நலம் தரும் நல்லெண்ணை :-)

அன்பான தோழிகளே!!!
வீட்ல உங்களுக்கோ அல்லது உங்க குழந்தைகளுக்கோ சிறிய காயம்(அடிபட்டு/உரசி/கத்தி வெட்டுப்பட்டு/நசுங்கி)ஏற்பட்டால் பதற்றப்படாமல் உடனேயே அந்தக்காயத்தில் சிறிது நல்லெண்ணை தடவுங்கள்.இரண்டு மூன்று நாட்களிற்கு இதனைத்தொடருங்கள்.
தண்ணி பட்டாலும் கவலையில்லை, மீண்டும் துடைத்துவிட்டு நல்லெண்ணை போடலாம்.
கண்டிப்பாகக்குணமாகும். அனுபவத்தில் கண்ட உண்மை!!!

நன்றி, மீண்டும் சந்திப்போம் :-))

பல் பிடுங்கி ரத்தம் வருவது நின்றதும் சிறிது நல்லெண்ணையை வாயில் ஊற்றி நாக்கு நுனியால் பிடுங்கிய இடத்தில் தடவினால் சீக்கிரம் ஆறிவிடும்.
அன்புடன்
ஜெயந்தி

சும்மாவே நல்லெண்ணெயை வாயில் இட்டு சிறிது நேரம் வைத்திருந்து கொப்பளித்தால் குடலுக்கு, வயிற்றுக்கு, வாய்க்கும் நல்லது என்கிறார்கள்.
மேலும் நல்லெண்ணெய் உடல் சூட்டை தணிக்கும், ஆகையால் தான் மூன்று நாட்கள் முடிந்து நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கச் சொல்வார்கள் எங்கள் பாட்டி. அதை அப்படியே தேய்க்காமல் சிறிது சூடு செய்து, வெந்தயம்(குளிர்ச்சி), காய்ந்த மிளகாய் ஒன்று(எதற்கு என்று தெரிய வில்லை), மிளகு எல்லாம்போட்டு காய்ச்சி பின் தேய்க்கலாம். குறைந்தது அரைமணி நேரமாவது எண்ணெய் தலையில் ஊற வேண்டும். நாமே தேய்பதற்கு பதில் அம்மா உட்கார வைத்து தேய்த்து விட்டால் அப்படியே தூங்கி விடலாம். (தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இம்முறையை ட்ரை பண்ணலாம் :P)

ந.எ (எத்தன வாட்டி தான் முழுசா டைப்பறது?) உடம்புக்கு மினுமினுப்பை கொடுக்கும். இன்னும் நிறைய இருக்கு.. மெதுவா சொல்றேன்.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

NALLA ENNAI VAAI PUNNIRKUM ROMBA NALLATHU. ENNAYAI
SIRUTHU VAAYIL OOTRI KOPPALIKAVUM

நானும் படித்து இருக்கிறேன் நல்லெண்ணை அல்லது சமையல் எண்ணையை வாயில் வைத்து வெரும் வயிற்றில் கொப்பளித்தால் வாய்புண் ணுன்னு இல்லை ஏப்பேர்பட்ட நோயிக்கும் குட் பை சொல்லலாம்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்