உணவிற்காக பிற உயிர்களைக் கொல்வது சரியா தவறா? உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த உலகில் உயிரனங்கள் உருவானதா, படைக்கப்பட்டதா என்பது குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, அப்படி உருவான/படைக்கப்பட்ட உயிரனங்களை (பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிர்கள்) மனிதன் தனது பசிக்கு கொன்று இரையாக்கிக் கொல்லுதல் ஏற்புடையதா? மரம், செடி கொடிகள் போன்று ஓரறிவும் இல்லாமல், மனிதன் போன்ற ஆறறிவும் இல்லாத இந்த ஜீவன்களை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்ளுதல் நியாயமா?

அசைவ உணவுகள் என்று ஒன்று இல்லாவிட்டால் உலகம் என்னவாகும்? எல்லோரும் சைவர்களாக இருத்தல் இயலுமா? எது உண்மையில் சைவம்? எதில் நன்மை அதிகம்? இதைப் பற்றியெல்லாம் இங்கே விவாதிக்கலாம். ஒரு சைவராகவோ, அசைவராகவோ இருக்கும் நீங்கள் உங்களின் நிலை பற்றி மற்றும் இங்கே குறிப்பிடவும். நீங்கள் சாப்பிடுகின்றீர்களா, இல்லையா? அப்படி சாப்பிடுவதில் உங்களுக்கு ஏதேனும் சஞ்சலங்கள் இருக்கின்றதா? அசைவம் சாப்பிடுகின்றவர்கள் தாங்கள் செய்வது தவறு என்ற குற்ற உணர்வுடன் சாப்பிடுகின்றீர்களா? சைவம் சாப்பிடுகின்றவர்கள் வேறு வழியில்லாமல் சைவம் மட்டும் சாப்பிட வேண்டியுள்ளதே என்று என்றாவது வருந்தியிருக்கின்றீர்களா? குடும்பத்தினர் அனைவரும் ஒரு நிலை சார்ந்து இருக்கும்போது தாங்கள் மட்டும் வேறு ஒரு நிலை எடுத்து இருக்கின்றீர்களா.. இவற்றை பற்றியெல்லாம் சுவாரசியமாக இங்கே உரையாடலாம்.

<b>முக்கிய குறிப்பு: இது எங்கள் மதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது, இதை எங்கள் மதம் வேண்டாம் என்கின்றது என்று மதங்கள் சொல்வதை யாரும் இங்கே சொல்லவேண்டாம். இதில் உங்கள் கருத்து என்ன என்பதை மட்டும் தெரிவிக்கவும். நீங்கள் சார்ந்துள்ள மதம், வேதங்கள் சொல்வதை இங்கே குறிப்பிட்டு விவாதிக்க வேண்டாம். அவை விவாதத்தை திசை திருப்பும். அப்படிப்பட்ட பதிவுகள் உடன் நீக்கப்படும்.</b>

புலால் உண்ணாமை சாத்தியமில்லை என்பதே என் கருத்து.ஏனெனில் நீரில் பல பாக்டீரியாக்கள் உள்ளது.உயிர் கொல்லக் கூடாது எனில் நீர் அருந்த முடியாது.சுடு நீர் அருந்தும் போது சூப் போட்டு குடிக்குரோம்.மாமிசம் தவிர்த்து தாவர உணவு சாப்பிடலாம் என்று யாரும் கூறினால் தாவரங்களுக்கும் உயிர் உள்ளது.மாமிசங்களை அறுக்கும்பொது அதன் வின்ட் பைப்பில் அருத்தால் அதற்கு வலி இருக்காது.அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

உலகில் உள்ள யாவும் மனிதனுக்காக படைக்கப்பட்டவை. அதில் தனக்கு தேவையானவற்றை, தான் விரும்புவற்றை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்ளலாம். ஆக, உணவுக்காக பிற உயிரினங்கள் கொல்லப்படுவது இந்த முதல் வகை. இரண்டாவது வகை, மனிதன் தனக்கு தீங்கு தரக்கூடிய உயிரினங்களைக் கொல்வது. இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் உயிரினங்களைக் கொல்வது கூடாது. துன்புறுத்தக்கூடாது. உண்பதற்காக அறுக்கும்போது கூட, மற்ற வகையில் கொல்லாமல், கத்தியைத் தீட்டி கூர்மைப்படுத்திக்கொண்டு, எப்படி அறுத்தால் அவை வலியை உணரமுடியாதோ அப்படி முறையாக வதையின்றி அறுப்பதே சிறந்தது.

