பாகற்காய் ஸ்டஃப்டு

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாகற்காய் - 8
வெங்காய விழுது - ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
புளிக்கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப


 

பாகற்காய் மேல் தோலினை சீவி விட்டு நீளவாக்கில் கீறி உள்ளே உள்ள விதைகளையும், சோற்றினையும் நீக்கி வைக்கவும்.
பாகற்காய் மேல் மஞ்சள் தூள், உப்பு தடவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காய விழுது, பொட்டுக்கடலை மாவு, உப்பு, புளிக்கரைச்சல் இவற்றை சேர்த்து பிசறி பாகற்காயின் உள்ளே வைத்து நிரப்பவும்.
ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலக்கி அதில் பாகற்காய்களைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் வைத்து முழுமையாக வெந்ததும் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்