பிறந்தநாள் கொண்டாட.....

என் மகனின் தன் முதல் பிறந்தநாள் கொண்டாட உள்ளோம்...

நானும் என் கணவரும் பல வழிகள் யோசித்தும் 1 idea வும் இல்லை...
நீங்கள் கொஞ்சம் help பண்ணுங்களேன்...

here we have some frnds... but we are not interested to invite them..
only cos to avoid their gifts... we want that to be secret and wish to meet them
giving sweets on that day...

so pls help me posting ur receipes ... and some plans to make my son's first b'day
a remarkable one..
one important msg... y i want this to be so remarkable na...ofcourse all parents have the same thought
but still i insist only cos.. i and my son are have the same b'day...

i was so so happy to say that i gave birth on my b'day...

so pls make our b'day a remarkable one by saying ur experiences and ideas.

அன்பு தங்கை பாலம்மு எப்படி இருக்கீங்க? முதல் பிறந்த நாளைக் கொண்டானப் போகும் உங்க குழந்தைக்கும், அதே தேதியில் பிறந்த உங்களுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். பரிசுப் பொருள் இல்லாத பிறந்த நாளா!!!!!!! எப்படி யோசனை வரும்? ரூம் போட்டு யோசித்தால் கூட ஒரு ஐடியாவும் வராதே. கேட்ட எனக்கே அதிர்ச்சியாக உள்ளது.

ஏனென்றால் நமது அன்பை பரிமாறிக் கொள்வதற்கு தான் இந்த பரிசுப் பொருட்கள் பெரிதும் உதவுகின்றன, சிறுவயது முதலே அதை குழந்தைக்கு போதிப்பதற்கு இதைக் கூட ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லையே என்று தான் கூறுவேன், அந்த பொன்னானநாளில் சிறு குழந்தைகள் முதல் எல்லோரையும் அழைத்து கேக் வெட்டி பாட்டு பாடி விருந்தினர்களுக்கு சிற்றுண்டி பலகாரங்களை கொடுத்து மகிழ்வதிலும், நண்பர்கள் பரிசுப் பொருட்களோடு நமது குழந்தையை தூக்கி கொஞ்சி வாழ்த்துவதைப் பார்க்கவும் எவ்வளவு பெருமையாகவும், மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா, அதை இழக்க நீங்கள் தாயாரா?அனுபவித்தவர்களுக்கு அது நன்கு புரியும் என்று நினைக்கின்றேன்.

அதைவிட பரிசுப் பொருட்களை தவிர்ப்பதற்காக நீங்கள் செய்யப் போகும் காரியத்தால் யாருக்கும் மகிழ்ச்சி ஏற்ப்படாது, மாறாக அந்த நல்ல நாளில் உங்களை அவர்கள் தவறாக கருத நேரிடும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு உங்களுக்கு கூறிக்கொள்கின்றேன். பரிசுப் பொருட்கள் பரிமாற்றம் குறித்து உங்களுக்கு பிரதியேகமாக வேறு ஏதாவது கூற வேண்டுமானால் தாராளமாக கூறலாம். என்னடா இவள் ஐடியா கேட்டால் அட்வைஸ் சொகிறாளே என்று கருதவேண்டாம்.

இது கூட ஐடியா தான். ஐடியா நம்பர் ஒன்: முதலில் குழந்தைக்கு வரும் பரிசுப் பொருட்களுக்கு அணைப்போடாமல் அன்போடு ஏற்றுக் கொள்வது, மற்றவை உங்கள் பதில் கண்டு.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள், பாலம்மு, உங்கள் மகனுக்கும், உங்களுக்கும்:-)

வீட்டுக்கு வரவங்க கொடுக்கற பரிசு பொருளுக்கு நீங்க "return gift" வாங்கி, அதுவும் உங்க க்குழந்தையின் கையில் கொடுத்து தந்தா அவங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்:-) பரிசு பொருளுக்காக பிறந்த நாளை கொண்டாடாமல் இருக்காதீங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்பார்ந்த மனோஹரி அக்காவுக்கும், ஹர்ஷினிக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்காக என் மன்மார்ந்த நன்றி...

