வெளிநாட்டு வாழ்க்கையா, இந்திய வாழ்க்கையா? உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது எது?

மன்றத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட ஒரு விவாதத்தின் தொடர்ச்சியாக இதனை எடுத்துக்கொள்ளலாம். மேற்கொண்டு இங்கே கலந்துரையாடலாம். தயவுசெய்து இந்திய தேசப்பற்றினை காண்பிக்கின்றேன் என்று ஒரேடியாக "இந்திய வாழ்க்கைதான் பிடிக்கும்" என்று கருத்துக்கள் வைக்க வேண்டாம். உங்கள் மனதைத் தொட்டு உண்மையான கருத்துக்களை எடுத்து வையுங்கள்.

கேட்ட சர்டிபிகேட்ஸ், கேட்காத காகிதங்கள், கிடைக்குமா கிடைக்காதா தவிப்பு, கிடைப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை எப்படியாவது செய்தல், எதை இழந்தாவது இதை பெற வேண்டும் என்ற ஆர்வம், அப்படி இப்படி எல்லா பகீரதப் பிரயத்தனமும் செய்து, ஒருவழியாய் க்ரீன் கார்டு வாங்கி அப்பாடா என்று மூச்சுவிட்டுவிட்டு, இப்ப சொல்றேன், இந்தியா மாதிரி ஒரு நாடு, அங்க உள்ள வாழ்க்கை உலகில் எங்கேயும் இல்லை என்று உங்கள் தேசப்பற்றைக் காட்டி புலங்காகிதம் அடையச் செய்யவேண்டாம்.

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.." என்று கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

வெறும் பணத்திற்காக மட்டும்தான் நீங்கள் வெளிநாட்டில் வசிக்கின்றீர்களா?

அப்படி பணத்திற்காகத்தான் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் இந்தியாவில் யாரும் சம்பாதிப்பதே இல்லையா? இல்லை இந்தியாவில் சம்பாதிக்க எனக்கு திறமை இல்லை என்பதை ஒத்துக் கொண்டு நீங்கள் வெளிநாடு சென்றீர்களா? இல்லை உங்கள் திறமைக்கு இங்கே அங்கீகாரம் இல்லை என்று நினைக்கின்றீர்களா?

இந்தியாதான் சிறந்த நாடு என்பவர்கள் வேறு வழியில்லை, இங்கே பிறந்துவிட்டோம், அதனால் அப்படித்தானே சொல்லியாக வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்கின்றீர்களா?

உண்மையில் இந்தியாவில் உங்களுக்கு பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? பிரச்சனைகள் என்ன? தீர்வுகள் என்ன?

இந்தியா வளரும் நாடு என்று சொல்லியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்ள போகின்றோம். எந்த நாடு வளராத நாடு? எந்த நாடு வளர்ந்து முடிந்துவிட்ட நாடு? எல்லா நாடுகளுமே வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள்தானே.. நாம் ஒரு படி ஏறுவதற்குள் மற்றவர்கள் நான்கு படி மேலே போய்விடுகின்றார்களே.. ஏற்கனவே ஒரு பெரிய இடைவெளி இருக்கின்றது. இதில் முன்னேற்ற விகிதம் இப்படி 1:4 என்று இருந்தால் நாம் என்று அவர்களை தொடுவது? இதற்கு என்ன செய்யவேண்டும்? எங்கே தவறுகள்?

அனைத்தையும் ஆராயலாம்.. வாருங்கள். எழுதிடுங்கள் உங்கள் எண்ணங்களை..

அன்பின் பாபு அண்ணாவிற்கு,
விவாதத்தில் பங்குகொள்பவர்கள் இந்தியாவை மாத்திரம்தான் தாய் நாடாகக்கொண்டிருப்பார்கள் என்றில்லை,இலங்கையைத்தாய் நாடாகக் கொண்டவர்களும் அறுசுவையின் உறுப்பினர்களாகவுள்ளனர். கருத்தெடுப்பிலும் அயல் நாடா அல்லது இந்தியாவா என்பதிலும் பார்க்க அயல் நாடா சொந்த நாடா என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி,
சாந்தா.

