷனுக்கு அளவே இல்லை..தோழிகள் பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும்..ஒரு நிமிஷம் பார்க்கத் தவரினால் ரொம்ப நாளைக்கு குற்ற உனர்வில் துடிப்போம்...வெயிட்டான ஷார்பான பொருட்களை குழந்தைகள் கைய்யில் ஒரு போதும் கொடுக்கவும் வேன்டாம்,,கதவை அடைத்து விளையாடும் விளையாட்டியும் தவிர்க்கவும்..வேக்சின் எடுத்ததில் காச்சலும் கூட இந்த வலியும்...பாக்யத்துக்கு அவ அழ மாட்டா அதனால நானும் அவ்வளவு கவல தெரியாம இருக்கேன்.....இது போல் யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால் மீன்டும் நகம் வளர்ந்து விடுமா?அதுவரை வலிக்குமா?எவ்வளவு நாளில் சரியாகி விடும் என்று சொல்லவும்....குழந்தைகளை பத்திரமாஇ பார்த்துக் கொள்ளவும்.

அன்புல்ல தலிகா
ப்யபடாதிஙக சரி ஆகிடும் dressing பிய்த்துவிட்டல் பார்த்து
தன்னிர் படாமல் பார்த்துகொஙக.
சின்ன பாப்பா தானெ வலர வலர நகம் வந்துவிடும்.

தளிகா, சிறு குழந்தைகளுக்கு சிறிய காயம் பட்டாலும் அப்படித்தான் ரத்தம் அதிகமாக வரும். அதற்கு பயப்பட வேண்டாம். ஒருமுறை என் பெண்ணின் டாக்டர் அவ்வாறு சொன்னார். அவர்களுக்கு வலி கூட தெரியாதாம். நகமும் திரும்ப வளர்ந்து விடும். அதனால் நீங்க கவலைப்படாதீங்க. உங்க பொண்ணுக்கு சீக்கிரம் சரியாகிவிடும்.

தளிகா,கவலைப்படாதீங்க...ரீமாவுக்கு சீக்கிரம் சரியாயிடும். ஆனா திரும்ப அந்தக் காலில் எதுவும் படாம கவனமா பார்த்துக்கோங்க...இது ரொம்ப முக்கியம்

நலமாக இருக்கீங்களா,பிள்ளைக்கு அடி பட்டதில் கவலையாக இருக்கிறீர்கள்,நாம் என்ன தான் கவனமாக இருந்தாலும் சில சமையம் இப்படி தான் ஆகிவிடுகிறது,எனது மகளுக்கு இப்படி ஆனது கதவு இடுக்கில் அவள் கை வைத்திருந்த போது என் மகன் கதவை சாத்திவிட்டான் ஒரு நகம் முழுதும் போய்விட்டது,பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நகம் வளர்ந்து விட்டது நீங்கள் கவலை படாதீர்கள் எனக்கும் இந்த அனுபவம் உண்டு (கிரைண்டரில் மாட்டிக்கொண்டது) பிறகு வளர்ந்துவிட்டது கவலைப்படவேண்டாம்,கூடிய விரைவில் சரியாகிவிடும் தூசி படியாமல் பார்த்துக்கொள்ளுங்கல்,டாக்டர்அறிவுரை படி நடந்துக்கொள்ளுங்கள்!