நாங்கள் US வந்து 2 மாதம் தான் ஆகுது.... இங்கு friend ஒருவருக்கு திருமண நாளன்று பரிசு கொடுத்தேன்... அவர்கள் அவர்கள் என்னிடம் கூறியது...
இங்கு வந்தது சம்பாரிக்க அதனால் நாங்க கொண்டாடல...
அதை போல் இன்னொருவரும் தங்கள் திருமண தேதிஐ சொல்லவில்லை...

but still i have 2 more friends we 3 share all kinds of our lunch items if anything special...

i feel uneasy to call these 2 friends alone at the same time if i call the others i feel whether they might think its waste to buy gift ,..so only madam

i felt very uneasy after reaading the first two responses itself...

i thought its my mistake to post that without saying all the matters..

since i thought if i didnot say that... many in might say to arrange a b'day party...i said that in advance...

but it turned out wrong i suppose...

since my son not allowing me to type... i want to post this fast...so typing in english.

at the same time as i said i want this b'day to be remarkable...thats y i asked tips ..

pls akka and harshini dont mistake me..
what shall i do??
when i have a thought that some frnds might buy gifts as an expense how can i accept???
at the same time i dont want to leave them and call others.. in US i want to have smooth relationship with all...

i think u can understand me..

still if u say to call all... i will...
reply me without fail.

manohari akka...
already u gave me tips for him to eat..
can i give pumpkin sambhar for him..
what are the veg i shud avoid for him...

note:- india la irundiruntha i might have celebrated as a festival...

what to do???

இந்தியாவில் மட்டுமல்ல எங்கிருந்தாலும் பிறந்தநாளை கொண்டாடலாம். நீங்க செய்ய வேண்டியது இது தான். இது உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் அதில் உங்க பிறந்த நாளும் கலந்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

ஆகவே உங்களுக்கு யார் பிடிக்கின்றது பிடிக்கவில்லை என்பது முக்கியமல்ல, அவரவரின் கருத்து அவரவருக்கு ஒசத்தி தானே. ஆகவே யார் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் தேவையில்லை. யார் என்ன பரிசு கொடுகின்றார்கள் என்பது தேவையில்லாத ஒன்று, பரிசு கொடுத்தால் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள், கொடுக்காதவர்களைப் பற்றியோ, பார்ட்டிக்கு வராதவர்களைப் பற்றியோ கூட கவலைப்படத் தேவையில்லை.

உங்களுக்கு அறிமுகமான அந்த நண்பர்களையும் விடாமல் எல்லோரையும் அழையுங்கள், அலுவலகத்தில் நல்ல அறிமுகமான்வர்களையும் அழையுங்கள், அனைவருடன் கொண்டாட்டத்தை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்பதை மட்டும் சிந்தியுங்கள்.

என்ன கேக், எங்கு ஆடர் செய்வது,
என்ன டின்னர் செய்வது,
குழந்தைகள் வந்தால் அவர்களுக்கு பிடித்த மாதிரி என்ன ஸ்னாக்ஸ் செய்வது,
வீட்டை எப்படி எந்த தீமில் அலங்கரிப்பது.
பார்டிக்கு வரும் குழந்தைகளுக்கு ஏதாவது சிறிய பரிசாக என்ன தருவது.

போன்ற விசயங்களுக்கான ஏற்பாட்டை துவங்கி விடுங்கள், பிறகு ஐடியாக்கள் தானாகவே வரும், இப்பொழுது புரிகின்றதா ஏன் ஒரு ஐடியாவும் வராமல் இருந்தது என்று, மேலும் ஏதாவது டிப்ஸ் வேண்டுமானால் தயங்காமல் கேட்கவும்.

குழந்தைக்கு நீங்கள் வழக்கப்படி சாம்பாரில் போடும் எல்லாக் காய் சாம்பாரையும் கொடுக்கலாம். சாம்பாரை சற்று மேலாக இருத்து சாதத்தில் குழைத்து கொடுக்கலாம், அல்லது தயிர் சாதத்தில் கூட கலந்து கொடுக்கலாம்.

மேலும் சில பதிவுகள்