VANAKKAM DEVA..
MUGAM POLIVAAGAVUM TELIVAAGAVUM VELUPPAGAVUM KARUMPULLIGAL MARAIYAVUM ORU FACE PACK SOLLUNGAL?
KADALAI MAAVU,PANNIR,SANTHANAM,KASTHURI MANJAL & LIME JUICE
SERTHU MUGATTIRKKU POTTAAL MUDIYUMA?
NANDRI..
INDRA..
VANAKKAM DEVA..
MUGAM POLIVAAGAVUM TELIVAAGAVUM VELUPPAGAVUM KARUMPULLIGAL MARAIYAVUM ORU FACE PACK SOLLUNGAL?
KADALAI MAAVU,PANNIR,SANTHANAM,KASTHURI MANJAL & LIME JUICE
SERTHU MUGATTIRKKU POTTAAL MUDIYUMA?
NANDRI..
INDRA..
முகத்திற்கான பேக்
தினமும் முகத்திற்கு போடும் பாக்கில் நீங்கள் மேலே சொன்ன பொருட்களில் தயிரும் சேர்த்தால் நல்லது. முகம் வெளுப்பாக பேக் போடும்முன் உருளைக்கிழங்கை அரைத்து தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.தினமும் போடும் பாக்கில் முல்தானி மட்டியை தவிர்க்க வேண்டும். முகம் அதிக ட்ரை ஆகிவிடும். சந்தனம் உபயோகிக்கும்போது கடையில் வாங்கும் பவுடர் சந்தனம் உபயோகிக்காதீர்கள். அது நல்லது இல்லை. சந்தனக்கட்டை வாங்கி இழைத்து உபயோகியுங்கள். முகத்திற்கு தினமும் குளித்த பின் ஒரு கூல் வாட்டர் உபயோகித்தால் முகம் பள பளப்பாகும். அதன் செய்முறை, ஒரு லிட்டர் அளவு குளிர்ந்த தண்ணீரில் ஒரு 40-50 காம்பில்லாத பன்னீர் ரோஜாக்களைப்(சிகப்பு ரோஜாக்கள் இல்லை) போட்டு மூடிவைத்து 3 நாள் ஊற விடுங்கள். இதனை பிரிட்ஜ்ல் வைத்து குளித்தவுடன் இந்த தண்ணீரை முகம் முழுதும் தடவி உலர விட்டால் முகம் பொலிவு பெறும். பிறகு வழக்கம்போல் க்ரீமெல்லாம் போடலாம். இது என் தோழியின் அம்மா சொன்னது. நான் இந்தியாவில் இருக்கும்போது தொடர்ந்து செய்து வந்தேன். நல்ல பலன் கிடைக்கும்.
Oily Face
Tayir sertthu podalam endru sollirukkirirgal aanal en mugam ennaisarumam vulleh mugam..
nandri..
indra.
Dear Deva Madam
Dear Dava Madam
சன்தனம் முகதுக்கு போட்டால் ............ அது வரன்டு போகுமா..........அல்லது oily ya இருக்குமா? ............
leemacyril
leemacyril
எண்ணெய் சருமத்திற்கு தயிர் எதிரி
தங்களது சருமம் எண்ணெய் சருமமாக இருக்கும்பட்சத்தில் தாங்கள் தயிர் சேர்க்க வேண்டாம். உணவில் கூட தயிருக்கு பதில் மோர் சேர்த்துக் கொள்ளலாம். பேக்கில் பன்னீர் அதிக அளவு சேர்க்கலாம். இது ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும், அதே சமயம் எண்ணெய்ப் பசையின்றியும் முகத்தை வைக்க உதவும். எலுமிச்சை உபயோகிக்கலாம். ஆனால் தினமும் வேண்டாம். வாரம் இரு முறை போதும். முகத்தில் மென்மை பாதிக்கப்படும். மேலும் பருத்தொந்தரவு இருந்தால் மட்டுமே எலுமிச்சை உபயோகிப்பது அவசியமாகிறது.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளி நீங்க வெறும் துண்ணுத்திப் பச்சிலை(BASIL LEAVES) மட்டும் அரைத்துப் போட்டால் போதும்.