'எல்லா உயிரினங்களும் உயிர்வாழ புலால் உண்ணுவதை தவிர்க்கவேண்டும்' என்பது வெறும் வாய் வார்த்தைக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். மனிதன் உயிர்வாழ அவனுக்காக படைக்கப்பட்ட உயிரினங்களை உண்பது சுயநலமோ, உயிர்வதையோ அல்ல. ஏனென்றால், உயிரினங்கள் என்றால் கால்நடைகள், பறவைகள், செடி கொடி போன்ற தாவர இனங்கள் அனைத்தையுமே குறிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தாவரங்கள் எல்லாம், கால்நடைகள் மற்றும் பறவைகளைப் போல வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளாததால், அவற்றை உண்பதை புலால் உணவு தவிர்ப்போர் உயிர்வதையாக கருதுவதில்லை. வளர்ந்து, காய்த்து, பூத்து, இனவிருத்தியும் செய்யக்கூடிய தாவர இனங்களை சாப்பிடுவது மட்டும் உயிர்வதையாகாது என்று சொல்வோர், தாவரம் என்பது உயிரினம் கிடையாது என்றும் சொல்லப்போகிறார்களோ என்னவோ?

மனிதனின் உணவுத்தேவைக்காக உயிரினங்களை கொல்லலாம் என்பதில் வேண்டுமானால் புலால் உண்போரும் உண்ணாதவரும் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். ஆனால், பல சமயங்களில் உயிரினங்களை கொல்வதில், வதைப்பதில் அறிந்தோ அறியாமலோ யாருக்குமே கருத்து வேறுபாடு வருவதில்லை. எல்லா உயிர்களும் உயிர்வாழவேண்டுமென்றால் எந்த சந்தர்ப்பத்திலும் உயிரினங்களைக் கொல்லக் கூடாது. ஆனால் அது நடப்பதில்லை. உதாரணத்திற்கு,

- நம் உணவுகளை, பயிர்களை உண்ணுகிறது என்பதற்காக எலிகளை,அந்துப்பூச்சிகளைக் கொல்கிறோம்.

- எறும்பு, மூட்டைப் பூச்சி, கொசு போன்றவை நம்மை கடிக்கிறது என்பதால் மட்டுமே அதன் வாழ்க்கையை முடித்துவிடுகிறோம்.

- மனிதன் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காக, மருத்துவ பரிசோதனையின்போது பல உயிரினங்களை பலி கொடுக்கிறோம்.

- தீங்கு தரும் தேள், பாம்பு போன்றவற்றைக் கண்டாலே அது நம்மை தீண்டுவதற்கு முன் விரட்டி, விரட்டி அவற்றைக் கொல்கிறோம்.

- மனிதனுக்காக தயாரிக்கப்படும் எத்தனையோ தடுப்பூசிகள், அவற்றிற்கு தேவையான பல உயிரினங்களைக் கொன்று தயாரிக்கப்படுகிறது.

- மீனின் ஈரலிலிருந்து தயாரிக்கப்படும் மீன் மாத்திரைகளை, உடம்புக்கு அந்த சத்து தேவை என்று எடுத்துக்கொள்கிறோம். அப்போதுமட்டும் மீன்கள் தன் உயிரை இழக்காமலே ஈரலைக் கொடுக்கிறதா?

- ஏன், பட்டு சேலைக்கட்டி பந்தாவாக வலம்வர ஆயிரக்கணக்கான பட்டுபூச்சிகளைக் கொல்கிறோம்.

இவை மட்டும் நியாயமா? எல்லா உயிர்களும் உயிர்வாழ அசைவ உணவுகளை தவிர்த்தல் மட்டும் போதாது. கொதிக்க வைத்த தண்ணீரைக் கூட மனிதன் அருந்தக்கூடாது. ஏனெனில், அதிலும் உயினங்கள் உள்ளனவே!? கண்ணுக்கு தெரியாவிட்டால் மட்டும் அவை உயிரினமாகாதா? இப்படியெல்லாம் ஜீவகாருண்யம் பேசினால், மனிதன் என்ற ஜீவனே முதலில் அழியக்கூடிய ஆபத்துகள்தான் அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.

சரி, 'தாவரங்கள் கால்நடைகளை விட குறைந்த அறிவு கொண்டவை, அதற்கு இரத்தம் ஓட்டப்படுவதில்லை, அதனால் அவற்றை உண்பது தவறில்லை' என்று அசைவம் தவிர்ப்போர் நியாயம் சொல்கிறார்கள், அதனால் எல்லோரும் தாவர உணவுகளை மட்டுமே உண்ணப்போகிறோம் என்றே (கற்பனையாக) வைத்துக்கொள்வோம். அப்போது,

- முதலில் கால்நடைகள் பெருகும்.