எனக்கு இரண்டும் பிடிக்கும்...இங்கு ஒரு வகையில் என்றால் அங்கு ஒரு வகையில் பிடிக்கும்...இங்கு பிடித்ததற்கு முதல் காரனம் ப்ரைவசி பிடித்தது....ஆனால் இங்கயும் தொல்லை என்று வந்தால் அதுவும் உறனினர்களாகத்த் தான் இருப்பார்கள்....ஒரு சில நல்ல உறவினர்களை இங்க்ய் வந்தால் பார்க்க முடியாதேஙர வருத்தம் எப்பவும் இருக்கு.
ஊரில் இருந்து உறவு,ஒந்தம் கூடிவாழ்தல்னெல்லாம் பேசினாலும் ஒரு கல்யானமே நடக்கட்டும் கலந்துகிட்டு வந்து எத்தனை பேர் வாயை வெச்சுட்டு சும்மா இருக்கோம்..பந்தி முதல் ,மாப்பில்லைக்கு முடியில்ல ,பொண்ணுக்கு பல்லில்லைன்னு ஒரே ஜட்ஜ்மென்ட் வீட்ட்ல வந்ததும்..
இங்க அப்படியில்ல..எப்பவாவது ஒரு கெட் டுகெதெர் இருந்தாலும் போய்ட்டு வந்தா நிம்மதியா யாரையும் குறை சொல்லாம தூங்கலாம்.
திருமனமான தம்பதியருக்கு ப்ரைவசி வேனும்னா வெளினாடு தான் பெஸ்ட்...நான் ஊர்ல இருக்கப்ப காலைல 6 மணிக்கு மாமியார் வீட்ல கொஞ்சம் அதிகப்ப்ரசங்கி பாட்டிக படையெடுத்துவாங்க.....அப்ரம் ஒரே ரேகிங் என்கிட்ட மெல்ல"சீக்கிரம் எழுந்தியா?என்ன சமையல்?வீட்ல நல்ல சமைப்பியா?வேலை செய்வியா???"ன்னு என்கிட்ட கொஞ்சம் கலெக்ட் பன்னிட்டு என் மாமியார்ட போய்" இப்ப தான் எழுந்த மாதிரி இருக்கு மருமக?சமையல் யார் செஞ்சா"அப்டி சும்மா இருக்கர மாமியாரையும் பத்ரகாளியா மாத்தரதுகுன்னே ஒரு கேங் ரெடியா இருக்கும்....இங்க அப்படியில்லை எனக்கு உடம்பு சரியில்லைனா என் கனவரே எழுந்து டீ சாப்பிட்டு ப்ரெட் டோஸ்ட் பன்னி சாப்பிட்டுட்டு போயிடுவாரு.
நாங்கள் இங்கு வசிப்பது பணத்திற்கும் இன்னொன்று அமைதி....ஊரில் வெகேஷனுக்கு வந்தால் 1 மாசம் தூங்குவதே இல்லை.....படுத்தால் ஜன்னல் வழியே உருவம் போல தெரியும்,யாராவது ரத்திரியில் இருமினால் கூட அலறி ஓடுவோம்..
அப்ரம் வெளிய போகும்போது ஹேன்ட்பேகை இருக்க புடிச்சுக்கனும்...கழுத்தில் கவரிங் தான் போடனும்.....பயனத்தின் போது எப்ப எந்த வன்டி முடும்னு கடவுளை வேன்டிக்கிட்டே போவனும்.....அப்ரம் அங்க இங்க குன்டு வெடிச்சா அப்ரம் 4 மாசத்துக்கு தூக்கமே இல்ல.
