செட்டிநாட்டு சுருள் போளி

தேதி: October 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமாவு -- 1/4 கிலோ
முந்திரி பருப்பு -- 50 கிராம் ( பாதி பாதியாக ஒடித்துக் கொள்ளவும்)
சர்க்கரை -- 200 கிராம் (மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்)
தேங்காய் -- 1 என்னம் ( துருவியது)
நெய் -- 4 டீஸ்பூன்
ஏலப்பொடி -- 1/2 டீஸ்பூன்
எண்ணைய் -- 1/2 லிட்டர்


 

மைதாமாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக் பிசைந்து கொள்ளவும்.
அடுப்பை சிம்மில் வைத்து ,வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சர்க்கரையும்,தேங்காய் துருவலையும் சேர்த்து ஒன்றாக கிளறி விடவும்.
முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த முந்திரி, ஏலப்பொடியை சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும்.
மைதாமாவை வட்ட வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் சிம்மில் வைத்து வட்டங்களை போட்டு லேசாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த வட்டங்களின் நடுவே தேங்காய், சர்க்கரை கலவையை வைத்து மடித்து மூட செட்டிநாட்டு சுருள் போளி ரெடி.


மேலும் சில குறிப்புகள்