sad

i am very sad nobody answer with me.
பார்லி கஞ்சி எப்படி செய்வது?.how many times take parley in a day.anybody knows please tell.

கவிதா, என்னது இதுக்குப் போய் கவலைப்படலாமா? அறுசுவையில் எப்படியும் தங்களது கேள்விக்கு பதில் கிடைச்சுடும். பார்லி கஞ்சி செய்வது மிக சுலபம். கடையில் கிடைக்கும் பார்லி நொய்யை வாங்கி செய்வதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் வைத்து கொதிக்க வைத்து அதில் பார்லியை போடவும். நன்றாக பார்லி நொய் வெந்த பிறகு ஒரு கப் பால் மற்றும், 2 டேபிள் ஸ்பூன் சீனி சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கவும். உடல் இளைப்பதற்காகவென்றால், பாலைத் தவிர்த்து அதற்கு பதில் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் உப்புப் போட்டு கிண்டி இறக்கி குடிக்கவும். இல்லாவிடில் பாலுக்கு பதில் தண்ணீர் ஊற்றி செய்து விட்டு இறக்கி ஆறிய பின் சிறிது மோர் கலந்து குடிக்கலாம். பார்லி, முழு பார்லியாக இருந்தால் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து விட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு சவுண்ட் வைத்து வேக விட்டு, கஞ்சி செய்யலாம். எதுவும் சந்தேகம் இதில் இருந்தால் கேளுங்கள். இப்ப மகிழ்ச்சிதானே.

ஹாய் கவிதா,
எப்படியிருக்கீங்க? நிறைய விஷயம் தெரிஞ்சவங்க யாராவது பதில் சொல்வாங்கன்னு பார்த்தேன், நீங்க ரொம்ப வருத்தப்படறதால எனக்கு தெரிஞ்சவரைக்கும் சொல்றேன்.
பார்லிய ரொம்ப அதிகமா எடுத்துக்கக் கூடாது, ஏன்னா அது உடம்பில இருக்குற கெட்ட நீரை வெளியேற்றக் கூடிய சக்தி உள்ளது. அதனால் தான் காலெல்லாம் வீங்கியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகம் குடுக்கச் சொல்வாங்க. ஆனா நார்மலா இருக்குறவங்க, 1 நாளைக்கு 1 தம்ளர் அளவுக்கு சாப்பிட்டால் போதும், அதிகம் எடுத்துக் கொண்டால் நீர் நிறைய போய் டயர்டாயிடுவாங்க.
பார்லிய ஒன்றிரண்டா மிக்ஸியில் உடச்சிட்டு, குக்கரில் (1 கைப்பிடி அளவு) போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 5,6 விசில் விட்டு, எடுத்து வடிகட்டி, சர்க்கரை சேர்ப்பதானால், சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம், உப்பு சேர்ப்பதானால், பால் வேண்டாம்.
வாழ்த்துக்கள், நன்றி,
அன்புடன்,
செல்வி

அன்புடன்,
செல்வி.

ஹாய் தேவா,
எப்படியிருக்கே? பையனுக்கு இருமல் கொறஞ்சிருக்கா? ஆகா, என்ன ஒற்றுமை, 2 பேரும் போட்டி போட்டுக்கிட்டு ஒரே நேரத்தில் பதில் சொல்லியிருக்கோம் :-) வீக் எண்ட் ஃப்ரீயா? எங்கேயும் போகலயா? இங்க வேணா வாயேன் :-))
நா ரூபி வீட்டுக்கு போலாமுன்னு பார்த்தேன் [ஆனா அவங்க தான் கூப்பிடவேயில்ல :-)]
ok, take care, bye,
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

anbudanஹாய் செல்வி

எப்படி இருக்கீங்க? நாங்கள் அனைவரும் இங்கு நலம்.
அருசுவை சகோதரிகள் கலக்கரீங்க.
தொடர்ந்து கலக்குங்க

வித்யாவாசுதேவன்

anbudan

நன்றி deva madam & selvi Madam
i have two kids one is 5,another one is 3.i try to reduce my weight.அதற்க்காக நான் ஓட்ஸ்,பார்லிசாப்பிடுகின்றேன்.வயிறு குறையுமா.
பார்லி சாப்பிடதால் வயிறு சரி இல்லே.
கொள்ளு வாங்க கடக்கி போனோன்.
there are different types of lentiles is there which one is i bought it.
நான் கனடாவில் உள்ளேன்.இங்கு குளிர் ஆரம்பம்.வெளியில் நடக்க முடியது.அதனால் சாப்பாட்டை கேக்கிறேன்
மிக்க நன்றி

kavitha

ஹாய் கவிதா,
நீங்கள் கடையில் சிவப்பும் கறுப்பும் கலந்தோ முழு சிவப்பாகவோ உள்ள கொள்ளை வாங்கவும்.
பார்லியை அதிகம் உட்கொள்ளாதீர்கள் அதற்குப்பதிலாக ஓட்ஸ் வேணுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

கொள்ளும் பார்லியும் சாப்பிட்டு தான் வெயிட்ட குறைக்கணும்னு அவசியமில்ல. வேறு சில உணவுகளாலேயும் வெயிட்டை குறைக்க முடியும், வெளியே வாக் போக முடியா விட்டால் பரவால்ல, வீட்டுக்குள்ளேயே கால வீசி ஒரு அரை மணி நேரம் நடந்து பாருங்கள்.

