முட்டை சோறு (கர்ப்பிணி பெண்களுக்கு)

தேதி: October 18, 2007

பரிமாறும் அளவு: ஒரு நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

முட்டை - இரண்டு
பூண்டு - ஒன்று பெரியது
நல்லெண்ணெய் - ஒரு சிறிய குழிக்கரண்டி
வெங்காயம் - பாதி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு ஏற்ப
சாதம் - கையில் ஒரு குத்து
நெய் - அரை தேக்கரண்டி


 

முட்டையில் உப்பு மஞ்சள் தூள் போட்டு அடித்து தனியாக வைக்கவும்.
மிளகு சீரகத்தை தட்டி அதில் போட்டு கலக்கவும்.
வெங்காயம், பூண்டு இரண்டையும் நல்ல பொடியாக அரிந்து கொள்ளவேண்டியது.
ஒரு தவ்வாவில் நல்ணெண்ணையை ஊற்றி வெங்காயத்தையும், பூண்டையும் நல்ல வதக்கி அடித்து வைத்திருக்கும் முட்டையை அதில் ஊற்றி பறத்தவும்.
பிறகு தோசை திருப்புவது போல் திருப்பவும். இரண்டு பக்கம் வெந்ததும் ஒரு குத்து சாதம் போட்டு அரை தேக்கரண்டி நெய் விட்டு நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொடுக்கவும்.


ஒன்பதாவது மாதத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட வேண்டும்

மேலும் சில குறிப்புகள்


Comments

மேடம் தங்களின் முட்டை சோறு செய்முறை பார்த்தேன்.அதில் தேவையானப் பொருட்களில் சாதம் கையில் ஒரு குத்து என்ற அளவு கொடுக்கப்படுள்ளது. அது என்ன அளவு என்று தயவுசெய்து விளக்கவும்.மேலும் இந்த சாதத்தை ஒன்பதாவது மாதத்தின் ஆரம்பம் முதலயே சாப்பிட ஆரம்பிக்கலாமா.விளக்கவும்.

நன்றி
ஜோவிட்டா.

டியர் ஜோவிட்டா
நீங்கள் கர்பமாக இருக்கிறீர்களா வழ்த்துக்கள்.
சாதம் ஒரு குழிகரண்டி அளவு, குழந்தை பெறுவதற்கு பத்து நாள் முன்பிலிருந்து ஒரு நாள் விடு ஒரு நாள் சாப்பிடவும்.
சுகபிரசவம் ஆக பூண்டு பால், சுக்கு பால் போன்றவை குடிக்கலாம்.
பொரித்த முட்டை அதிகமாக இருக்கனும் சாதம் கம்மியாக இருக்கனும்.
ஜலீலா

Jaleelakamal

டியர் ஜோவிட்டா
நீங்கள் கர்பமாக இருக்கிறீர்களா வழ்த்துக்கள்.
சாதம் ஒரு குழிகரண்டி அளவு, குழந்தை பெறுவதற்கு பத்து நாள் முன்பிலிருந்து ஒரு நாள் விடு ஒரு நாள் சாப்பிடவும்.
சுகபிரசவம் ஆக பூண்டு பால், சுக்கு பால் போன்றவை குடிக்கலாம்.
பொரித்த முட்டை அதிகமாக இருக்கனும் சாதம் கம்மியாக இருக்கனும்.
ஜலீலா

Jaleelakamal