இங்க அப்படியில்லை தனியா ராத்திரி 2 மனிக்கு ஒரு பெண் போவலாம்..காந்தித்தாத்தா சொன்னதென்னவோ இங்க தான் சரிப்படுது...நம்ம ஊர்ல போனா அப்புரம் முள்ளுக் காட்டுல சாக்குபைல நம்மளை சுருட்டி போட்டுவாங்க.
இப்ப 1 வாரமா தமிழ்நாட்டில் படும் கஷ்டம் மின்சாரப் பற்றாக்குறை..அது இங்க இல்ல.....இன்னக்கி ராத்திரி தூங்கினா வேனும்னா நாளைக்கி ராத்திரி வரை படுத்து தூங்கலாம் அந்தளவு மனசில் நிம்மதி..வேறென்ன திருடன் ,கொள்ளை,கொலை பயமில்லாததால தான்..அப்பவும் மனசில் வரும் கவலை நம்ம அன்பான சொந்தங்கள் அங்க என்ன பாடுபடுராங்களோன்னு தான்.
ஒன்னொரு நல்ல பழக்கம் நம்மாளுகள்ட்ட காலம்,நேரம் தவராமை..அடடடடாஅ என்ன ஒழுக்கம் ஒரு கடைக்கு போனா 10 நிமிஷ வேலைக்கு 30 நிமிஷம் வேனும், ஒரு பேன்குன்னா 1 மனிநேரம்,,ஒரு ஆட்டோ கூபிட்டா ஆட்டோக்காரன் பைலட்டை விட பந்தா வுடுவான்...பயனிக்க எவ்வளவுன்னா சாவுகிராக்கின்னு பேர் வேற எனக்குத் தேவையா?எங்கம்மா அப்பா என்னை வளத்தது யாரோ இப்படி கூப்பிடவா?
ஒரு பஸ்ல போக முடியுமா???இப்ப வும் நான் நெனச்சு பயந்து போயிடுவேன்....நான் 8 ஆவது படிக்கிரப்ப பஸ்ஸில் கன்டக்டர் குட்டட்டில் என் ச்கேர்டை காலால் மிதிச்சுட்டு என்னை ஒரு லுக்....அப்ப ரெண்டு அரை விட தைரியம் இல்லை....அப்ப பயந்துட்டே நான் பஸ்ஸை விட்டு இறங்கரப்ப முதுகில் ஒரு தட்டு தட்ட்டினான் ..நான் பயந்துட்டே வீட்ல போய் சாப்பிடவும் இல்ல....இதுவெல்லாம் இங்க நடக்காது நடந்தாலும் தைரியமாய் ரியாக்ட் பன்லாம்...சபோர்ட் நமக்குத் தான்..நம்ம ஊர்ல பொம்பளைக தைரியமா போலீஸ் ஸ்டேஷன் போக முடியுமா?
எத்தனை விஷயங்கள் சட்டப்படி தப்புன்னு தெரிஞ்சும் நாம கம்ப்லெயின்ட் பன்ரோம்??இங்க அரிசியில் ஒரு கல்லு கிடைச்சாலே கூப்பிட்டு கத்துர கத்துல 1 மூட்டைஇ அரிசி விட்டுக்கு வந்துடும்.....இன்னும் இருக்கு..இப்ப எழுதிட்டே இருந்தா கனவர் என்னை இந்தியாவுக்கே அனுப்பிடுவார்..அப்ரம் வரேன்

