மனதைக் கவர்ந்த தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்.

அனைவருக்கும் வணக்கம்.,

இந்த பகுதியில் நமக்குப் பிடித்த பாடல் வரிகளை பகிர்ந்துக்கொள்வோம், வாருங்கள்.

"பூங்காற்று அறியாமல் பூவை ரசிக்க வேண்டும். பூ கூட அறியாமல் தேனை ருசிக்க் வேண்டும்."

எனக்கு வைரமுத்துவின் வரிகள் நிறைய பிடிக்கும்.

"வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகில் எடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்."

எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் மறக்க முடியாது.

"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு.."

வைரமுத்துவின் ஆரம்ப கால கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கும். இப்ப அந்த அளவு இல்ல. அதிகம் இல்லேன்னுதான் சொல்லணும். அவர் எழுதறதே ரொம்ப குறைஞ்சிடுச்சு. புதுசா வர்ற கவிஞர்கள்ல நிறைய பேர் என்ன எழுதறாங்கன்னே புரியல

வாழ்வே மாயம் என்ற படத்தில்,
"வாழ்வே மாயம், தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம், நிலைக்காதம்மா" என்று ஆரம்பிக்கும் பாடலின் அனைத்து வரிகளும் கேட்டவுடனே மனது கனத்து போகும்.

“தேவதை க்ண்டேன்” என்ற படத்தில் எனக்கு பிடித்த பாடல் வரிகள்

“நான் உன்னை சுமபதினால் இதயமும் கருவறை தான் மனதால் நானும் அன்ன்னையே மறவேன் என்றும் உன்னையே”

“என்னை படைத்த அந்த தெய்வம் என்னை சுமந்த அன்னை தெய்வம் இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்கிறேன்”

நான் ஒரு தீவிர இளையராஜா விசிறி..

அதுவும் 80's.90's hits ரொம்பவே பிடிக்கும்...

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒருதயக்கம் தடைபோடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால்

பாடல்..கொடியிலே மல்லிக பூ..
படம்..
கடலோர கவிதைகள்

--------------------------------------------------------------------------
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..

மழை தூதலே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு..கொதிக்குதே பாலாறு..
இது காதல் ஆசைக்கும்..காமம் பூஜைக்கும் நேரமா..
இந்த ஜோடி வண்டுகள் பொருதான் இடுமா..ஆ..

பாடல்..பொன் வானம் பன்னீர்
படம்..இன்று நீ..நாளை நான்
--------------------------------------------------------------------------
இது மாதிரி நிறைய collections வச்சுருக்கேன்..லாங் ஜெர்னி போகும்போது..எனக்கு பிடிச்ச collectionsai கார் இல் கேட்டுகிட்டே போவது ரொம்பவே பிடிக்கும்...

பாடல்..எ அஜுநபி து பி கபி ஆவாஜ் தே கஹி..

படம்....(dil se..(hindi..)
தமிழ் இல் பூங்காற்றே..னு வரும்..ஆனால்..ஹிந்தியில் உயிர் இருந்தது..

இது மாதிரி இன்னும் நிறைய..இருக்கு..

Madurai Always Rocks...

ஆனந்தி, நீங்கள் சொல்லி இருக்கும் மூன்று பாடல்களுமே எனக்கும் பிடித்தவை... இது போல் பாடல் வரிகளை ரசித்து கேட்பவர்களை சந்தித்தே நிறைய நாட்கள் ஆகி விட்டது... நானும் ஒவ்வொரு மூடுக்கு கேட்க என தனியாக கலெக்ஷன்ஸ் வைத்திருக்கிறேன்...

இந்த பதிலை பார்ப்பீர்களா என்று தெரியவில்லை இருந்தாலும் உங்களை இங்கே சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்,

"நீ அழும் போது நான் அழ நேர்ந்தால் துடைக்கிற விரல் வேண்டும்"

பாடல் : சிநேகிதனே
படம் : அலைபாயுதே

பாடல் : ஏ நண்பனே... (முழுப்பாடல்)
படம் : மங்காத்தா

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ அது மலையோ ...

பாடல் : இளைய நிலா ...

