அன்பு நேயர்களுக்கு வணக்கம். பிறந்த நாளைப்போலவே நமக்கு வாழ்க்கையில் ஆனந்தம் அளிக்கக்கூடிய மற்றொரு மகிழ்ச்சியான நாள்,திருமணநாள் தானே. அந்த பொன்னான நாளை இங்கு அறுசுவை சகோதர சகோதரிகளுடனும் சேர்ந்து கொண்டாடலாம் என்று தனியாக அதற்கென்று இந்த திரட்டை துவக்கிவிட்டேன்.ஆகவே முதலில் இந்த நவம்பர் மாதத்தில் வரும் உங்கள் மணநாள் தேதியை இங்கு பதிவுச் செய்து விடுங்கள், இவ்வாறு ஒவ்வொறு ஆண்டும் அறுசுவை நேயர்களின் வாழ்த்துக்களுடன் நமது அனைவரின் திருமணநாள் மலரட்டும் என்று அனைவருக்கும் முன்னதாகவே வாழ்த்து கூறி விடைபெறுகின்றேன். நன்றி.
திருமணநாள் வாழ்த்துக்கள்.
இன்று (11-04-07) திருமணநாளைக் கொண்டாடும் அறுசுவை நேயர்கள்,
1. திருமதி ஹர்ஷினி ஹரி,
2.திருமதி பிரதீபா பாலகுமார்,
3. திருமதி பாலம்மு.
நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் இன்று போல் என்றென்னும் மகிழ்ச்சியுடன், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ, மனதார வாழ்த்துகின்றேன்.அப்படியே ஒரு பாட்டும் பாடட்டுமா,
நல்வாழ்த்து நான் சொல்லுவேன், நல்லபடி வாழ்கவென்று..., நல்லபடி வாழ்கவென்று,
கல்யாண கோயிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா....
அன்பு தங்கைகளே நாளைக்கும் நான் அறுசுவைக்கு லீவ் என்பதால் நடுராத்திரியானாலும் பரவாயில்லை என்று வந்து உங்களை வாழ்த்துகின்றேன்.
மணக்கும் மணநாள்!
இன்று மணநாள் காணும் அன்புச் சகோதரிகள் ஹர்ஷினி,பிரதீபா,பாலம்மு தாங்கள் அனைவரும் அன்றுபோல் என்றும் மணம்கமழ வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம்! - அஸ்மா.
இதுபோல் நம் அட்மின் அண்ணனுக்கு எப்போ வாழ்த்து சொல்லப்போகிறோமோ தெரியல :(
தேதி எப்படி?
என்ன மனோகரிமா! பெரிய மனுஷியாக நின்று முதலில் வாழ்த்தை துவக்கியாச்சா? :-) அதுசரி, 11-04-07 என்பது ஏப்ரல் மாததின் 11 ந் தேதியை குறிக்காதா? அல்லது அறுசுவையில் "நவம்பர் 4, 2007" என்று பதிவின் ஆரம்பத்தில் இருக்குமே, அதுபோல் குறிப்பிட்டதா? பெரும்பாலானவர்கள் தேதி, மாதம், வருஷம் என்ற கணக்கில்தான் எழுதுவது வழக்கம். அதான் கேட்டேன். ஓ. கே. டியர், மீண்டும் சந்திப்போம்.
ஜலீக்காவின் வாழ்த்துக்கள்
என் இனிய சகோதரிகளே இந்த ஜலீக்காவில் வாழ்த்துக்கள். வாழ்க்கையில் உங்கள் நினைவுகளெல்லாம் நீங்கள் என்னியபடி எல்லா செல்வங்களும் கிடைக்க என் மணமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜலீலா
Jaleelakamal
வாழ்த்துக்கள் மூன்று
இன்று மண நாள் காணும் அன்பு சகோதரிகள்
ஹர்ஷினி தம்பதியினருக்கும்,
பாலம்மு என்கிற தமிழ் தென்றல் தம்பதியினருக்கும்,
தீபா என்கிற ப்ரதிபாலா தம்பதியினருக்கும்
என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் என்றென்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
வானதி
தேதி
டியர் அஸ்மா
ஆங்கிலேயர்கள் இப்படிதான் தேதியை அடுத்தும் மாதத்தை முதலிலும் போடுவார்கள் அவர்கள் சொல்லும் தேதி நவம்பர் நான்கைதான் அப்படிதான் மனோகரி அக்கா போட்டுள்ளது அப்படி என்று நினைக்கிறேன் சரிதானே வந்தவுடன் ஒரு பதிவு போட சான்ஸ் கொடுத்த அக்காகளுக்கு ரொம்ப நன்றி
மண நாள் மங்கயர்கள்
மண நாள் காணும் எனதருமை சகோதரிகள்,ஹர்ஷினி,பாலம்மு,தீபா !
உங்கள் வாழ்வில் இன்று போல் என்றும் சந்தோசம் நிலைத்திட வாழ்த்தும் உங்கள் அன்பு சகோதரி
ரஸியா
happy wedding anniversary
anbudanவாழ்த்துக்கள்
சகோதரிகளுக்கு இனிய திருமன நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
வித்யாவாசுதேவன்.
anbudan
ஹாய் ஷஃபீக்கா!
அஸ்ஸலாமு அலைக்கும்! அறுசுவைக்கு புதிய வரவாகும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
தேதியை மூன்று விதமாக பயன்படுத்துவார்கள் என்றாலும் மனோகரி மறந்துபோய் அப்படி போட்டார்களோ என்றுதான் கேட்டேன். ஏனென்றால், நம் நாட்டில் "தேதி/ மாதம்/ வருடம்" என்ற முறையில் பயன்படுத்தி பழகிவிட்டோம். இங்கும் அதே பழக்கம் இருந்தாலும், சிலர் "மாதம்/ தேதி/ வருடம்" அல்லது "வருடம்/மாதம்/ தேதி" என்பதுபோல் பயன்படுத்துவார்கள். மனோகரி போட்டதில் தவறில்லை. மறதியில் போட்டதாக இருந்தால் நம் பழக்கப்படியே மாற்றிக்கொள்வார்கள் என்றுதான் கேட்டேன். நன்றி, மீண்டும் சந்திப்போம்!
வாழ்த்துக்களுக்கு நன்றி
மனோகரி மேடம், அஸ்மா, ஜலீலாக்கா, வானதி, ரஸியா, வித்யா உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல :-)
இந்த வருஷம் உண்மையிலேயே, ரொம்ப சந்தோஷமா இருந்தது :-) இங்க அனைவரின் ஆசிகளும் வாழ்த்துக்களும் கிடச்சதால :-)
மனோகரி மேடம்,
இந்த த்ரெட் ரொம்ப நல்லா இருக்கு :-) இப்ப தான் பாத்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு :-) வாழ்த்துக்கள் :-)
இங்க வந்து பதிவு பண்ணிடுங்கப்பா எல்லாரும் :-) வாழ்த்து மழையில் நனயலாம் :-)
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>