கூட்டாஞ்சோறு வார சமையல். பகுதி: 3

அறுசுவை சமையல் வாரம் 5(28/10/07-03/11/07)

அன்பு நேயர்களுக்கு அடுத்த வார சமையற்குறிப்புகளை தேர்வுச் செய்து அனுப்பவேண்டியவரால் இயலாமல் போய்விட்ட காரணத்தால்,மேலும் அவர் என்னையே அவருக்கு பதிலாக குறிப்புகளை தேர்வுச் செய்ய பணிந்ததால் அந்த பணியை நான் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. குறிப்புகளை எல்லோராலும் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய வகையில் தேர்வுச் செய்துள்ளேன்.விரும்பிய குறிப்புகளை சமைத்து பார்த்து மறக்காமல் பின்னூட்டங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

1.திருமதி கரோலின் அவர்களின் குறிப்புகள்:
பட்டர் பிஸ்கட்டுகள்#1421
மிருதுவான கேக் #1414
டின்னர் ரோல்ஸ் #1430

2.திருமதி கமலா வழங்கிய குறிப்புகள்
முருங்கைக்காய் பொரிச்சகுழம்பு#5709
பொரியல் பொடி#5823
அவல் இட்லி#5791

3.திருமதி மாலதியின் குறிப்புகள்
இரால் எண்ணெய் குழம்பு#4754
ஈஸி வெஜிடபிள் கொத்ஸ்# 4606
தயிர் சேமியா#4949

4.திருமதி நமுரா வழங்கிய குறிப்புகள்.
தக்காளி பிரியாணி#2374
பாசிப்பருப்பு பாயசம்#2521
தேங்காய் சட்னி # 2740

5.திருமதி வாணி பாலகிருஷ்ணனின் குறிப்புகள்
வெங்காய சாதம்#2659
காளான் சப்ஜி# 2657
பிரட் பஜ்ஜி# 2663

6.திருமதி பானு கனி அவர்களின் குறிப்புகள்
ஆட்டு கறி குழம்பு#2496
பூசணிக்காய் பொரியல்#2692
கோல்ட் காயின்#2428

7.திருமதி சந்தோஷி ஸ்ரீராம் வழங்கிய குறிப்புகள்
சாம்பார் சாதம்#1858
பூண்டு ரசம்#1925
பாவ்பாஜி மசாலா#1857

அதற்கடுத்த வார குறிப்புகளை தேர்வுச் செய்ய திருமதி தேவசேனாவை அன்புடன் அழைக்கின்றேன். நன்றி.

மனோகரி மேடம்,

உங்க பதிலை படிச்சேன்:-) சந்தோஷம்:-) அப்படியே செய்யலாம்:-)

இந்த வாரக்குறிபெல்லாம் சூப்பரா தேர்ந்தெடுத்திருக்கீங்க? நாளைல இருந்து செய்ய ஆரம்பிச்சுடறேன்:-)

தேவா, எங்க இருக்கீங்க வாங்க, வந்து உங்க அட்டெண்டன்ஸ் குடுத்துட்டு போங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டேன். எப்படி இருக்கீங்க ஹர்ஷினி? எனக்கு ஆபிசில் மண்டே ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதனால் போன வாரம் முழுக்க அதிலேயே மூழ்கிட்டேன். அதான் வர முடியல.
மனோஹரி மேடம், எனக்கு இந்த பொறுப்பா? என்ன செலெக்ட் பண்ணறதுன்னு இப்பவே குழம்ப ஆரம்பிச்சுட்டேன். எதாவது சஜஷன் இருந்தா சொல்லுங்களேன் ப்ளீஸ். எதுக்கும் இதுக்கு முன்னாடி எல்லாரும் எப்படி செலெக்ட் செஞ்சிருக்காங்கன்னு பார்த்துக்கறேன். நீங்க என்னை தேவசேனான்னு முழு பேரை சொல்லிக் கூப்பிடறது ரொம்ப பிடிச்சிருக்கு. இன்னமும் அறுசுவையில் உங்க ரெக்கார்டுதான் டாப் லிஸ்ட்டில் இருக்கு. அதனால் என்னுடைய செலெக்ஷனில் நீங்க வேண்டாம்னு சொன்னாலும் உங்க குறிப்பு இருக்கும். இப்பவே சொல்லிட்டேன்.

அன்பு தங்கை ஹர்ஷினி எப்படி இருக்கீங்க? குறிப்புகள் தங்களுக்கு பிடிக்கின்றதா, ரொம்ப நன்றிமா. மிகவும் சுலபமாக செய்யக்கூடியதாக தேர்வு செய்துள்ளேன். நீங்களும் செய்து பாருங்கள்.நானும் அவைகளை கட்டாயம் செய்துப்பார்த்து பின்னூட்டம் கொடுக்க வேண்டும். நன்றி மீண்டும் பார்ப்போம்.

