செல்வி செல்வி

செல்வி செல்வி...........
உங்களபோய் அக்காவா ஆன்டியானு கேட்டுட்டேனே?இளமையின் ரகசியம் என்னவோ??பொண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்றவுடன் உங்களை எதோ கற்பனை பண்ணிவைத்திருந்தேன்.நீங்களே கேட்டாலும் இனி அக்கா கிடையாது.பரவாயில்லையா??

அன்பு சகோதரி ரோஸ்,
சாரிம்மா, நேற்றே கொடுத்திருந்த பதிவை இப்பத்தான் பார்த்தேன்.
எனக்கு சின்னவயசிலேயே திருமணம் ஆனதால சீக்கிரமே குழந்தை, அதனால பொண்ணுக்கு திருமணம் பண்ற வயசு ஆயிடிச்சு. ஆபீசுல என் வயசுக்காரங்க குழந்தைங்க இப்பத்தான் காலேஜ் படிக்கிறாங்க.
பரவாயில்லை, அக்காவும் வேண்டாம், ஆன்டியும் வேணடாம். செல்வியே போதும்(நான் முன்பே சொன்னது போல்).
ரகசியமெல்லாம் எதுவுமே இல்லை. மனசு மட்டும்தான் காரணம்.
(உங்களுக்கான சார்ட் தயாராகிக் கொண்டே உள்ளது. தாமத்திற்கு மன்னிக்கவும்)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா,

நலமா ? உங்க பதிவுகளை பார்த்துட்டு, உங்களை வேற மாதிரி கற்பனை செஞ்சிருந்தேன். ஆனா உங்க photo பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியா இருந்தது. இளமையா இருக்கீங்க. ரொம்ப அழகாகவும் இருக்கீங்க. உங்க புடவை வேலைப்பாடுகள் மிக அருமை. உடல் நலக்குறைவு இருந்தாலும் சுறுசுறுப்பா இருக்கீங்களே ! சமையல், எம்பிராய்டரி எல்லாமே அசத்தறீங்க. வாழ்த்துக்கள் அக்கா.

ஹாய் ரீட்டா,
எப்படியிருக்கே? உன்னோட பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
என்ன ஒரு 60 வயசு பாட்டி மாதிரின்னு நெனச்சிருப்பியா? அதனாலென்ன, இன்னும் கொஞ்சம் வருஷத்தில் நானும் அப்படி ஆயிடுவேன். :-))
எனக்கு எம்ப்ராய்டரில கொஞ்சம் ஈடுபாடு இருக்கறதால உடம்பு சரியில்லன்னாலும் அத விட முடியல, அருசுவைய போல.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா,

இன்னும் தூங்கலயா ?, உங்களை பாட்டி மாதிரியெல்லாம் கற்பனை செய்யலை. கொஞ்சம் சீனியரா நினைச்சேன் அவ்வளவுதான். ஆனா நீங்க ரொம்ப இளமையால இருக்கீங்க.

மேலும் சில பதிவுகள்