தளிகா:-)

சகோதரி சாந்தா அவர்களுக்கு,

இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் முறை இப்படி எல்லாவற்றிலும் இருந்து தற்போதைய இலங்கை நிறைய வித்தியாசப்படுகின்றது. இரண்டையும் ஒன்றாக்கி இங்கே விவாதிக்க இயலாது. ஆகவே தற்போதைக்கு ஒரு நாட்டை மட்டும் எடுத்துக் கொண்டு இங்கே அலசலாம். எனவே இதை இந்தியர்களுக்கு மட்டுமான விவாதம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள்.

மலேசிய தமிழர்கள், சிங்கை தமிழர்கள், மொரீஷியஸ் தமிழர்கள் என்று அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் நிறைய பேர் இந்த தளத்தினைப் பார்வையிடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் தாய்நாடு அவர்கள் பிறந்த நாடுதான். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பொதுவாக தாய்நாடு என்று குறிப்பிட்டால் அடுத்து ஒவ்வொருவரும் அவர்கள் நாட்டு சிறப்பினை பேச ஆரம்பித்துவிடுவர். எனவே இந்த விவாதத்தை, இந்தியாவா மற்ற முன்னேறிய நாடுகளா என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிக் கொள்ளலாம்.

என்னை பொருத்த வரை இந்தியா அழகான நாடு..எல்லா வளமும் உண்டு.ஆனால் அங்கு மனித்ர்கள் எழுதிய சட்டம் சரியில்லை.ஓட்டைகள் நிரைந்த சட்டம்..பணம் இருந்தால் போதும் எப்படி வேணா வளைச்சுக்கலாம்.திறமை உள்ளவர்கல் ஆள முடியாது.பணம் உள்ளவர்கள் ஆளலாம்.
திருடுவது மிகப் பெரிய குற்றம்.ஆனால் அன்கு சாதரணமாக இருக்கிரது.அதற்குறிய தண்டனயும் அவர்களை திருத்துவதில்லை.திருட்டின் மூலம் எத்தனை உயிர்கள் போயிக்கிரது.எத்தனை திருமணம் நின்று இருக்கிரது.எத்தனை குடும்பங்கள் சிதைந்து உள்ளது.கஷ்டப்பட்டு சம்பாதித்து, உழைத்து சேர்த்தவற்றை ஒரு நாளில் சுருட்டிக் கொண்டு போயி விடுகிரான் திருடன்.6மாசத்தில் வெளியே நல்லா வாழ ஆரம்பிக்கிரான்.பணம் தேவைப்பட்டால் மருபடியும் அதே வழி அதானே ஈஸியான வழி?அவனுடய ஒரு கையை எடுத்தால் மருபடியும் அந்த பக்கம் போவானா?அவனுடய வாரிசை தவறான வழியில் போக விடுவானா?
திருடனை பிடித்துக் கொடுத்து விட்டாலும் அவன் திருடிய நகை பணம் பேப்பரில் மட்டும் அப்படியே வரும்..சம்பந்தப்பட்டவர்கலிடம் அப்படியே கொடுத்து அனுப்புகிரார்கள் என்று நினைக்ரீர்களா?அதில் பாதித்தான் வரும்.அவர்களுடய உழைப்புக்கு பரிசாக எடுத்துக்கு கொல்கிரார்களாம்.அப்ப சம்பளம் அதற்கு என்று தெரியவில்லை?
திருட்டுக்கே இவ்வளவு கோல் மால் நடக்கிரது அங்கே?மற்ற விஷயத்தை அலசினால் ரொம்ப மோசமாக இருக்கும்..எனக்கும் சிறு வயதில் நிரய்ய கொடுமை நடந்து இருக்கிரது.அதை தைரியமாக வெளியில் கொன்டு வர முடியுமா?சம்பந்தப்பட்டவர்கல் அதற்கான தகுந்த தகுந்த தண்டனை அடைவார்களா?
என்னைப் பொறுத்த வரை சட்டம் கடுமையாக இருந்தால் அந்த நாடு நோக்கி எல்லோரும் தைரியம்மாக வருவார்கள்.மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
இந்தியாவுடய அழகுக்கு 12மாதமும் சுற்றுலா துறையாக பல நாட்டினரை அழைக்கலாம்..எவ்வளவு மோசமாக ஆக்க முடியுமோ அவ்வளவு குப்பையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டமும் சரியில்லை..நாட்டை ஆள்பவர்களும் சரியில்லை..
விலங்குகளுக்கு கொடுக்கும் பாதுகாப்புக் கூட மனிதர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.வெளிநாடு நோக்கி படையெடுக்க இதுதான் காரணம்..மக்கள் நிம்மதியை விரும்புகிறார்கள்..ஆட்சியாளர்கள் அவர்களுடய நிம்மதியை மட்டும் விரும்புகிரார்கள்.அவர்களை சுற்றிப் பாதுகாப்பு இருக்கிரது..ஆனால் சாதாரண மனிதனுடய வீட்டை சுற்றி என்ன இருக்கிரது?சட்டம் கடுமயாக இருந்தால்தானே அவனுக்கு பாதுகாப்பு இருக்கும்.எல்லா மனிதருக்கும் ஒரே ரத்தம் தானே ஓடுகிரது?அவர்களுடய உயிர் எவ்வளவு முக்கியமோ ..அதேபோல்தான் சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் உயிரும் அவனுடய குடும்பத்துக்கு முக்கியம்.இதை அவர்கள் இன்னும் உணர்ந்துக்கொள்ளவில்லை..

mub

அண்ணா காலையில் இருந்து உள்ளே நுழைந்து மன்ரத்தில் டைப் பண்ண முடியவில்லை
லாகின் கேக்குது
ஜலீலா

Jaleelakamal

அனிதா
வயற்றூ எரிச்சலுக்கு ஹெல்ப் கேட்டு இருந்தார்கள் முதலில் காரம் சுத்தமாக சாப்பிடகூடாது, ஜவ்வரிசி கஞ்சி ,இனிப்பு காரம் எதுவாக இருந்தாலும் ஒரு முப்பது நாற்பது நாளைக்கு குடிக்க செல்லுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