தேவா,
ரொம்ப நலமா இருக்கேன்.

உங்க பையன் எப்படி இருக்கான்:-) என்ன வாலு தனம் புதுசா ட்ரை பண்ணான்:-). என் பொண்ணு வாலு தனம் குறஞ்சு, படிப்பு அதிகம் ஆகுது. ஆனா அந்த வாலு தனத்தை மிஸ் பண்றோமேன்னு கவல வந்துடுச்சு:-) அதனால நல்லா என்சாய் பண்ணுங்க:-)

சமையல் குறிப்பு தரர்து பத்தி, பாபு காரு(எங்கள் அண்ணா:-)) குடுத்திருக்காங்க. பாருங்க, பாருங்க, தேடி பாருங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்பு தங்கை தேவசேனா எப்படி இருக்கின்றீர்கள் ? "மனோஹரி மேடம், எனக்கு இந்த பொறுப்பா?" புரியலயே!!! சரி அது போகட்டும்.தங்களின் பிஸியான வாழ்க்கையில் இந்த பணியை செய்ய ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. குறிப்புகள் தேந்தெடுப்பதில் தங்களை அதிகம் வருத்திக் கொள்ள வேண்டாம். இஸியாக இருக்க ஒரு சில குறிப்பு தருகின்றேன்.

சகோதரி சந்தோஷி ஸ்ரீராமிற்குப் பிறகுள்ள வல்லுனர்களில் சிமுக்கியைத் தவிர (திருமதி விஜயாவின் பெயர் ஏற்கனவே இடம் பெற்று விட்டது) பின் வரும் வல்லுனர்கள் மிகவும் குறைந்த அளவே குறிப்புகள் கொடுத்துள்ளார்கள் என்பதால் அதில் ஒரு குழப்பம் உள்ளது ஆகவே,தங்களின் வேலையை சுலபமாக்குவதற்காக:

முதலில் திருமதிகள் ஜிமுக்கி, மனோகரி, செல்வி, கதீஜா, சுபா, சித்ரா,வாணி வரையிலுள்ள ஏழு வல்லுனர்களின் குறிப்புகளை மட்டும் தேர்வுச் செய்து விடுங்கள். மற்றதை அடுத்து வருபவரின் வசதிகேற்றவாறு கூறிவிடலாம்.

இந்த ஏழு பேர்களின் குறிப்புகளிலிருந்து மூன்று மூன்றாக மொத்தம் 21 குறிப்புகளை தேந்தெடுக்கவும்,அதில் டிபன் அயிட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக இருத்தல் அவசியம்

எல்லோரும் சுலபமாக செய்வதுப் போல்
குறிப்புகளிலுள்ள இன்கிரீடியன்ஸ்ஸை மட்டும் கருத்தில் கொள்வது நல்லது,அவ்வளவு தான்.

வரும் சனிக்கிழமைக்குள் கொடுத்தாலே போதும் சரியா, இதில் வேறேதாவது சந்தேகம் இருந்தால் கட்டாயம் கேட்கவும்.எனது அழைப்பை ஏற்று இதில் பங்குகொள்ள சம்மதித்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

அக்கா குற்பிப்புகளை தேர்ந்தெடுத்ததற்கு ரொம்ம்ம்ப நன்றி....சனிக்கிழமை தேடிப் போடலாம்னு இருந்தேன்..நீங்களே உதவி செஞ்சுட்டீங்க...நல்ல உஷாரா கலந்துக்கரீங்க எல்லாரும்...என் ப்ரச்சனை என்னன்னா பல சமயம் இதில் உள்ள குறிப்புகள் தவிற மற்ற குற்பிப்புகளை செய்ய வேன்டி வருது...அதற்கான ஃபீட்பேகையும் கொடுத்துடரேன்....
சரிங்க அப்ரமா வந்து பேசரேன்...முடிஞ்சா பூசனிக்காய் பொரியல் செஞ்சுடனும்னும் இன்னக்கி.

தளிகா:-)

அன்பு தங்கை தளிகா எப்படி இருக்கீங்க? குழந்தை ரீமா எப்படி இருக்காங்க, அடிபட்ட கால் விரல் சரியாகி விட்டதா? தங்களின் பதிவு மகிழ்ச்சியைத் தந்தது. இது போன்ற குணாதிசயங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இத்தனைக்கும் நான் உங்கள் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. நீங்களே வந்து நன்றி தெரிவித்துள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சி. இங்கு இடம் பெறுகின்ற குறிப்புகளை கட்டாயம் செய்துப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லையே, தங்களால் முடிந்தவற்றை செய்தால் போதும். பூசணி பொரியலை செய்து பின்னூட்டத்தை அனுப்பினால் என்னைவிட சகோதரி பானுகனி தான் அதிகம் மகிழ்வார்கள் என்பதால் நிச்சயம் செய்து பாருங்கள்.நன்றி.

