கூட்டாஞ்சோறு வார சமையல் குறிப்புகள் - 2

அறுசுவை சமையல் வாரம் 3 (14/10/07) - (20/10/07)

1. பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் - தளிகா- http://www.arusuvai.com/tamil/
node/4665
க்ரிஸ்பி ப்ரான்ஸ் - தளிகா/4862
காரட் ஹல்வா - சந்தியா ரவி /3993

2. 5 ஸ்டார் ஃப்ரைட் ரைஸ் - பீவி /http://www.arusuvai.com/
tamil/5
கோஸ் மறி - பீவி /http://www.arusuvai.com/
tamil/node/5351
கடாய் சிக்கன் - பீவி / 5418

3. ரவா தோசை - ஷாந்தி / 4045
க்ரீன் சட்னி - சுபா / 4859
முட்டை கபாப் - ஷாந்தி / 4088

4. மொச்ச கொட்டை கார குழம்பு - சந்தியா ரவி / 3963
புடலங்காய் பருப்பு கறி / தயாபரன் வஜிதா / 2396
தக்காளி ரசம் - சந்தியா ரவி / 2337

5. சேமியா இட்லி - ஜுபைதா / 2763
கேரட் சட்னி - ஜுபைதா / 2761
தேன் ஃபுரூட் சாலட் - தயாபரன் வஜிதா / 2212

6. அரிசி கிச்சடி - ஷாந்தி / 4160
கத்திரி உருளை பொரியல் - தளிகா / 4891
தக்காளி சாலட் - தயாபரன் வஜிதா / 2236

7. முட்டை கோஸ் அடை - சுபா / 5316
கோழி சூப் / ஜுபைதா / 3092
செட்டி நாடு பக்கோடா - சுபா / 5357

அடுத்த வார குறிப்புகளை திவ்யா அருண் அவர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அக்கா,நான் நலம்.மாற்றிய குறிப்புகள் கூட ரெடியாக இருக்கு.ஆனா இவ்வளவு தாமதமா மாற்றுவது சரியில்லைனு நினைச்சு தான் உங்க கருத்து கேட்டேன்.சரிங்க அக்கா, முதல்ல குடுத்த குறிப்பே இருக்கட்டும்.தளிகாவை வேற காணோம்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்பு தங்கை திவ்யா, ஒகே டியர் நீங்க கூறியபடியே எதையும் மாற்றவேண்டாம். அடுத்த சுற்றில் இதையெல்லாம் சற்று கவனத்தில் கொள்ளவும், எழும் சந்தேகங்களை முன்கூட்டியே கேட்பதாக இருந்தாலும் நல்லதே. மேலும் அடுத்த வார குறிப்புகள் தேர்வாளர் சகோதரி தளிகா அவர்கள், வாக்களிப்பு விவாத திரட்டில் ( இந்த பக்கத்தில் பதிவது முடியாமல் போய்யிருக்கலாம்) அவர்களின் நிலையை தெரிவித்துள்ளார்கள். அதாவது அவர்களுக்கும் அறுசுவையினில் பதிவுகள் போடுவதில் இருக்கும் பிரச்சனைகளின் காரணமாக முடிந்தால் குறிப்புகளை தருவதாகவும் முடியாவிட்டால் என்னை தேர்வுச் செய்யும்படி கூறிவுள்ளார்கள் ஆகவே இன்னும் ஒருசில நாட்கள் காத்திருப்போம். எதற்கும் அதற்கடுத்த வாரத்திற்கான நேயரை மீண்டும் நீங்களே தேந்தெடுத்து என்னிடத்தில் கூறிவிடுங்கள்.ஒருவேளை நான் குறிப்புகள் கொடுக்க நேரிட்டால் எனது பதிவில் அறிவித்து விடுகின்றேன். சரியா. நன்றி.