திருமணம் ஆனதிலிருந்து பல்வெறு நாடுகளில் வசித்து வந்திருக்கிறேன். தளிகா சொன்னதில் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு வெளிநாடு சொர்க்கம்தான். ஆனால் ஒரு குழந்தை பிறந்து அது பள்ளி செல்லும் பருவம் வரும்போதுதான் சில உண்மைகள் புலப்படும். ஒருவன் என்னதான் வெளிநாடுகளில் நல்ல செல்வாக்குடன், பணத்துடன் வசித்து வந்தாலும், அது அவனுக்கு மன நிம்மதி கொடுத்தாலும்,சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வசிக்கும் அனைவரும் எப்போதும் அந்த நாட்டில் செகண்ட் சிட்டிசனாக இருக்க முடியுமே தவிர அவர்களில் ஒருவராக எப்போதும் கலக்க முடியாது. கலாச்சாரம், பண்பாடு, பண்டிகை, பழக்க வழக்கம் என்று அவர்களிலிருந்து நாம் வேறுபட்டுதான் தெரிவோம். அவர்களோடு என்னதான் பின்னிப் பிணைந்து நட்பு பாராட்டினாலும் இது போன்ற சமயங்களில் அவர்களிடமிருந்து நாம் தனித்து இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

நாம் குடும்பமாக எங்கு வசித்தாலும் அது நமக்கு சந்தோஷத்தையே தரும். அது வெளிநாடாக இருந்தாலும் சரி, நம் நாடாக இருந்தாலும் சரி. இத்தனை நாள் இங்கே ஆஸ்திரேலியாவில் கூட்டுக் குடும்பமாக நான் என் தம்பி, அப்பா, அம்மாவோடு வசித்தபோது மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் குழந்தைகள் ஸ்கூல் செல்லும் பருவம் வரும்போது அவர்கள் மனது படும் கவலைகளை நம்மால் நிச்சயம் உணர முடியும். பெரியவர்களாகிய நமக்கே சில சமயங்களில் இவர்களுடன் எல்லா விதத்திலும் ஒத்துப் போகாத போது நம் இந்தியக் குடும்ப சூழலில் வளரும் குழந்தைகள் மிகவும் சஞ்சலத்துக்குள்ளாகிறார்கள். நான் இதுவரை பார்த்த முக்கால்வாசி இந்தியக் குடும்பங்களின் குழந்தைகள் ( பல வருடங்களாக வெளிநாட்டில் வசிப்பவர்கள்) ஒரு வித ரெண்டுங்கெட்டான் மனநிலையில்தான் இருக்கிறார்கள். இவர்களோடும் முழுதாக சேர முடியாமல், நம் நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றாலும் அங்குள்ள குழந்தைகளோடு முழுதுமாக கலக்க முடியாமல் இருக்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள் நமது மொழியை பேசும்போது ஒரு வித திக்குவாய் வந்ததுபோல் தமிழை கடித்து குதறுகிறார்கள்.

நம் நாட்டில் சம்பாதிப்பதைவிட வெளிநாட்டில் நல்ல சம்பாத்தியம் என்றுதான் அங்கே செல்ல நினைக்கிறார்கள். ஆனால் இப்போது நமது நாட்டில் IT துறையில் இருப்பவர்கள் வெளிநாட்டு சம்பளத்தை இந்தியாவிலேயே வாங்குகிறார்கள். செலவு இந்தியாவில் கம்மி. பேருக்கு வெளிநாட்டில் இருந்து கொண்டு இங்கே அதிகம் செலவழித்துக் கொண்டு நாம் சேமிப்பது என்னவோ கொஞ்சம்தான். இதற்கு விலையாக நாம் பலவற்றை கொடுக்கிறோம். வீட்டில் இருக்கும் ஹவுஸ் ஒய்பை விட( ஏனென்றால் நான் அப்போது இந்தளவு உணர்ந்ததில்லை) வேலைப் பார்ப்பவர்களுக்கு இந்த வித்தியாசம் நன்றாகவே புலப்படும். குழந்தைகளின் படிப்புக்கு, எதிர்காலத்திற்கு நல்லது என்று பார்த்து பார்த்து செலெக்ட் செய்து இந்த நாட்டிற்கு வந்தோம். வந்த பிறகே, நம் நாட்டின் படிப்பு எதற்கும் குறைந்ததில்லை என்ற உண்மை புலப்படுகிறது. என் தம்பி இங்கேயே படித்து, வேலை பார்க்கின்றான். ஆனால் இங்கே படிக்காமல் இந்தியாவில் படித்ததை வைத்து வேலைப் பார்க்கும் எனக்கு அதைவிட சம்பளம் அதிகம். மேலும் நம் நாட்டு குழந்தைகளிடம் உள்ள இண்டெலிஜன்ஸ் இங்கே குறைவே.

