தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

அறுசுவை சகோதர, சகோதரிகளே, வரும் தீபாவளிக்கு வீட்டில் என்னென்ன சமைப்பது என்று அனைவரும் முடிவு செய்துவிட்டீர்களா? இல்லை என்னைபோல் இன்னும் யோசிக்கவே இல்லையா? எப்படி கொண்டாடப்போகிறீர்கள்? என்ன இனிப்பு, என்ன காரம்? இதைப்பற்றி அனைவரும் இங்கு வந்து கருத்து கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மிக்ச்சறில் போட்டிருக்கும் சிறு சிறு கறுப்பு மசூர் தால் ஊறாவைத்து வறுக்கணுமா எப்படி வறுக்கணும்

Today is a new day.

ஹாய் வானதி,

எப்படி இருக்கீங்க?

நான் தீபாவளிக்கு பாதாம் அல்வா பண்ணாலாம்னு இருக்கேன்.

நீங்க என்ன செய்ய போறீங்க?

அறுசுவைல கூடி ஒரு முடிவு எடுக்கலாம்.

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

ஹாய் ஸ்ருதி,
நான் நலம். அங்கும் அப்படித்தானே?
எனக்கு என்ன செய்றதுன்னே புரியல. அதான் இந்த த்ரெட்ட போட்டேன் அப்பவாவது ஒரு ஐடியா கிடைக்குமான்னுதான். 2 நாளா அறுசுவை ஸ்வீட்ஸ் பக்கத்த பாத்து பாத்து ஒரே ஸ்வீட்ஸ் சாப்பிட்டது போல இருக்கு. பாதாம் பர்பி என் பையனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனா எப்ப நான் பர்பி செய்தாலும் அது அல்வாவிவில்தான் முடியும். நீங்க முன்னெச்சரிக்கையா அல்வாவே பண்ணப்போறீங்களா:-)

சோலை அக்கா, மிக்சரத்தவிர வேறென்ன ஸ்பெஷல்?

வானதி எப்படி சரியா கண்டுபுடிச்சீங்க?

ஃபர்பி செய்ய போய் அல்வாலதான் முடியும் எனக்கும்.

அதான் அல்வானு போட்டேன் (வெட்டி)பந்தாவா:-)

இன்னும் ஒன்னும் சரியா முடிவு பண்ணல,EarthQuake பயமே இன்னும் போகல அதான், இன்னும் ஒரு வாரம் இருக்கு இல்ல அதுக்குள்ள அறுசுவைல ஏதாவது கிடைக்கும் பார்க்கலாம்.

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

இந்த முறை அதிரசம் செய்யலாம்னு ஐடியா:-) அப்புறம் முறுக்கு, மைதா பிஸ்கட்.....இன்னும் ஏராளம் செய்யனும்னு:-) ஆனா செய்வேணான்னு தெரியல.
தீபாவளி முடிஞ்சவௌடன் சொல்றேன், என்ன பண்ணன்னு:-)
நானும் இங்க வந்து தான் ஐடியா பாக்கனும்:-)

மஞ்ச பூசணீக்காய் வெச்சு டிஷ் ஏதாவது பண்ரதுக்கு ஐடியா வேணூமே:-) அறுசுவைல ஜல்லட போட்டு தேடியாச்சு. ரெண்டு மூணு தான் கிடச்சது:-) என்ன மாதிரியே பெரிசா இருக்கு பூசணீக்காய், எங்க வீட்டில:-)