நான் வானவில்லை வேண்டினால் ஓர் விலை கொடுத்து வாங்குவேன்
வெண் மேக கூட்டம் யாவையும் என் மெத்தையாக்கி தூங்குவேன்

பாடல் : ஒரு பூங்காவனம் ..
படம் : அக்னி நட்சத்திரம்

தோல்வியா tension ஆ சொல்லிடு
All is well..
tight ஆகா lifey ஆனாலும்
லூசாக நீ மாறு

மூளையதான் மூட்டை கட்டு
follow your heart-u beat-u root-u
மனது சொல்வதை செய் :)

joker என்பதால் zero இல்லை
All is well
சீட்டு கட்டிலே நீ தான் hero

தோழனின் தோள்களும் அன்னை மடி -அவன்
தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி

படம் : nanban
அப்புறமா வாரேன்

ஜென்னிவினோ

Dare To Paly With Life

அதிகாலை நேரமே சுகமான ராகமே
மீண்டும் ஒரு காதல் கதை
மணதிலே ஒரு பாட்டு மழை வரும் அதை கேட்டு
தாயம் ஒன்று
இன்னும் பல பல பல.......

dont cry because its over smile because it happened

ஜென்னி வினோ..இளைய நிலா பொழிகிறதே, செம கிளாசிக் இல்லை... வைரமுத்துவோட மாஸ்டர் பீஸ்...

இந்து, மனதிலே ஒரு பாட்டு சூப்பர் பாட்டு... நல்ல ம்யூசிக் கூட...

எனக்கு பிடித்த சில வரிகள்...

வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே..
.....
ஏன் என்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே...

======================================================

இனி எந்த பிறவியிலும் உன்னை சேர காத்திருப்பேன்
விழி மூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்

======================================================

வராத துன்பம் வாழ்விலே
வந்தாலும் நேரில் மோது...
பெறாத வெற்றி இல்லையே என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலே சுடும் கணல் நீயே...

=======================================================

இனமென்ன குலம் என்ன குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் என்னை அங்கு கொடுத்தேன்...

========================================================

அழகான மேடை சுகமான ராகம்
இடையினில் வேலிகள் உண்டு
ஆறாத புண்ணும் நூறான முள்ளும்
ஆடிடும் கால்களில் உண்டு
எதிலேயும் பெண்மை சுகம் காண வில்லை
எரியாத தீபங்கள் பெண்கள்....
==========================================================

உடனே நினைவுக்கு வந்தவை இவை தான்... முடிந்தால் படங்களின் பெயர்களை கண்டு பிடியுங்கள்.... :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இது ஒரு பொன்மாலை பொழுது
வான மகள் நானுகிறாள் வேறு உடை பூனுகிறாள்
------------------------------------------------------
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே.........
-----------------------------------------------------------
அன்பு நாதனே அணிந்த மோதிரம்,
வளையல் ஆகவே துரும்பென இளைத்தேன்,
அந்த மோதிரம் ஒட்டியானமாய்,
ஆகும் முன்னே, அன்பே அழைத்தேன்,
என் காற்றில் சுவாசம் இல்லை,
என் காற்றில் சுவாசம் இல்லை,
அது கிடக்கட்டும், விடு,
உனக்கென்ன ஆச்சு?
-----------------------------------------------------
இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா
---------------------------------------------------
இன்னும் நிறைய இருக்கு, கொஞ்சம் வேலை முடிச்சிட்டு

ஹாய் prathilekha,
உங்க பேவரைட் வரிகள் சூப்பராக இருக்கு...
//அன்பு நாதனே அணிந்த மோதிரம்,
வளையல் ஆகவே துரும்பென இளைத்தேன்,//
இது என்ன பாட்டு???

என்னுடைய இன்றைய கோட்டா,

வாரணம் ஆயிரம் - அனல் மேலே....

ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனதிரு விழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே...
............
சந்திதோமே கனாக்களில் சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
------------------------------------------------------------------

திருட்டுபயலே - தைய்யதா தைய்யதா....

பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை
நீ உறுதியானவன்
என் உரிமையானவன்...

-------------------------------------------------------------------

மன்மதன் - மன்மதனே நீ......

எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடங்கள் உன்னை போல் யாரும் என்னை மயக்கவில்லை...
................
அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் உணருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா?

----------------------------------------------------------------------

காதல் வைரஸ் - ஹே ஹே என்ன ஆச்சு...

நான் சொல்வதை செய்பவன் வேண்டாம்
சொல்லாததை செய்பவன் வேண்டாம்
..............
பெண்ணை அடிக்கடி ரசிப்பவன் வேண்டாம்
ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்
ரொம்பவும் ரொம்பவும் உத்தமபுத்திரன் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
------------------------------------------------------------------------
:)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்