- அவற்றிற்கு தேவையான தாவர உணவுகளை பெருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

- கிலோ 10, 20 ரூபாய்க்கு கிடைக்கும் காய்கறிகள், கீரைகள் என்று எல்லா தாவர வகைகளும், இன்றைய உலகில் இருக்கக்கூடிய மக்கள் தொகைக்கு பார்த்தால், கிலோ எத்தனை ரூபாயில் முடியும் என்பதே கணிக்க முடியாது.

- அதனால் அவற்றை வாங்கி உண்ண முடியாமல், கால்நடைகள் உண்ணக்கூடிய தாவரங்களாவது கிடைக்குமா என்று மனிதன் அல்லாடும் நிலை ஏற்படும்.

- உணவுக்காகவே மனிதன் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைக்கூட ஏற்படும். தாவர உணவை மட்டுமே உண்ண, மூன்றாம் உலகப்போரே ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :-)

- தாவரங்களே இல்லாத கடுமையான குளிர்பிரதேசங்களில் வசிப்போர், தன் வயிற்றுப் பசியைத்தீர்க்க தாவரங்களைத் தேடி எங்காவது தஞ்சம் புகுவதற்கோ அல்லது அப்படியே செத்து மடியவோதான் நேரிடும்.

மொத்தத்தில் உணவு பஞ்சம் உலகமெங்கும் பூதாகரமாக உருவெடுக்கும். மனிதனும் வாழ முடியாது, தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய கால்நடைகளும் வாழமுடியாது. ஆக செயல்படுத்த சாத்தியமானதை சிந்திப்போம்! அதையே செயல்படுத்தவும் செய்வோம் என்று கூறி முடிக்கிறேன்.

dear asma sister
u typed whatever i think.i am wondering how u typed in tamil lot.may almighty shower his blessings upon u

அஸ்மாக்கா எல்லாவற்றையும் விவரித்து விட்டார்கல்..நான் சொல்ல ஒன்னும் இல்லை.

உலகம் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் போகிரது. சொ நார்மல் லைப் சைகில் இப்படி தான் போகும் as follows...

மனிதன் இறந்த பின் பயிர்கு உரமாகிரோம்..பயிர் விலைந்து மனிதன் மற்றும் பல உயிர்கலுக்கு உனவாகிரது..அதே போல் எல தழைகல உண்ட ஆடு மாடுகலை மனிதர்கல்லுக்கு உனவாக உண்கிரார்கள்..சோ அது தான் "life cycle'.

- இன்னும் பல விலக்கங்கலுடன் வருவோம் வெல்வோம்..-- வற்டா..
- அஹ்மது
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

// நீக்கப்படுகின்றது //

கருணைக்கடல் மாதிரி பேசிட்டு, "எனக்கு யாரும் பதில் கொடுக்க வேண்டாம். கேள்வியும் கொடுக்க வேண்டாம்" னு வர்ற பதில கேட்காம காதப் பொத்திட்டு போனா எப்படி? கொஞ்சம் வேல இருக்கு, இதோ முடிச்சிட்டு வந்திடுறேன்.உங்களுக்கு மனசில பட்ட மாதிரி எங்களுக்கு பட்டத நாங்களும் சொல்லணும்ல...?

இது என்னோட சொந்த அனுபவம்.. நான் அசைவம் சாப்பிடும் குடும்பத்தை சேர்ந்தவள்.. என்னுடைய 5ஆவது வயதில் அசைவம் சாப்பிட தொடங்கினேன்.. சில மாதங்கள் இருக்கும்,எங்கள் அம்மாச்சி ஊருக்கு திருவிழாவிற்கு சென்றிறுந்தோம்.அங்கு கடவுளுக்கு பலி கொடுப்பதை நேரில் பார்த்தேன்.. அந்த கொடுமையெல்லாம் பாக்கறதுக்கு திடமான மனசு வேணும்.. அன்றிலிருந்து நான் அசைவம் சாப்பிடுவதில்லை(எப்படி அப்படி தோனிச்சுன்னு தெரியல).. எங்கம்மா தான் ரொம்ப திட்டினாங்க,அப்பாவிற்கு ரொம்ப சந்தோஷம்.. நல்ல வேளை யாரும் கம்ப்பெல் பன்னல.. சின்ன வயசு தானே பெரியவளான சாப்பிடுவான்னு விட்டுட்டாங்க.. கொஞ்சம் வளந்ததும் மருபடியும் எங்கம்மா சாப்பிட சொல்லி கம்ப்பெல் பண்ணினாங்க..(சத்து வேணுமாம்..) எங்கப்பாதான் எனக்கு சப்போர்ட் பண்ணினார்..(அவரும் 20 வருடமாக அசைவம் சாப்பிடுவதில்லை).. இது வரைக்கும் நான் சைவமே சாப்பிடுகிறேன்..இனிமேலும் அப்படித்தான்... என் கணவர் அசைவம் சாப்பிடுபவர்,அவங்க அம்மா சாப்பிட மாட்டாங்க(மாமியார்).நானும் சைவம் என்பதால் என் மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம்.. கல்யாணத்திற்கு பிறகு மாறி விடுவேனென்று என் தோழிகள் சொல்வார்கள்.அவருக்காக கூட நான் அசைவம் சமைப்பதில்லை... என்னவருக்கும் நான் அசைவம் சாப்பிடாதது சந்தோஷமே.