நான் வெளிநாட்டில் இழப்பவற்றைப் பற்றி நினைக்காமல் இங்கே இருக்கும் பகட்டைப் பார்த்து ஏமாந்துதான் போகிறோம். அம்மா என்னதான் வயசானாலும், அழகில்லாவிட்டாலும் அம்மாதான். அந்த பாசத்தை யாரும் காட்ட இயலாது. முகம் அழகாக, மேக்கப் செய்து கொண்டு வரும் ஒருவரை அம்மாவாக நினைக்க முடியுமா? நமது பண்டிகை கொண்டாட்டங்கள், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தாத்தா, பாட்டி பாசம், வீட்டு வேலைகளை நாமே செய்து கை ரேகை அழிந்து போவது, ஆபத்துக்குக் கூட உதவாத அக்கம் பக்கம்( அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு 911 ம் , ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களுக்கு 000 ம் தான் ஆபத்துக்கு உதவுபவர்கள்), நமது நாட்டு கலாச்சார உடுப்பு, கோயிலுக்கு செல்வது, தினம் பூ வைத்துக் கொள்வது, ஸ்கூலில் நமது குழந்தைகள் மனதில் தோன்றும் எண்னங்களை முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமலிருப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக இங்கே குறைந்த படிப்பு படித்தவனும் நமது வேலையைப் பார்ப்பான். அதில் அவன் செய்யும் தவறுகள் பெரிது படுத்தப் படாது. நம் நாட்டில் சிபாரிசில் வேலைப் பார்ப்பவனாக இருந்தாலும் அவனுக்கு குவாலிபிகேஷன் முக்கியம். கணவரிடம் இதனைப் பற்றிக் கேட்டால் நிச்சயம் புரியும். எனக்கு ஆஸ்திரேலியாவில் எல்லாம் பிடிக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவிலேயே என் வாழ்க்கையை தொடர வேண்டும் என்று நினைக்க முடியவில்லை. காரணம் நான் பிறப்பாலும், வளர்ப்பாலும் ஆஸ்திரேலியன் இல்லை.

