what is double cream

டபுள் க்ரீம் என்றால் என்ன
தெரிந்தவர்கள் கூறுங்களேன்.எவ்வாறு டபுள் க்ரீம் செய்வது என்றும் தெரிவிக்கவும்.நன்றி

வித்யாவாசுதேவன்.

ஹாய் வித்யா, டபுள் க்ரீம் என்பது UK யில் பயன்படுத்தப் படும் 48% கொழுப்புச் சத்துள்ள ரிச்சான க்ரீமின் பெயர்.
இது கேக், புட்டிங், ஃப்ரூட் சாலட், சூப் இன்னும் பல ஸ்வீட் மற்றும் சேவரி டிஷ்களில் ரிச்னெஸ்காக சேர்க்கப்படுகிறது.
இதற்கு சமமாக அமெரிக்காவில் கிடைக்கும் க்ரீமான விப்பிங் க்ரீமில் 30 %- 40% கொழுப்புச்சத்து இருக்கும்.

anbudanஹாய் வின்னீ ,

டபுள் க்ரீம் வீட்டில் செய்ய முடியுமா? முடியும் என்றால் எப்படி. நன்றி.

வித்யாவாசுதேவன்.

anbudan

வித்யா, டபுள் க்ரீமை எப்படி வீட்டில் செய்வது என்று தெரியவில்லை, ஆனால் அந்த அளவு கொழுப்புச்சத்து உள்ள க்ரீமின் செய்முறையை ஒரு முறை டீவியில் பார்த்தேன்.

1. 2 கப் ஹெவி க்ரீமுடன்(heavy whipping cream) 2 டேபுள் ஸ்பூன் தயிர் அல்லது sour cream கலந்து லேசாக வார்ம்(warm) செய்து விட்டு அதை ஒரு கண்ணாடி/ செராமிக்/ ஸ்டைன்லஸ் ஸ்டீல் பாத்திரத்தில் போட்டு ஒரு warm ஆன இடத்தில் அப்படியே ஒரு நாள் முழுதும் அசைக்காமல் வைக்க வேண்டும்.

2. நன்றாக திக் ஆன பிறகு ஒரு துணியிலோ அல்லது மூன்று சீஸ் க்ளாத்(cheese cloth) சேர்த்து வைத்து, அதிலோ அந்த கலைவையை ஊற்றி ஒரு மூட்டைபோல் கட்டி ஒரு பாத்திரத்தினுள் தொங்கவிட்டாவாறு ஃப்ரிட்ஜினுள் வைக்க வேண்டும்.(இதற்கு டிவியில் ஒரு பெரிய மர கரண்டியில் மூட்டை கட்டி அதனடியில் ஒரு பாத்திரம் வைத்தனர்) ஒரு 1/4 கப் அளவிற்கு நீர் வெளியேறிய பிறகு அந்த மூட்டையில் இருக்கும் க்ரீமில் 50%
அளவிற்கு கொழுப்பு சத்து இருக்குமாம்.இதை டபுள் க்ரீமிற்கு பதிலாக உபயோகிக்கலாம் என்றும் சொன்னார்கள்.

இதையும் நான் செய்து பார்த்ததில்லை. வெறும் பார்த்த ஞானம் மட்டும்தான். நீங்க செய்து பார்த்தால் எப்படி வந்தது என்று சொல்லவும்.

anbudanஹாய் வின்னி,
மிக்க நன்றி. என் தோழிக்காகத்தான் கேட்டேன்.அவங்க செய்து பார்த்து விட்டு சொன்னவுடன் உங்கலுக்கு தெரிவிக்கிரேன்

வித்யாவாசுதேவன்

anbudan

மேலும் சில பதிவுகள்