குழந்தைகளுக்கு நகம் போனால் மீண்டும் வளர்ந்து விடும். எனக்கு இப்படி ஒரு முறை சிறு வயதில் சுண்டு விரல் நசுங்கி நகம் முழுதும் போய் மீண்டும் புதிதாக வளர்ந்தது. எனவே கவலைப் படாதீர்கள். என்னதான் நாம் கண்ணுக்குக் கண்ணாக பார்த்துக் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் இது போல் நடக்கும்போது தாங்கிக் கொள்ள முடியாது. என் வீட்டிலும் நான் தான் அழுவேன். அவன் வலிச்சாலும் அழ மாட்டான். ரீமாவின் கால் நகத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். டிரஸ்ஸிங் இல்லாதிருப்பதால் சீக்கிரம் காயம் ஆறவும் வாய்ப்பிருக்கிறது. ரீமாவை வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வைக்க முயற்சி செய்யுங்கள். அப்போது இதனை மறந்து விடுவாள். செய்யாதே என்று சொன்னால்தான் அவர்களுக்கு செய்யத் தோன்றும். இதனால் குற்ற உணர்ச்சி வேண்டாம். இது போல் நடக்கும் என்று தெரிந்தா செய்கிறோம். வால்தனம் அதிகமாக இருந்தால் அதனை அப்படியே மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த பழக்குங்கள். நான் இப்படி முயற்சி செய்து கொஞ்சம் இப்போது பரவாயில்லை. பெயிண்டிங், ரைம்ஸ், பாடம், ஊஞ்சல் விளையாடுவது, கவுண்டிங் செய்வது என்று சின்ன சின்ன விஷயங்களாக கற்றுக் கொடுக்க ஆரம்பியுங்கள். அவளுக்கு விளையாட்டுத் துணையாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாதது இல்லை. இருந்தாலும் இந்த மாதிரி சமயங்களில் எல்லா அம்மாக்களுமே ஒரே மாதிரிதான் இருக்கிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.(உங்கள் மீது இறைவனின் அமைதி உண்டாவதாக)

கவலை வேணடாம் நகம் கடைசி வரை வளரக் கூடியது..தண்ணீர் படாமல் பார்த்து கொள்ளுங்கள்..மீறி பட்டு விட்டால் அந்த இடத்தை சுடு தண்ணீரால் கழுவி விட்டு காட்டன் துணியால் ஒற்றி ,,ஈரத்தை காயவைத்திடுங்கள்.சீக்கிரமாக வளர்ந்திடும்.தேவா மேடம் சொன்னது போல் அவள் கவனத்தை வேறு விதத்தில் திரும்புமாறு செய்யுங்கள்..

mub

கவலைப்படாதீர்கள் தளிகா, ரீமாவிற்கு சீக்கிரம் குணமாகிவிடும். சின்ன குழந்தைகளுக்கு சீக்கிரம் குணமாகிவிடும். நீங்கள் மனசை போட்டு கஷ்டப்படுத்தி கொள்ளாதீர்கள் குழந்தைகள் என்றால் அப்ப்டி தான் இருப்பார்க்ள்.

