அரட்டை கச்சேரி -- 3

இனி பேசலாமா இங்கே!!

ஒரே குழப்பம்
தாளிகா வரைந்த ஓவியம் என்று சமீபத்திய கருத்துக்கள்லில் பார்த்து தேடி அலைந்து பார்த்து விட்டேன்.
இப்போ செல்வியம்மா போட்டோ என்கிறார்கள். இதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பேன்.

இப்பவே இப்பிடி கண்ணகட்டுதே....
ஊரு பக்கம் போயி வந்தா ....நினைச்சாலே இன்னுமில்ல கண்ணகட்டுது.......
பயமா இருக்கு...
அட்மின், ஊருக்கு போயிட்டு வந்த பின் எல்லா பக்கங்களை பார்வையிட சோம்பேறிதனம் இல்லாமல் எல்லாவற்றையும் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும்.

சுபா,
தளிகா வரைந்த படங்கள் வீட்டுக்குறிப்புக்கள் - குறுக்குத்தையல் அப்டீன்ற தலைப்பு கீழ இருக்கு பாருங்க.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

அவங்க இன்னைக்கு கொடுத்திருக்கற வெள்ளை கோழிக் குழம்பு, யாரும் சமைக்கலாம் குறிப்பில் இருக்கு. அதில் அவங்க போட்டோவும் இருக்கு. பாருங்க. பார்த்துட்டு நீங்களும் அந்த இளமையின் ரகசியம் கேள்வியை கேளுங்க. நானும் கேட்டுட்டேன். ரோஸும் கேட்டாச்சு. பதில் இன்னும் வரல. செல்வி(அக்கா) மேடம் கொஞ்சம் அந்த ரகசியத்தை சொல்லுங்க.

உண்மைய சொல்லுங்க!!
இது எப்ப எடுத்த போட்டோ!!
நான் எப்படி செல்வியம்மான்னு கூப்பிடறது...
இப்ப உள்ள போட்டோ அனுப்பி வையுங்க!!

தேவாவுக்கு நன்றி

செல்வி அக்கா(Miss அருசுவை) போட்டோ எடுத்து கொடுத்த தேவாவிற்கு நன்றி. கண்டிப்பாக அவர்களுடைய இளமையின் இரகசியத்தை சொல்ல வேண்டும் ஏனென்றால் அவர்களுக்கு பட்டம் கொடுத்திருக்கிறேன் அல்லவா?

ஜானகி

ஒரே யோசனை!! இப்போ கன்ஃபாம் ஆகிவிட்டது
போட்டோ அனுப்புவதில் ஒரு விஷயம் வலைதளம் என்பதாலும் நாம் யாருக்கும் தெரியாமல் சில விஷயங்களை பேசுவதாலும் ஒரு நிம்மதி இருந்தது.
போட்டோ அனுப்பி நமக்கு தெரிந்தவர் அது யாராக இருந்தாலும் போட்டு கொடுத்து விடுவார்களோ என்று பயமும் உள்ளது.
அதுவும் செல்வியம்மா (யம்மா!!)வின் போட்டோவை பார்த்தபின் அனுப்புவது ஒரு கொலை குற்றத்தைவிட கடுமையானது என்பதால் அது தடைவிதிக்கப்பட்டுள்ளது(எனக்கு மட்டும்).

ஆமா சுபா அதான் நான் அனுப்பல படத்தை...

தளிகா:-)

அன்புள்ள தேவா,
நலமா? பையன் நலமா?
இன்னும் குழப்பமா, என்னை எப்படி கூப்பிடறதுங்கறதுல?
உங்களுக்கெல்லாம் தெரிந்த அளவுக்கு எனக்கு அழகுக்குறிப்பெல்லாம் தெரியாதுப்பா! சொல்லப்போனா என்னைக் கவனிச்சுக்கிறதுல நான் சரியான சோம்பேறி. மனசுல மட்டும் நான் எப்பவுமே எனக்கு வயசாயிடுச்சேன்னு நினைக்கவே மாட்டேன்.(முப்பதை தாண்டவே மாட்டேனே!). அப்புறம் பிசிராந்தையார் சொன்ன மாதிரியெல்லாம் நான் சொல்லமாட்டேன். இருக்கு(இருந்தது) எனக்கும் பிரச்னைகளும், கவலைகளும்.
அப்பல்லாம் ஃபீனிக்ஸ் பறவையைத்தான் நினைத்துக் கொள்வேன்(கற்பனைப் பறவையாக இருந்தாலும் கூட). எந்தக் காரியத்தையும் முடியாது என்று நினைக்கவே மாட்டேன்.
இன்னும் சில கடமைகள் நமக்காக காத்திருக்கிறது, அதை முடிக்கும் வரை வயசே ஆகக்கூடாது என நினைத்துக் கொள்வேன். நிறைய பேர் அப்படி இருக்கிறார்கள்.

நீங்கள்ளாம் என்னை வயசான மாதிரி கற்பனை பண்ணி வைத்திருந்ததால நான் இளமையா இருக்கிற மாதிரி உங்களுக்கு தெரியறேன், அவ்வளவுதான்.
மீண்டும் பேசுவோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சுபா,
நலமா? எப்ப ஊருக்கு வர்ர? முடிந்தால் பாண்டிச்சேரி வர முயற்சி செய்.
சத்தியமா இப்ப எடுத்த போட்டோதான்ப்பா அது. வேணும்னா அட்மினைக் கேட்டுப்பார், தேதியுடனே அனுப்பி வைச்சேன் தெரியுமா? எப்படின்னாலும் நீ செல்வியம்மான்னு கூப்பிடலாம். இதிலும் உங்க அம்மா மாதிரி ஒற்றுமை இருக்கா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் ஜானு,
காலையில இருந்தே ஒரே குளிர், காய்ச்சல். முதல்ல ஏன்னே தெரியல. அப்புறம்தான் தெரிஞ்சுது,உங்கள் அனைவரின் அன்பு மழையில் நிறைய நனைஞ்சுட்டேன்னு.
இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும், நன்றி என்று சொல்வதைத்தவிர?
ஆஹா! என்ன அருமையான பட்டம்! அவங்க அவங்க கஷ்டப்பட்டு எத்தனை கட்டங்களைத் தாண்டி பட்டம் வாங்கினா, எனக்கு கஷ்டமே பட்டம் கொடுத்தா வேண்டாம்னா சொல்லப்போறேன்?(வேறு யாரும் ஆட்சேபிக்காத வரை).
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்