நேத்து நைட், வீட்டுக்க்காரர்கிட்ட சொன்னேன், என்னப்பா, ஏதாவது ஆடுச்சுன்னா, பொண்ணை தூக்கிட்டு டேபில் கீழ போயிடுங்கன்னு:-) அதுக்கு அவரு சொன்னார் " எதுக்கு அவ்வளவு கஷ்டப்படனும். நீ மனசு வெச்சா எங்கள எல்லாம் காப்பாத்திடலாம்னார். எனக்கு ஒன்னும் புரியல. என்னப்பா சொல்றிங்கன்னா, அவரு சொன்னார்" தாரா சிங் ஒரு ஆட்ல ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் தூக்கிட்டு நிப்பாரு. அந்த மாதிரி நீயும் மேல இருக்கற கூரை விழுந்தா பிடிச்சிட்டு நின்னா போதும்னார். பாருங்க என் நிலமைய:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹர்ஷினி மஞ்ச பூசணிக்கய வைச்சு எனக்கு ஒன்னு தெரியும், பொரியல் பண்ணுங்க:-) (இது எல்லாத்துகும் தெரியும்னு நீங்க சொல்றது கேட்குது, என்ன பண்றது )

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

ஹர்ஷினி மஞ்ச பூசணிக்கய வைச்சு எனக்கு ஒன்னு தெரியும், பொரியல் பண்ணுங்க:-) (இது எல்லாத்துகும் தெரியும்னு நீங்க சொல்றது கேட்குது, என்ன பண்றது )

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

நான் முறுக்கு,குலாப்ஜாமூன் செய்யலாம் என்று இருக்கிரேன்,வேறு ஏதாவது ஈசியா செய்யக்கூடிய ச்வீட்ஸ் இருந்தா யாராவது சொல்லுங்க. (அப்படியே 1 box அனுப்பி வைங்க)
தமிழ் டீச்சரம்மா நான் நல்லா டைப் பண்ரேனா?

-மாலினி

என்னுடைய தீபாவளி மெனு ... குலோப்ஜாமுன், முருக்கு, 5 கப் ஈசி ஸ்வீட், ரவா உருண்டை, கேரட் அல்வா. எல்லாமே ரொம்ப ஈசியாக செய்திடலாம். குலோப்ஜாமுனுக்கு ரெடிமிக்ஸ் இருக்கிறது. கேரட் துருவல், சர்க்கரை, பால் இவற்றை 1: 1: 2 என்ற விகிதத்தில் கலந்து எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் வைத்து ஏலப்பொடி, முந்திரி, திராட்ஷை, சேர்த்தால் 15 நிமிடத்தில் கேரட் அல்வா ரெடி. முருக்கு, 5 கப் ஈசி ஸ்வீட் செய்முறை 'அறுசுவை' யில் எழுதி இருக்கிறேன். செய்து பாருங்கள்.

மஞ்சள் பூசணியை வைத்து, சுவையான அல்வா செய்யல்லாம். செய்வதும் மிகவும் சுலபம். காயை வெட்டி தோல், விதை மற்றும் விதையைச் சுற்றியுள்ள நார் போன்ற பகுதியை நீக்கி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கியத்துண்டுகளைப் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு வேகவிடவும். காய் நன்றாக வெந்ததும், நீரை வடித்துவிட்டு, மசித்துக் கொள்ளவும். மசித்த காய் அளவில் பாதி அளவிற்கு (1 கப்பிற்கு 1/2 கப்) சர்க்கரையை சேர்த்து ஒரு வாணலியில் போட்டு, அடுப்பில் வைத்து, கிளறவும். இனிப்பு அதிகம் தேவையென்றால், இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். சிறிது கெட்டியானதும் 4 அல்லது 5 டீஸ்பூன் நெய்யை விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், ஏலக்காய் பொடி சிறிது, வறுத்த முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சைச் சேர்த்து கிளறி இறக்கவும். சர்க்கரைக்குப் பதில், வெல்லம் சேர்த்தும் செய்யலாம். வெல்லம் சேர்த்தால், சிறிது சுக்குப் பொடியையும் சேர்க்கவும். சுவையாக இருக்கும்.இந்தக் குறிப்பை நான் பறங்கிக்காய் அல்வா என்னும் தலைப்பில் அறுசுவையில் வழ்ங்கியுள்ளேன்.

மேலும் சில பதிவுகள்