தனித்திறமை-உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் :-)

அன்பான தோழிகளே!!

தங்களின் தனித்திறமைகளை ஒரே தலைப்பின் கீழ் பதிவு செய்தால் எப்படியிருக்கும்? உதாரணத்திற்க்கு ஒவ்வொரு அங்கத்தினரும் ஏதாவது ஒருவகையில் தனித்திறமையுள்ளவர்களாக இருப்பார்கள்(நர்மதா-குறுக்குத்தையல்,பெய்ன்ட்ங், ரஸியா & தாளிகா-ஓவியம்,செல்விக்கா - சேலை அலங்காரம் ...)
ஆனால் எல்லோருடைய ஆக்கங்களையும் அறுசுவையில் படங்களாகக் கொணர்வது சிரமமே.
இதற்க்கென தனியா ஒரு பதிவை உருவாக்கி அதிலே உங்கள் ஆக்கங்களின் படத்தொகுப்பின் இணைப்பையும் கொடுத்தால் பார்ப்பவர்களுக்கும் இலகுவாக ஒரே பதிவில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
இதற்க்கு உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் :-)

அன்புடன்,

ஷாந்தா.

அன்பு சகோதரி ஷாந்தாவுக்கு!

தங்களின் ஆலோசனை செயல்வடிவில் வந்தால், அது பயனுள்ளதாகவும் நீங்கள் சொல்வதுபோல் பார்ப்பவர்களுக்கு இலகுவாகவும் இருக்கும். இதற்கு அட்மின் அவர்களின் தரப்பில் உள்ள கருத்துக்களைதான் நாம் முதலில் கேட்கவேண்டும்.

உங்களின் இந்த பதிவிற்கு நான் பதில் கொடுத்த முதல் காரணமே, ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டவே! அதாவது 'அஸ்மா & தாளிகா-ஓவியம்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இயற்கைக் காட்சிகள் எல்லாம் ரொம்ப பிடிக்கும் என்பதால் நான் சில இயற்கை ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அதற்கென்று தனி ஆர்வம் காட்டியதில்லை. இந்த அறுசுவையில் அதுபற்றி பேசியதுமில்லை. சகோதரி ரஸியாவின் ஓவியத்தைதான் என்னுடையது என்று தவறாக எண்ணிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ரஸியாவும், தளிகாவும்தான் அதில் கைத்தேர்ந்தவர்கள்! மீண்டும் அந்த பக்கத்தை பார்வையிடுங்கள். மற்றபடி ஏதோ எனக்கும் சில கை வேலைப்பாடுகள் தெரியும். வாய்ப்பு கிடைக்கும்போது அதை அறுசுவையில் பகிர்ந்துக்கொள்வேன். சரியா?

இப்படி ஒரு பதிவை திறந்ததுக்கு ரொம்ம்ம்ப நன்றி ஷாந்தா..ஆனா சரக்கு முடிஞ்சு போச்சு...ஆமாப்பா அட்மின்ட கொடுத்த படங்களில் நல்லதை அவர் போட்டுட்டார் மத்ததெல்லாம் அவ்வளவு அழகா இருக்காது...இன்னொரு நாள் நேரம் கிடைக்கிரப்ப எப்படி வரையத் தொடங்கினேன் என்ன படம்னு எழுதரேன்.சரியா

தளிகா:-)

ரொம்ப நன்றி அஸ்மா!

ஆர்வக்கோளாறினால் பெயரை மாற்றி எழுதிவிட்டேன், அதனாலென்ன நீங்களும் அதில் சளைத்தவர் இல்லையே!!!

தாளிகா!
அழகு என்பது அவரவர் பார்வையில் இருக்கிறது. உங்களுக்கு அவை (ஓவியங்கள்) சாதரணமாகத்தெரியலாம் ஆனால் எமது கண்களிற்க்கு அவை விருந்தாகட்டுமே!

சரிதானா?

அன்புடன்,

ஷாந்தா

மேலும் சில பதிவுகள்