சின்ன சின்ன உடற்பயிற்சிகள் வீட்டிலேயே செய்யலாம், குனிந்து காலை தொடுவது, சூர்ய நமஸ்காரம், உட்கார்ந்து காலை நீட்டி முகத்தை முழங்கால்களை தொடுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மிகவும் நன்றி உங்களுடை குறிப்புக்கு.தினமும் ஒரு வேளை பார்லி எடுத்துக்களாம.அலல ஒரு வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக்களாம
பார்லி உடம்பிற்கு நல்லதா
bye
kavitha

டியர் செல்வி மேடம்,
எப்படி இருக்கீங்க? உங்க பேப்ரிக் பெயிண்டிங் ஒர்க் ரொம்ப நல்லா இருந்தது. இந்த கிறிஸ்துமஸ்க்கு என்ன பிளான்? உங்க ஆலோசனைப் படி எல்லா நாட்டு மருந்துக்களையும் நிறுத்தி, இருமல் மருந்தையும் நிறுத்திட்டேன். மேலும் கடைக்கு சென்று நிறைய ஜூஸ் வாங்கி வந்து இப்ப கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன். எனக்கே ஆச்சரியமா இருக்கு. என் பையனுக்கு ஜூஸ் குடிப்பதென்றாலே பிடிக்காது. இப்ப திடீர்னு ஆப்பிள் ஜூஸ் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இருமல் இப்ப கொஞ்சம் கூட இல்லை. உங்களால இப்ப எனக்கு டபுள் சந்தோஷம். என் பையனின் இருமல் சரியாகி, ஹெல்தியா ஜூஸ் குடிக்கற பழக்கமும் வந்துடுச்சு. ரொம்ப தேங்க்ஸ்.

ஆனாலும் உங்களுக்கே என்னைப் பார்த்தால் பாவமா இல்லியா. நானே இந்தியா வரணும்னு தவியா தவிச்சுட்டு இருக்கேன். நீங்க இதுல இந்த வீக் எண்ட் வரியான்னு கேட்டு என் ஏக்கத்தை அதிகப்படுத்துறீங்களே. இந்த முறை இந்தியா வரும்போது நிச்சயம் தங்களை வந்துப் பார்க்க முயற்சிப்பேன். உலகம் சுத்த ஆசைதான். அப்படி சுத்தினா அறுசுவை உறுப்பினர்கள் நிறைய பேர் வீட்டுக்கு விசிட் அடிச்சிடலாம்.

ரூபி, இது நியாயமா. ஏன் எங்களையெல்லாம் ரம்ஜானுக்கு கூப்பிடல. அது என்ன பப்பி ஷேம் சமையல். கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஹாய் கவிதா, பார்லி உடலில் உள்ள நீரினைக் குறைக்க உதவும். இதனால் வயிறு குறைய வாய்ப்பில்லை. மேலும் குழந்தைப் பிறந்த பிறகு அதனால் பெரிதான வயிறை குறைக்க என்னதான் டயட்டிங் இருந்தாலும் வெயிட் குறையுமே அன்றி வயிறு டயிட் ஆகாது. இப்படி வெயிட் மட்டும் குறைத்தாலும், வயிறு தளர்வாக ஆகி ஜெல்லி பெல்லியாக ஆகிவிடக்கூடும். எனவே டயட்டிங்கோடு அப்டாமினல் க்ரன்சஸ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வயிறும் டயிட்டாகி பழையபடி ஆகிவிடும்.
தங்களின் உடம்பில் அதிக நீர் சேர்ந்து கை, கால் வீங்கியது போல் இருந்தால் வாரம் ஒரு முறை பார்லி சேர்க்கலாம். மற்றபடி ஓட்ஸ் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி உணவை குறைத்து நிறைய காய்கறி, பழம் எடுத்துக் கொள்ளுங்கள். இனிப்பு பண்டங்கள், பொரித்த உணவுகள் போன்ற கலோரி அதிகமுள்ள உணவுகளை தவிருங்கள். கொள்ளு அடிக்கடி சேத்துக் கொள்ளூங்கள். வேக வைத்தும், ரசம் செய்தும் சாப்பிடலாம். தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

மன்றத்தில் இது சம்பந்தப்பட்ட நிறைய பதிவுகள் இருக்கின்றன. பாருங்கள்.

நன்றி தேவா மேடம்
அப்டாமினல் க்ரன்சஸ் என்றால் என்ன?.
please tell me
diffentent type of lentiles(கொள்ளு) i saw the shop which one i bought it.i am in canada

ப்யெ
கவிதா

மேலும் சில பதிவுகள்