ஜானகி

அப்பா இதுக்கு தான் அறுசுவைக்கு வரனும்கரது...எவ்வாளவு ஆலோசனை...நிஜத்தில் எனக்கு இருந்த கவலை எல்லாம் பறந்து போச்சு இதை படிச்சதும்..அப்ப இது சகஜமா நடக்கர விஷயம் போல இருக்கு.
இப்ப தூங்கரா அதான் வந்தேன்...நல்ல தூங்கினா ஆன வலி இருக்கு போல...ஒளரிட்டே ராத்திரி எல்லாம் காலை அதுக்கு இதுக்கும் ஆட்டிட்டே "ரீமா கால் பாவம்:"னெல்லாம் சொல்லிட்டு இருந்தா..எல்லாம் தூக்கத்தில்.
நகம் சைடா பிஞ்சு போகாம மேலயிருந்து கீழ வரை சதையும் சேர்த்து பிஞ்சதால் தான் பயம் கூடிடுச்சு..வரும்பொது டிஃபார்ம்டா வருமான்னு பயம்.
நேத்தெக்கெல்லாம் தண்ணீர் பட விடல...எப்படியோ வைப்ஸ் வெச்சு நாளை ஓட்டிட்டேன்...சும்மா நோன்டரதால நான் ட்ரெஸ்ஸிங் பன்னி விட்டேன்..பட்டகாலயே படும்கரது சரிதான் போல...நேத்துல இருந்து திரும்ப திரும்ப அதுல தான் படுது விது.
அதும் எப்பவும் இருக்கரதை விட 30%குறும்பு கூடியிருக்கு நேத்துல இருந்து...என்ன டைவேர்ட் பன்னாலும் என்னை தள்ளி விட்டுட்டு அதுமேலயும் இதுமேலயும் ஏறி நின்னு குதிக்கரது தான் ஹாபி.நீங்க சொன்ன மாதிரி நமக்கு தான் டென்ஷனும் அழுகையும்..அவங்க சிரிச்சுட்டு தான் இருக்காங்க.
எங்க வீட்டு கார்பெட் ஹைதெர் காலத்துல போட்டதுன்னு நெனக்கிரேன்.....அதனால இந்த வாரம் அதை மாத்தி லினோலின் ஷீட் போடலாம்னு இருக்கோம்...அதுல தண்ணி பட்ட வழுக்குமா?நீங்கல்லாம் சொல்ரதை கேட்டா இது ஒன்னும் இல்ல போலிருக்கு....விரலே நசுங்கின கதை எல்லாம் சொல்ரீங்க...
தேவா சொன்னதை எப்பவும் யோசிப்பேன்.....இஷ்டத்துக்கு கதை புக் வாங்கி இப்ப நான் தான் தனியா உக்காந்து ஒளரிட்டிருப்பேன்..அவ அதுக்குள்ள இடத்தை காலி பன்னி எங்கயாவது ஓடியிருப்ப.:-D...இப்பத்திக்கி ஒரே இன்டெரெஸ்ட் ரைம்ஸ் மடும் தான்..அப்ரம் நான் கொஞ்சம் மிமிக்ரி காமிச்சா ஒரே ஹேப்பி...அதத் தவிற எந்த இன்டெரெஸ்டும் இல்ல....வேற குழந்தைகளுடன் ஓடி விளையாட நல்ல புடிக்கும்...இப்ப என் நாத்தனார் குழந்தைகள்கு ஹாலிடே ..அதனால கொஞ்ச நாளைக்கு கவலை இல்ல...அவங்களை வர சொல்லிட்டா எனக்கு ப்ரச்சனை இல்ல..விளையாடுவா.
மனசுக்கு ரொம்ப நிம்மதி உங்க ஆலோசனைகளை படிச்சப்ப...கன்டிப்பா நீங்க சொன்ன படி கொன்ச நாளைக்கு கேர்ஃபுல்லா பத்துக்கரேன்.இனி நேரம் கிடைக்கும்போது குழந்தை தூங்கும்போது வரேன்.

தளிகா:-)

ருபி,

கவலப்படாதீங்க, சின்ன குழந்ததான, நகம் சீக்கிரம் வளந்துரும். கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க. தண்ணீ, தூசு, எதும் படாத மாதிரி பாத்துக்கோங்க.
மத்த குழந்தைங்க கூட விளையாடும் போதும் உங்க பார்வைல இருக்குறா மாதிரி வச்சுக்கோங்க.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

தளிகா இப்போதான் இதை பார்த்தேன்.ரீமாவை நினைத்தால் கஷ்டமாக இருக்கு.அவர்களுக்கு எதாவது என்றால் நமக்குத்தான் வருத்தமாக இருக்கு.ஆனால் சின்னவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.நகம் மீண்டும் வளர்ந்துவிடும்.எனக்கு சின்னதிலும் இப்போவும்கூட நகம் முழுவதும்போய் மீண்டும் வளர்ந்திருக்கிறது.கவலைபடாதீங்க.சமையல் வேலைகளை கொஞ்சம் குறைத்து பொண்ணுகூட அதிக நேரம் இருக்க பாருங்க.ரீமா குட்டிக்கு விரைவில் சரியாகிவிடும்.

மேலும் சில பதிவுகள்