நம் நாட்டில் உறவினர்கள் வீட்டில் தங்க முடியாத கதை இருக்கட்டும், நாம் இங்கே வெளிநாட்டில் நமது வீட்டிற்கு யாரவது இந்தியாவிலிருந்து சொந்தம்( அப்பா, அம்மா தவிர) வந்து ஒரு 30 நாள் தங்குகிறேன் என்றால் ஒத்துக் கொள்வோமா. அப்படியே அவர்கள் வந்து தங்கினாலும் எத்தனை புலம்பல், எத்தனை எரிச்சல் வரும். நாங்களே இரண்டு பேரும் வேலைப் பார்க்கிறோம், இங்கே செலவு அதிகம் , இதில் இவர்களின் தொல்லை வேறு என்பதுதான் பலரின் புலம்பலாக இருக்கக்கூடும். அதே நிலைதான் நமக்கும் இந்தியாவில் ஏற்படுகிறது. கணவன் வழி சொந்தங்களில் இந்த நிலைமை அதிகமாகவே இருக்கும். குற்றம் பார்க்கின் சுற்றம் பாழ் என்பது வெளிநாட்டில் இருந்தாலும் சரி, இந்தியாவில் இருந்தாலும் சரியே. வெளிநாட்டில் பல வருடமாக வசித்து வருபவர்கள் , தனது குழந்தைகள் பெரியவர்களாக ஆனவுடன் , பெண் , மாப்பிள்ளை தேடும்படலத்தை ஆரம்பிப்பார்கள். அப்போது இந்தியாவில்தான் தனது தேடலை நடத்துகிறார்கள். பலருக்கு அப்போது உறவினர்கள் தயவு இல்லாமல் மிகவும் கடினம். அவர்கள் படும் கஷ்டங்களை அவர்களிடம் கேட்டால் தெரியும். வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்பதால் நம் நாட்டில் அத்தனை தொடர்புகள் இல்லாமல் , அங்கு வசிக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உதவியை நாட வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் அப்போது பிரச்சனைகளே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயமிருக்கிறது. ஆனால் அதில் பல விஷயங்கள் நாம் பிறந்தது முதல் பார்த்து பழக்கப்பட்டது. நமது வீட்டிலும் நாட்டிலும் ஒரே கலாச்சார முறைதான். பழக்க வழக்கங்கள் சிறிது வேறுபட்டாலும் அடிப்படையான விஷயங்கள் அனைவருக்கும் ஒன்றுதான். அங்கே ரோடு சரியில்லை, தண்ணீர் இல்லை என்று சொன்னால அப்போது நம் நாட்டில் வசிப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா. நம் பெற்றோர் அங்கேதானே இருக்கிறார்கள். இந்தியாவில் யாரும் சந்தோஷமாக இல்லையா? நாமும் அங்கிருந்து வந்தவர்கள்தானே. கண்ணகியை விட்டுவிட்டு, மாதவியிடம் சென்ற கோவலன,எல்லாம் இழந்து மனைவியிடம் திரும்பி சென்ற நிலைமையைப் போல், வயதானவுடன் பலருக்கு உண்மைகள் புலப்படலாம்( ஒரே வித்தியாசம் நாம் இழப்பது பணமாக இருக்காது.). அப்போது மனம் ஏங்கலாம். பல வருடங்களாக வெளிநாட்டில் வசிக்கும் பல இந்திய தம்பதியினரைப் பார்த்திருக்கிறேன். நம்மைப் பார்த்தால் பேசுவார்கள். தொடர்ந்து சிலரிடம் பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் சுற்றம், உறவு என்று வாழ எத்தனை ஆசையாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.அவர்களிடமெல்லாம் செல்வம் கொட்டிக் கிடக்கின்றது. ஆனாலும் சந்தோஷமில்லை. குழந்தைகள் வெளிநாட்டிலேயே வளர்ந்தவர்கள் என்பதால் நம் நாட்டினரைப் போல பாசத்தை வெளிப்படுத்தவும் தெரியாது. வெளிநாட்டில் குப்பைத் தொட்டியை தேடிச்சென்று குப்பை போடும் நாம் நம் நாட்டில் அப்படி செய்ய வேண்டும் நினைத்திருக்கிறோமா. பெண்களுக்கு ஏற்படும் செக்ஷுவல் அப்யூஸ் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. கணவனோடு வீட்டில் வசிக்கும்போது அத்தனை தெரியாது. அதற்காக அது வெளிநாட்டில் இல்லை என்று சொல்ல முடியாது. ஓட்டு போடப் போகாமல் வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு நாம் அரசியல்வாதிகளை குறை சொல்லி பலனும் இல்லை. என் நாடு இப்படிதான். அது எப்படி இருந்தாலும் நான் அங்கே ராஜா. முதல் குடிமகன். வெளிநாட்டில் எத்தனை பெரிய பதவி வகித்தாலும் வீட்டில் வேலைக்காரியாய் எல்லாம் நாம்தான் செய்ய வேண்டும். அங்கே ஓட்டுப் போடும் உரிமை கூட கிடையாது. அக்கம் பக்கம் புறம் பேசும் பேச்சை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் போதும். இந்தியா சொர்க்கம்தான். வெளிநாட்டில், அவர்களைப் போலவே 100% மாறி வாழ்ந்தால் மட்டுமே வெளிநாடு சொர்க்கமாக இருக்கும் என்பது என் கருத்து.

எது பிடிக்கும் என்ற கேள்விக்கே இத்தனை பெரிய பதில் அடித்துவிட்டதால் பிடித்த இந்தியாவில் என்ன செய்தால் மாற்றம் ஏற்படும் என்பதை எழுத நேரமில்லாமல் போய்விட்டது.

இந்த விவாதத்தில் நான் தேவாவை வழிமொழிகிறேன். இங்கு பிரைவிசி இருந்தாலும் பெற்ற 1 மாத குழந்தையை கூட தனி ரூமில் வைக்கிறார்கள். இங்கேயும் குற்றங்கள் நடக்க தான் செய்கிறது. இங்கு இவர்கள் என்ன Rules சொன்னலும் நாம் பின் பற்றுகிறோம் ஆனால் இந்தியாவில் இருந்தால் அதை செய்வது இல்லை.

