தேதி: October 28, 2007
பரிமாறும் அளவு: 3 Person
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இறால் - கால் கிலோ
அரிசி - அரை கிலோ
எண்ணெய் - அரை டம்ளர்
டால்டா - ஒரு மேசக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - மூன்று
பெரிய தக்காளி - நான்கு
பச்சை மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
லெமென் - ஒன்று
கொத்தமல்லி தழை - கால் கட்டு
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று
ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்
எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைத்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புதினா, தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேக விட வேண்டும்.
தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேக விடவும்.
இப்போது அரிசியை முக்கால் வேக்காட்டில் வேக விட்டு அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு கண் வடிகட்டியில் வடித்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்ட வேண்டும்.
கொட்டி தம்மில் விட வேண்டும் (தம் என்றால் கேஸ் அடுப்பின் மேல் ஒரு டின் மூடி (அ) தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விட வேண்டும்.
மூடியை திறந்து சிறிது கஞ்சி தண்ணீரில் ரெட் கலர் பொடியை கரைத்து மேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் விட வேண்டும்.
தேவைப்பட்டால் உருளை, கேரட், பீன்ஸ், சோளம், பட்டானி (கால் கிலோ) சேர்த்து கொள்ளலாம். இதற்கு தயிர் சேர்க்க தேவையில்லை
Comments
நன்றாக இருந்தது...
திருமதி Jaleela அவர்களுக்கு,
இன்று உங்கள் இறால் பிரியாணி செய்து பார்த்தேன்...மிகவும் நன்றாக இருந்தது.தம் போடாமல் சாதாரனமாக குக்கரில் செய்தேன் நன்றாக வந்தது. இந்த குறிப்பிற்கு நன்றி.
best regards,
Anu
Be the best of what you are and the Best will come to you :)
கிரீச் அனுராதா இறால் பிரியாணி
கிரீச் அனுராதா நானும் இறால் பிரியாணி தான் செய்தேன் இரண்டு நாள் முன்பு.
ரொம்ப நன்றி செது பார்த்து பின்னூட்டம் அனுப்பியது ஒரு பூஸ்ட் குடித்த மாதிரி இருக்கு.
ஜலீலா
Jaleelakamal