அசைவம் சாப்பிடாததால் என் தோழிகள் நிறைய பேர் கிண்டல் பண்ணுவார்கள். நீ என்ன ரொம்ப ஆச்சாரமா?வீட்டுல சாபிடுவாங்கள்ல?ரொம்ப பிகு பண்ணாதன்னு சொல்லுவாங்க.. நானும் பதிலுக்கு நீங்களெல்லாம் காட்டு மிராண்டிக்கன்னு சொல்ல வாய் வரும்.. என்ன செய்ய சில நேரங்களில் நாம் நினப்ப்பதை நம்மால் செய்ய முடிவதில்லை. என் கணவரின் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தோம்.. அவங்களும் உங்களுக்கு எப்படி ஞானம் வந்தது?எந்த மரத்தடியில உக்கார்ந்தீங்கன்னு கிண்டல் பண்ணினாங்க.. ஆனா நான் சைவம் என்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு ...

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

அசைவ உணவு ருசி இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு.. சைவ உணவை விட அது ருசியிலும் ,சத்திலும் எந்த விததிலும் அதிகம் இல்ல.. நாற்றம் தான் மிச்சம். ஆட்டையோ,கோழியையோ செல்லமா வளத்துட்டு அத கொல்ல எப்படி தான் மனசு வருமோ?தெரியல.. அத வளக்குறதே கொல்லத்தான் என்று தெரியாமல் அதுவும் அவங்க பின்னாடியே போகும்.. கொஞ்சம் கோவமா சொன்னாலும் ஹரிராம் சொன்னது சரிதான்..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

உங்க மனசுக்கு பட்டது போல எங்க மனதுக்கு பட்டதையும் பேசுவோம்.
புலி பசித்தாலும் புல் திங்காது.காரணம் அதன் பல் வரிசை கூர்மை.அதன் குடல் அமைப்பு தாவரத்தை செரிமானம் செய்ய முடியாது.அது போல் தாவரம் சாப்பிடும் விலங்குகளான ஆடு மாடுகளுக்கு பல் வரிசையும் குடல் அமைப்பும் தாவரம் மட்டும் சாப்பிடும் நிலையில மட்டும் படைக்கப் பட்டுள்ளன.மனிதனுடைய பல் வரிசையும் குடல் அமைப்பும் எதையும் சாப்பிடும் வகையில் படைக்கப்பட்டுள்ளன.
ஒரு மனிதன் அசைவம் சாப்பிடுவது சரி இல்லை என்ரு வாதுக்கு வைத்துக் கொன்டாலும் அவன் தாவிரமும் சாப்பிடக் கூடாதுதான்.தாவிரத்தை அறுத்து உன்டாலும் அதுவும் அழும்.அதற்கும் வலி இருக்கும்.என்ன செய்வீர்கள்?

ஜீவ காருண்யம் பேசுகிறீர்கள்.மாடு தன் குட்டிக்கு வைத்திற்கும் பாலை மட்டும் குடிக்குகிறீர்கள்.கறக்குறீர்கள்

அதற்கு வலி இருக்காதா?
சொல்லுங்கள் கோழியின் முட்டை ஸைவமா?

அப்பு கண்ணா,

என்னுடைய கருத்தை சொல்ல நினைத்தால் அதை என் பேரிலேயே சொல்லும் தைரியம் எனக்கு இருக்கிறது. உங்களைப் போல் பெண் பெயரில், சிநேகிதி, ஷில்பா, ஷமி என்றெல்லாம் வரப்போவதில்லை மிஸ்டர் சிராஜ். எத்தனை முறை குட்பை சொன்னாலும் மீண்டும் மீண்டும் வருவேன் என்று அடம்பிடித்தால் எப்படி? இதற்கு மேல் எப்படி விரட்டுவது?

மேலும் சில பதிவுகள்