தீபாவளி கொண்டாட்டங்கள்

அன்புள்ள தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.அனைவரையும் தீபாவளிக்கு எங்கள் வீட்டுக்கு வருக வருக என்று அழைக்கிறேன்.உங்கள் அனைவரின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்.இந்த வருடம் தீபாவளி எனக்கு மறக்கமுடியாத தீபாவளியாக அமையும் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் நாங்கள் எங்கள் வீட்டுக்கு நண்பர்கள் அனைவரையும் அழைத்துள்ளோம்.30 முதல் 35 நண்பர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.வீட்டிலேயே சமைக்கலாம் என்று இருக்கிறேன்.அதற்கு தோழிகள் அனைவரின் ஆலோசனைகளை எதிபார்க்கிறேன்.என்ன விதமான ஆலோசனைகள் என்று கேட்கிறீர்களா?என்ன சமைத்து அனைவரையும் அசத்துவது என்று ஆலோசனை தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.அனைவரின் அலோசனைகளையும் எதிர்பார்க்கும் உங்கள் அன்புதோழி தீபா

வாங்க வாங்க எல்லோரும் இங்க வந்து பதில் சொல்லுங்க
அனைவரின் அலோசனைகளையும் எதிர்பார்க்கும் உங்கள் அன்புதோழி தீபா

என்னம்மா கண்ணுங்களா கண்டுக்க மாட்டேங்கறீங்களே என்னை.எல்லோரும் இந்த பக்கம் வந்து கொஞ்சம் ஆலோசனை சொல்லிட்டு போங்களேன்.அன்புடன் தீபா

தீபா,

நான் ஈசியா பண்ற ஐடெம்ஸ் மட்டும் சொல்றேன்:-) எனக்கு அவ்ளவு அனுபவம் எல்லாம் இல்லபா:-)

1. ஒன்னு அல்ல இரண்டு ஸ்வீட் ஐடெம்(கவிசிவாவோட பாயாசம், காய்கறி கீர் இல்ல ஏதாவது ஈசியா செய்யக்கூடியது)

2. சப்பாத்தி அல்லது பூரி
3. சன்னா மசாலா மற்றும் வேறு ஏதேனும் ஒரு னார்த் இந்தியன் டிஷ்
4. ஒரு சிம்பில் பிரியாணி அல்லது ஃப்ரைட் ரைஸ்
5. வைட் ரைஸ்
6. சாம்பார் (முடிஞ்சா ஒரு குர்மா - சப்பாத்திக்கும் யூஸ் ஆகும்)
7. தக்காளி பருப்பு ரசம் (ஆர்) புதினா ரசம்
8. ஏதேனும் ஒரு கூட்டு அல்லது பொரியல் இல்லை இரண்டும்

9. கூல் ட்ரிங்க்ஸ்(கோக், பெப்ஸி, மிராண்டா போல)

10. அப்பளம் இல்லை பப்பட்

எது சமச்சாலும் ஒரு மூனு அல்லது நாலு வரைடி நீங்க இதுவரைக்கும் அதிகம் சாப்பிடாத, யாரும் சமச்சிருக்காத புதுசா கேள்விபடற ஐடெம்-ஆ செலக்ட் பண்ணி சமையிங்க(காய்கறி கீர், இதுபோல). அதே சமையம், ரொம்ப சுலபமா சீக்கிரமா செய்யக்கூடிய டிஷ் பார்த்து செய்யுங்க:-)

சரிங்களா, உங்க கூவலுக்கு ஓடி வந்து பதிவு போட்டுட்டேன்:-) வரேன் தீபா:-)நல்லா சமச்சு அறுசுவைக்கு புகழ் சேருங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நன்றி ஹர்ஷினி

உங்கள் சமையல் வாரம் குறிப்பை பார்த்தவுடன் உங்களை தான் கூப்பிடலாம் என்று நினைத்தேன்.அதற்க்குள் நீங்களே பதில்சொல்லிவிட்டீர்கள்.நன்றி அன்புடன் தீபா

நேர்காணல் எப்படி இருந்தது ஹர்ஷினி?
அன்புடன் தீபா

ஹாய் தீபா,

குறிப்பு, எது ஈசின்னு பாத்து பண்ணுங்க. இங்க நாம பின்னூட்டம் கொடுத்த குறிப்பைக்கூட பண்ணலாம்.
புளியோதரை மிஸ் பண்ணிட்டேன். முடிஞ்சா அதையும் சேர்த்துக்கோங்க. முதல் நாளே பண்ணிட்டு சூடு பண்ணிக்கலாம்:-)

நேர்க்காணல் எனக்கு ஈசியா தெரிஞ்சது:-) அவங்களுக்கு நான் குடுத்த பதில் கரக்டா இருக்குமான்னு டவுட், எனக்கு:-)). பார்க்கலாம். முதல் தானே. இன்னும் டைம் இருக்கு:-))

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

பாதாம் mix வாங்கி பாலில் கலக்கினால் பாதாம் பால் ready
குலோப் ஜாமூன்
உளுந்து வடை
சுழியன்
புளியோதரை,லெமன்,டொமேடோ ரைஸ்
பொங்கல், இட்லி, ஈட்லி சாம்பார்
பிரியானி
ரைஸ்
வாழைக்காய் தேங்காய் போட்ட பொரியல்
கூட்டு
சொல்ல மறந்துட்டேன்...சமையலில் நான் LKG :)

Chips vittupochu

cauliflower,potato fry
http://www.arusuvai.com/tamil/node/2163
செல்வி அக்காவோட இந்த கறி செய்யுங்கள். உங்களுக்கு பாராட்டு நிச்சயம்.

கவிதா இவ்வளவு itemம் சொல்லிட்டு lkgனு சொன்ன என்ன அர்த்தம்.நன்றி கவிதா
அன்புடன் தீபா

மேலும் சில பதிவுகள்