கூட்டாஞ்சோறு வார சமையல் குறிப்புகள் - 2

அறுசுவை சமையல் வாரம் 3 (14/10/07) - (20/10/07)

1. பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் - தளிகா- http://www.arusuvai.com/tamil/
node/4665
க்ரிஸ்பி ப்ரான்ஸ் - தளிகா/4862
காரட் ஹல்வா - சந்தியா ரவி /3993

2. 5 ஸ்டார் ஃப்ரைட் ரைஸ் - பீவி /http://www.arusuvai.com/
tamil/5
கோஸ் மறி - பீவி /http://www.arusuvai.com/
tamil/node/5351
கடாய் சிக்கன் - பீவி / 5418

3. ரவா தோசை - ஷாந்தி / 4045
க்ரீன் சட்னி - சுபா / 4859
முட்டை கபாப் - ஷாந்தி / 4088

4. மொச்ச கொட்டை கார குழம்பு - சந்தியா ரவி / 3963
புடலங்காய் பருப்பு கறி / தயாபரன் வஜிதா / 2396
தக்காளி ரசம் - சந்தியா ரவி / 2337

5. சேமியா இட்லி - ஜுபைதா / 2763
கேரட் சட்னி - ஜுபைதா / 2761
தேன் ஃபுரூட் சாலட் - தயாபரன் வஜிதா / 2212

6. அரிசி கிச்சடி - ஷாந்தி / 4160
கத்திரி உருளை பொரியல் - தளிகா / 4891
தக்காளி சாலட் - தயாபரன் வஜிதா / 2236

7. முட்டை கோஸ் அடை - சுபா / 5316
கோழி சூப் / ஜுபைதா / 3092
செட்டி நாடு பக்கோடா - சுபா / 5357

அடுத்த வார குறிப்புகளை திவ்யா அருண் அவர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஹாய் ஹர்ஷினி,
நன்றிகள்.
ஊருக்கு போறதை நினைத்து எனக்கு 'டிசன்ட்ரி' ஆகிவிட்டது.
உடம்புக்கே சரியில்லை...
ஊருக்கு போகும் நாள் நெருங்க நெருங்க நெஞ்சு 'திக் திக் ' என்று அடிக்கிறது.
என்ன பண்ண ஊருக்கு போய்தானே ஆகனும்....

இவ்வளவு பயத்தோட ஊருக்குப்போயி நம்ம ஊர் மக்களையெல்லாம் பயப்பட வைக்கணுமா???எதற்கும் இன்னொருமுறை யோசித்துப்பாருங்கள்.

யோசிக்க முடியாது விது....
ஆடர் வந்து விட்டது...
எனவே கிளம்பி ஆகவேண்டியது தான்.... பாக்கி...

என்ன பாத்து யாரு பயப்பட போறாங்க!
ஏர்போர்ட்ல மூடுற வாய் மறுபடி திரும்ப ஏர்போர்ட் வரும் போது தான் திறக்கும்.
ரகசியமாக அம்மா,அப்பா,தம்பி யிடம் மட்டும் வாய் கிழியும். மீண்டும் தைக்கப்படும்.....
இப்படியே ஆகி வாயே.. மாறிவிட்டது.
ஒரிஜினல் நிலைமைக்கு எப்போது வருமோ???????
கடவுள் (?)தான் காப்பாற்றவேண்டும் என்ன விது(ஹி ஹி ஹி)!!!!!

உங்களையும் குறிப்பாக உங்க வாயையும் பழனி முருகன் காப்பாற்றுவார். பத்திரமாகப் போய்ட்டு வாயோடு வாங்க :-)

விது ஒருதடவை சொன்னா முருகன் 1001 தடவை சொன்ன மாதிரி!!
உண்மையாகவே இதை எழுதும் முன் தோழிகளுக்கும்,அண்ணாவிற்கும் ஒன்று கூற நினைத்தேன்.
திவாகருக்கு 28ம் தேதி பழனியில் மொட்டை போடுகிறோம். அனைவரும் வந்து கலந்து கொள்ள அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஹாய் சுபா,
எப்படியிருக்கே? ஊருக்கு கிளம்பியாச்சா? எப்ப?
முடிந்தால் இந்த அம்மா வீடும் இருக்குன்னு ஞாபகம் வச்சுக்க. அடுத்த வாரம் நான் சென்னை வந்தாலும் வருவேன். நீ அங்கே இருப்பென்னு தெரிஞ்சா பார்க்கலாம்.(விருப்பமிருந்தால்)
அன்புடன்,
செல்வி

அன்புடன்,
செல்வி.

அம்மா சந்தோஷம் பிடிபடலை..
நான் ஊருக்கு வந்த அன்றே திண்டுக்கல் போறோம்..
அதன் அருகில் தான் கணவரின் ஊரும்..
ஒரு வாரத்திற்கும் மேல் அங்கே தான்...
சென்னையில் எனக்கு 'வேளச்சேரி' ஆனால் எப்போ இருப்பேன்னு பழனி முருகனுக்கு தான் தெரியும்......

வீட்டுக்கு வாங்க!
ஈமெயில் ஐடி கூட அண்ணா தரமாட்டேன்னு வேற சொல்லிட்டாரு!!
பார்ப்போம்

அன்பு ஹர்ஷினி! பரவாயில்லை, லேட்டா வாழ்த்தினா என்ன இப்போ. தாங்கள் வாழ்த்தியதே ரொம்ப சந்தோஷம்! மிக்க நன்றி!

மனோகரி அக்கா, மன்னிக்க வேண்டும்.நேற்று காலை முதல் அறுசுவை எனக்கு Open ஆகலை.இப்பொழுது தான் வேலை செய்யுது.Home Page மட்டும் தான் வந்தது.10 - 15 நிமிடம் ஆகியும் எதுவும் வரலை.அதனால தான் எதுவும் பதிவு செய்யலை.உங்களுக்கும் இப்படி ஆச்சா?இல்ல எனக்கு மட்டும் தானா?அட்மினுக்கு மெயில் அனுப்பலானு இருந்தேன்.அதுக்குள்ள Open ஆயிடுச்சு. அக்கா இப்பவே Delay ஆயிடுச்சு.அதனால மாற்றம் செய்யட்டுமா, வேண்டாம என்று கூறுங்கள்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்பு தங்கை திவ்யா, எப்படி இருக்கீங்க? சமையற் குறிப்புகளை மாற்றியமைப்பதில் உங்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கு வருந்துகின்றேன். இது உங்கள் சமையற் தளம், இந்த தலைப்பை பொருத்தவரை இதில் எடுக்க வேண்டிய முடிவுகள் அனைத்தையும் உங்களையும் சார்ந்ததே, ஆகவே நீங்கள் என்னச் செய்தாலும் எனக்கு சம்மதம்.நன்றி.

மேலும் சில பதிவுகள்