ஜானகி

வாக்கெடுப்பில் மட்டும் இந்தியா பக்கம் கை போயிடிச்சு, இதுதான் தேசப்பற்றான்னு கேட்டுட்டு இப்போ இந்தியாவில் கஷ்டப்படும் சொந்தங்களுக்காக வருத்தப்படுறேன்னு சொல்றீங்களே, இது என்ன நியாயம்???

எனக்கென்னவோ நீங்க வெளிஉலகம் தெரியாம ஒரு தீவு மாதிரி இருக்கீங்களோன்னு தோணுது தளிகா...அபுதாபில எத்தனை வருஷம் இருக்கீங்கன்னு எனக்குத்தெரியல.இந்தியாவில் நடக்கும் எல்லா குற்றங்களும் இங்கேயும் இருக்குது.

ஊருக்கு வெளியே பாலைவனத்தில் கொண்டுபோய் கூட்டமாய்க் கூடி ஒரு பெண்ணைக் கெடுத்ததைப் படிக்கவில்லையா? கொஞ்சம் நாட்களுக்குமுன் 3 வயதுப் பெண் குழந்தையை சிதைத்து கன்ஸ்ட்ரக்ஷன் குப்பைத்தொட்டி அருகில் போட்டிருந்த செய்தி தெரியாதா? பெண் குழந்தைகள் மட்டுமில்லை ஆண்குழந்தைகளும் கூட இதற்குத் தப்பமுடியவில்லை என்பதாவது தெரியுமா?

லிஃப்டில் கூட குழந்தைகளை ஒற்றையாக அனுப்பமுடியவில்லை தெரியுமா உங்களுக்கு?இதையெல்லாம் வெளியில் சொல்லக்கூட பயம் சிலருக்கு.... காரணம், நாமே பொழைக்கவந்தவங்க நமக்கு ஏன் வம்பு என்பதுதான். குளிர் கண்ணாடியில் உலகத்தைப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.கொஞ்சம் வெளியேவந்து பாருங்கள்...

இன்னமும் சொன்னால் மனது பதைக்கும் விஷயங்களெல்லாம் உண்டு. ஆனால் சொல்லத் தயங்குது மனசு.

எனக்கு இந்தியாதான் பிடிக்கும். ஏன்னா நான் தான் இந்திய எல்லையைத் தாண்டியதில்லையே. அதுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. அதில ஒண்ணும் பெரிய வருத்தம் இல்ல. அதுவும் உங்களுடைய எண்ணங்களைத் தெரிந்து கொண்டதும் கொஞ்சம் கூட இல்லை.
வாழ்க்கையில காம்ப்ரமைஸ் பண்ணிண்டுதான் ஆகணும். இல்லேன்னா கஷ்டம்தான். எத்தனை பேர் மனைவியை, குழந்தைகளை இந்தியாவில் விட்டு விட்டு வெளிநாட்டிற்குப் போய் சம்பாதிக்கிறார்கள். அதற்கு குடும்பத்துடன் வெளி நாட்டில் வசிப்பது பரவாயில்லை அல்லவா?
இந்தியாவைப் பொறுத்தவரை
1. முழு முதல் குற்றவாளி அரசியல்வாதி. ஏன்னா நன்றாக அப்பாவி மக்களை ஏமாற்றத் தெரிந்துகொண்டிருக்கிறான்.
2. ஒவ்வொரு குடிமகனும் - ஒரு அரசன் அமாவாசை இரவில் தொட்டியில் பால் ஊற்றச் சொன்ன கதைதான். நான் கொஞ்சம் தப்பு செய்தால் குடியா முழுகி விடும் என்ற மனப்பான்மை. அந்நியன் போன்ற படத்திற்கே ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிச் செல்வான்.
3. சுயநலம்.
4. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை
5. தட்டிக்கேட்க பயம்
6. போலீஸ் சாம்ராஜ்யம்
7. ரௌடிகளின் ராஜ்ஜியம்
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளுமை. எல்லோரும் சமர்த்தா வருத்தப்படாம இருக்கற இடமே (தாய்நாடோ, வெள்நாடோ) சொர்க்கம்ன்னு இருங்க கண்ணுங்களா, வரட்டா
அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்