கூட்டாஞ்சோறு வார சமையல் குறிப்புகள் - 2

அறுசுவை சமையல் வாரம் 3 (14/10/07) - (20/10/07)

1. பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் - தளிகா- http://www.arusuvai.com/tamil/
node/4665
க்ரிஸ்பி ப்ரான்ஸ் - தளிகா/4862
காரட் ஹல்வா - சந்தியா ரவி /3993

2. 5 ஸ்டார் ஃப்ரைட் ரைஸ் - பீவி /http://www.arusuvai.com/
tamil/5
கோஸ் மறி - பீவி /http://www.arusuvai.com/
tamil/node/5351
கடாய் சிக்கன் - பீவி / 5418

3. ரவா தோசை - ஷாந்தி / 4045
க்ரீன் சட்னி - சுபா / 4859
முட்டை கபாப் - ஷாந்தி / 4088

4. மொச்ச கொட்டை கார குழம்பு - சந்தியா ரவி / 3963
புடலங்காய் பருப்பு கறி / தயாபரன் வஜிதா / 2396
தக்காளி ரசம் - சந்தியா ரவி / 2337

5. சேமியா இட்லி - ஜுபைதா / 2763
கேரட் சட்னி - ஜுபைதா / 2761
தேன் ஃபுரூட் சாலட் - தயாபரன் வஜிதா / 2212

6. அரிசி கிச்சடி - ஷாந்தி / 4160
கத்திரி உருளை பொரியல் - தளிகா / 4891
தக்காளி சாலட் - தயாபரன் வஜிதா / 2236

7. முட்டை கோஸ் அடை - சுபா / 5316
கோழி சூப் / ஜுபைதா / 3092
செட்டி நாடு பக்கோடா - சுபா / 5357

அடுத்த வார குறிப்புகளை திவ்யா அருண் அவர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இது வரை இடம்பெறாத உறுப்பினர்களின் குறிப்புகளை தேர்ந்தெடுத்து உள்ளேன், சுபாவைத்தவிர. சுபா ஊருக்குச் செல்வதால், அவருக்கு பின்னூட்டங்களைக் கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைப்போம்.

அட்மின் அவர்களின் ஆலோசனையின் படி ஒவ்வொருவருடைய தொகுப்புகளிலிருந்து 3 குறிப்புகளை தேர்வு செய்துள்ளேன். அனைத்தும் எளிமையான குறிப்புகள். சில குறிப்புகளை சமைக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம். ஹர்ஷ், நீங்க இதைப் பார்த்தால் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் இன்றோ, நாளையோ கூறவும்.

சகோதர/சகோதரிகள் அனைவரும் சமைத்து பார்த்து மறக்காமல் பின்னூட்டங்களை கொடுத்து விடவும்.

திவ்யா, நீங்கதான் அடுத்த வார குறிப்புகளை தேர்வு செய்யப்போறீங்க. நாளைக்கு இங்கு வந்து ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு போகனும். சரியா.

நான் ஆஜராயிட்டேன்(உள்ளேன் அம்மா.சரியா வானதி :-) அப்பாடா, இப்பல்லாம் ஸ்மைலி சரியா போட்ருரேன்.அட்மின் ஒண்ணும் சொல்ல முடியாது :-) இது அட்மினுக்கு).

கையெழுத்து போட சொன்னா ரொம்ப கிறுக்கீட்டனோ! ஹி ஹி அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா!

குறிப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றிகள் ஆயிரம்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இப்பதான் மாளய பட்சம் முடிந்தது. நவராத்திரி ஆரம்பித்தது. 21 அக்டோபர் வரை வெங்காயம் கூட சேர்க்க மாட்டோம். அதுக்கப்புறம்தான் குறிப்புகளை ட்ரை பண்ண ஆரம்பிக்கணும்.
தோழியர் அனைவருக்கும் நவராத்திரி அழைப்பு வருகிறது விரைவில்.
அன்புடன்
ஜெயந்தி

ஒகே திவ்யா. அடுத்த வாரம் அப்ப உங்க மெனு தான். அடுத்த வாரம் புரட்டாசி விரதம் எல்லாம் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். அசைவ பிரியர்களையும் கொஞ்சம் கவனிச்சுடுங்க.

ஜெயந்தி அக்கா அவர்களுக்கு எப்படி இருக்கீங்க? தங்களின் ஆய்வு ஆராய்ட்சி பயணத்தில் மூழ்கி இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன், அதை வெற்றிகரமாக முடிக்க எனது வாழ்த்துக்கள். ஜோக்கான தங்களின் சோக கதையைப் படித்தேன், அதில் அக்டோபர் 21 வரை வெங்காயம் கூட சேர்க்க மாட்டோம் என்று ஏதோ எழுதியிருக்கின்றீர்கள் எனக்கு அது புரியவில்லை, முடிந்தால் அதை விளங்கப் படுத்த முடியுமா? கட்டாயமில்லை. நன்றி.

ஹாய் வானதி,

அழகா ஜமாய்ச்சிட்டீங்க. எதுவும் மாற்ற வேண்டாம்:-) நல்லா இருக்கு:-) அழகா ஏழு பேர் குறிப்பையும் சேர்த்துட்டீங்க. சூப்பர்:-)

ஜாலியா ஊர் சுத்திட்டு வாங்க:-) Happy journey:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹலோ மனோகரி, எப்படி இருக்கீங்க? டைகர் எப்படி இருக்கார். அவருக்கு உடம்பு சரியாயிடுச்சா? (என்ன நாய்க்கு மரியாதைன்னு பாக்கறீங்களா) இங்க எங்க தெருவுக்கே காவல் ஜாக். வீட்டையே காவல் காக்கறவங்களுக்கு மரியாதை தரவேண்டாமா?

அப்புறம் உங்க போட்டோ 'யாரும் சமைக்கலாமில்' இன்று தான் பார்த்தேன். அழகா இருக்கீங்க.

எங்கள் வீடுகளில் தினசரி சமையலில் எல்லாம் வெங்காயம் எல்லாம் இருக்காது. அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, சஷ்டி இந்த நாளில் வெங்காயம் சேர்க்க மாட்டோம். அமாவாசை அன்று கத்திரிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி போன்ற காய்களைக் கூட சேர்க்க மாட்டோம். நவராத்திரி முடிய வெங்காயம், பூண்டு இதெல்லாம் சேர்க்க மாட்டோம். இன்னொரு தமாஷ் என்னன்னா என் தோழியுடைய கணவர் வாழ்நாளிலேயே வெங்காயம் சாப்பிட்டதில்லையாம்.
என் அம்மா வீட்டில் இருந்தவரை பூண்டே சாப்பிட்டதில்லை நான்.
சரி, வாஷிங் மெஷின் கூப்பிடறது. அப்புறம் வரேன்.
அன்புடன்
ஜெயந்தி

GOD IS GREATஹாய் ஹர்ஷினி எங்கபோனீங்க நீங்க இல்லாம அறுசுவையே போர்?

GOD IS GREAT

GOD IS GREATஹாய் ஹர்ஷினி எங்கபோனீங்க நீங்க இல்லாம அறுசுவையே போர்?

GOD IS GREAT

மேலும் சில பதிவுகள்