பின்குறிப்பு: "நல்ல உஷாரா கலந்துக்கரீங்க எல்லாரும்" எனக்கு புரியவில்லை!!!! எதை உஷார் என்று கூறினீர்கள் என்று, விருப்பம் இருந்தால் விளக்குங்கள் இல்லையென்றால் பரவாயில்லை விட்டுவிடுங்கள்.

அக்கோவ் புரீலயா?கூட்டாஞ்சோறுன்னு ஒன்னு ஆர்ம்பிச்சு மன்றத்துல மத்தவங்களோட குறிப்பை செய்து பார்க்கரதுல 1 ரெண்டு வாரம் கலந்து கிட்டு சோந்து போயிடாம தொடர்ந்து எல்லாம் கலக்கரீங்கன்னு சொன்னேன்..இப்படி தான் சில ச்மயம் என் மனசில இருக்கரது சொல்லி முடிச்சுட்டு எனக்கு என்னவோ நெனப்பு ரொம்ப அருமையா விளக்கி இருக்கேன்னு:-D..மத்தவங்களுக்கு புரியலங்கும்போது தான் டர்ர்ருன்னு கிழிஞ்சு விழும் மூக்கு..ஹி ஹீ.
என் பொண்ணு நல்லாருக்கா..ஓஹ் கால் எல்லாம் சரியாச்சு இப்ப நகம் வெள்ள யா வருது...அன்னக்கி நான் பட்ட கவலைக்கி மருந்தா இருந்தது நீங்கல்லாம் தான்..நான் சில குறிப்புகளை செஞ்சுட்டு குறிப்புக்கு கீழயே பின்ன்னூட்டம் கொடுத்துட்டு இங்க எழுத விட்டுடரேன்...இனி அதையும் சரியா செஞ்சுடரேன்...இன்னக்கி செஞ்சது திரும்பவும் பூண்டு குழம்பு தான்...பூண்டுக்கு வாய் இருந்தா அழுவும்....எல்லா நாளும் செஞ்சு சாப்பிடரது போதாததுக்கு சாபிடர நேரம் தவிற மத்த நேரம் இடையிடையே ஸ்பூன்ல எடுத்து சாப்பிடுவேன் லேகியம் மாதிரி.
இன்னொண்ணு கேக்கட்டா?உங்க டைகெரை ஊருக்கு போரப்ப என்ன பன்னுவீங்க?கூட்டிட்டு போக முடியுமா?

தளிகா:-)

ஓ அப்டி சொல்றீங்களா, ஸாரிமா. ஆமாம் எதைச் செய்தாலும் கவனமா இருப்பது நல்லது தானே. அதற்குத் தான் தொட்ர்ந்து அந்த பகுதியை கண்கானித்து வருகின்றேன். தொடங்கி விட்டு அரைகுறையாக விடுவதில் எனக்கு சம்மதமில்லை. பார்க்கலாம் நேயர்களின் ஒத்துழைப்பு இருக்கும் வரை பிரச்சனை வராது என்று நம்புகின்றேன். குழந்தைக்கு காயம் சரியானதைக் குறித்து சந்தோசம். பூண்டு குழம்பை இந்த அளவுக்கு விரும்புறீகன்னா ரொம்ப சுவைய்யாகத்தான் சமைப்பீர்கள் போல் உள்ளது. சமையுங்க சமையுங்க கூட்டாஞ்சோறையும் சமைச்சுக்கிட்டே இருங்க.

டைகரை ஊருக்கு போகும் பொழுது நிச்சயமாக கூட்டிக் கிட்டு போக மாட்டேன், காரணம் அவனுக்கு டிராவலிங் ஒத்துவராது. அவன் வாச் டாக் வகையைச் சார்ந்தவன் அவனுடைய டெரிடரியை விட்டு போக விரும்ப மாட்டான், மேலும் என்னாலும் ஊரில் ஒரு இடத்தில் இருக்கமுடியாதென்பதால் பிள்ளைக்கு வீணான ஸ்டிரஸ்ஸைக் கொடுத்து அதனால் உடல்நிலையிலும், மனநிலையிலும் பாதிப்பு ஏற்ப்படக்கூடும் ஆகவே நிச்சயமாக அழைத்து வரமாட்டேன். ஆனால் என்னை விட்டு பிரிந்தாலும் அவனுக்கு ஸ்டிரஸ் ஏற்ப்படும் என்பது தான் என் கவலை. மற்றபடி வீட்டில் குடும்பத்தினரிடம் விட்டுவிட்டு எனது பயணத்தை மேற்கொள்வதில் எனக்கு பிரச்சனையில்லை. தங்களின் விசாரிப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது நன்றி.

மநோகரிமேடம் கூட்டாஞ்சோறு குறிப்புகளில் ஸ்வீட், காரம் சேர்க்க முடியுமா?இதைப்பற்றி உங்கள் கறுத்து என்ன?

Kala

மேலும் சில பதிவுகள்