அரைச்ச சந்தனம் அழகு சருமத்திற்கு
ஹாய் லீமா, எப்படி இருக்கீங்க? சந்தனம் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசையை ஓரளவிற்குதான் குறைக்கும். எனவே அதனால் முகம் வறண்டு விடாது. முகத்தில் வரும் வேனல் கட்டிகளுக்கும்( உஷ்ணத்தால் வருவது), பருக்களுக்கும் சந்தனம் மிகவும் நல்லது. ஆனால் அதிகம் சந்தனம் மட்டும் தனியாக தினமும் உபயோகித்தால் முகம் கருமையடையக்கூடும். எனவேதான் கடலை மாவு, கஸ்தூரி மஞ்சளோடு உபயோகிப்பது நல்லது என்று சொன்னேன். உங்களது ட்ரை ஸ்கின்னாக இருந்தால் பாலாடை அல்லது தயிர் சேர்த்தும் குழைத்து பூசலாம்.
தேவா ரொம்ப மோசம்
தேவா இப்படி இருக்கிங்க? நான் அழகு குறிப்பு கேட்டு ரொம்ப நாளா காத்து இருக்கிறேன். இன்னும் வந்த பாடில்லை ரொம்ப மோசம். உங்க பையன் எப்படி இருக்கிறான்? நான் போன் பண்ண வேண்டும் இன்று நினைப்பேன் ஆனால் முடியவில்லை கண்டிப்பாக இந்த வாரம் பண்ணுவேன்.
ஜானகி
நான் பாவமில்லையா?
நீங்க போன் பண்ணும்போது இங்கே என்ன கூத்தெல்லாம் நடந்துச்சுன்னு சொல்றேன். அப்ப சொல்வீங்க அச்சோன்னு. இருந்தாலும் சாரி கேட்டுக்கறேன். சொன்னதை செய்யாம இருந்ததுக்கு. இப்ப என்ன , போனில் எல்லாம் சொல்றேன். சரியா. கோபம் தீர்ந்துச்சா?
பன்னீர்
Dear Deva பன்னீர் என்பதும் rose water என்பதும் ஒன்றுதானா? ஒரு பேக்கிற்கு கடலை மாவு, பன்னீர், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், lime juice, தயிர் எவ்வளவு எடுத்து சேர்க்க வேண்டும்? முகம் வெளுப்பாக பேக் போடும் முன் உ.கிழங்கை அரைத்து தடவியபின் எவ்வளவு நேரங்கள் விட்டு கழுவ வேண்டும்? உ.கிழங்கை பச்சையாகவா/அவித்தா அரைக்க வேண்டும்? உ.கிழங்கை முகத்திலிருந்து கழுவிய பின் உடனே பேக் போடலாமா?
Dear Deva, are you busy?
Dear Deva, are you busy? When you have time, please reply to me. பன்னீர் என்பதும் rose water என்பதும் ஒன்றுதானா? ஒரு பேக்கிற்கு கடலை மாவு, பன்னீர், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், lime juice, தயிர் எவ்வளவு எடுத்து சேர்க்க வேண்டும்? முகம் வெளுப்பாக பேக் போடும் முன் உ.கிழங்கை அரைத்து தடவியபின் எவ்வளவு நேரங்கள் விட்டு கழுவ வேண்டும்? உ.கிழங்கை பச்சையாகவா/அவித்தா அரைக்க வேண்டும்? உ.கிழங்கை முகத்திலிருந்து கழுவிய பின் உடனே பேக் போடலாமா? மற்றும் இன்னும் ஒரு கேள்வி Deva, எனது கைகளும், பாதங்களும் கருமை நிறமாக உள்ளன. இந்த கருமையை போக்கவும் ஏதாவது சொல்லுங்கள் Deva.