மனோகரி அக்கா, இங்கு வார வாரம் கொடுக்கப்படும் சமையல் குறிப்புகளை யாரும் சமைப்பது போல் தெரியவில்லையே. முதன் முதலில் நீங்க தேர்ந்தெடுத்த குறிப்புகளை நிறைய பேர் ட்ரை பண்ணார்கள். அதனால் அதைப்போலவே குறைந்த அளவில் குறிப்புகளை கொடுத்தால் அதிக பேர் ஆர்வமுடன் பங்கு கொள்வார்களோ? இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று சொல்லவும்.

அன்பு தங்கை திவ்யா, தங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்,ஆனால் குறிப்புகள் தேர்வுச் செய்வதுப் பற்றி பல நேயர்களின் ஆலோசனையை வைத்து,அது நமது அட்மின் எடுத்த முடிவு என்பதால் அவர் பதில் கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.
மேலும் பின்னூட்டம் வராததை வைத்து அவைகளை யாருமே சமைக்கவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது என்று தான் நினைக்கின்றேன்,எழுதாமல் இருப்பதற்கு கூட பல காரணங்கள் இருக்கலாம். ஆகவே இதனால் நிச்சயமாக நேயர்களுக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நமது வேலையைத் தொடர்ந்து செய்வோம். நன்றி மீண்டும் சந்திக்கலாம்

மனோகரி அக்கா, நீங்க சொல்வது சரிதான்.பின்னூட்டம் வராதனால சமைக்கலைனு சொல்ல முடியாது.(நான் கூட நிறைய பின்னூட்டம் கொடுக்காம இருக்கேன்.தப்பு தான்.சீக்கிரமா கொடுத்திடறேன்.பின்னுட்டம் தருவதின் முக்கியத்துவம் எனக்கு நன்றாகவே புரிகிறது).
//நிச்சயமாக நேயர்களுக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நமது வேலையைத் தொடர்ந்து செய்வோம். //
உண்மைதான் அக்கா.நாம் தொடர்ந்து செயல்படுவோம்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மனோகரி அக்கா,சுத்தமான தேனை எப்படி கண்டுபிடிப்பது என்று கூறுங்கள்.
அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் திவ்யா :-)

சிறிது தேனை எடுத்து ஒரு கப் தண்ணீரில் விட்டால் அசல் எனில் கரையாது, கரைந்தால் அது கலப்படத்தேன்.

பி.கு:மனோகரி அக்கா பதிவு போட முன் இது சும்மா கொசுறு ....

அன்புடன்,

ஷாந்தா.

ரொம்ப நன்றிங்க.ஒரு சந்தேகம்.தண்ணில போட்டு சிறிது நேரம் கழித்து கரைந்தால் அது சுத்த தேனா?ஏன்னா நான் தண்ணில போட்ட உடனே கரையல. சிறிது நேரம் கழித்து பார்த்தால் கரைந்திருந்தது.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஒரு ப்ளாட்டிங் பேப்பரில் ஒரு சொட்டு தேனை ஊற்ற வேண்டும். அது அப்படியே ஊறாமல் முத்துபோல நின்றால் அது சுத்தத்தேன் என்று கண்டு கொள்ளலாம்.

அன்பு தங்கை திவ்யா எப்படி இருக்கீங்க? ஆமாம் எந்த விசயத்திலும் நமது வேலையை மட்டும் நாம் பார்ப்பது தான் நல்லது என்றபடியால் இந்த கூட்டாஞ் சோறு பகுதியை எந்த குழப்பமும் இல்லாமல் தொடர்ந்து நடத்தலாம். இதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பிறகு ஆராயலாம் சரியா. மேலும் சுத்தமான தேனைப் பற்றி கேட்டிருக்கின்றீர்கள். பொதுவாக தேனின் மணத்தைக் கொண்டுகூட தெரிந்துக் கொள்ளமுடியும். சகோதரி சாந்தா அவர்கள் கூறியதுப் போல் தண்ணீரில் போட்டால் கரையைக் கூடாது. எவ்வளவு நேரமானாலும் கரையாமல் இருக்கவேண்டும், தானாக கரைந்தால் அது கலப்படமாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்