திருக்குறளை பற்றி

(மாலத - சொந்த ஊர் பொள்ளாச்சி. என் கணவரின் வேலை நிமித்தம் இப்போது திருச்சியில் இருக்கிறோம். அடுத்தது எந்த ஊரோ தெரியவில்லை. எனக்கு ஒரு பெண், ஒரு பையன், ஒரு பேரன் இருக்கிறார்கள். பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. பையன் ஃபோர்த் இயர் எஞ்ஜினியரிங் ஸ்டுடன்ட். என்னுடைய ஹாபீஸ் .....பெயின்டிங், கார்டெனிங், ட்ராயிங், தையல், நல்ல கவிதைகள் படிப்பது. பிடித்தது திருக்குறள். பிடிக்காதது டிவி ஸீரியல்கள். மிகவும் பிடித்த ( தினமும் ஒரு தடவையாவது மனதிற்குள்ளே சொல்லிக்கொள்ளும் ) திருக்குறள்... 7-வது அதிகாரத்தில் 7-வது குறளான 'தந்தை மகற்கு ஆற்றும்........ என்ற குறளும், 10-வது குறளான 'மகன் தந்தைக்கு ஆற்றும்.... என்ற குறளும் ஆகும். ஃபிரன்ட்ஸ் கொஞ்சம் திருக்குறளை பற்றி பேசுவோமா? ஒவ்வொருவருக்கும் பிடித்த குறளை சொல்லுங்களேன்.)

மாலதி வேற த்ரெட்டில் துடங்கியது இது..அங்கே பல பக்கம் வந்து விட்டதால் இங்கே தனி த்ரெட் தொடங்கிட்டேன்..

இப்படி ஒரு பயனுள்ள விஷயத்தை மாலதி கொண்டு வந்ததற்கு நன்றி

எனக்கு பிடித்தது
முகநக நற்பது நற்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

செவிக்குணவில்லாத போழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

எப்படி இருக்கீங்க? சாரி, ரொம்ப பிசியா ஆனதால இந்தப் பக்கமே வர முடியல. இன்னும் ஒரு வாரம் கழிச்சு ரிலாக்ஸ்டா இருக்கும். எனக்கு திருக்குறள் அத்தனையுமே பிடிக்கும். ஸ்கூல் படிக்கும்போது குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துப்பேன். அதனாலேயே எல்லா குறளும் படிக்கற வாய்ப்பு கிடைச்சது. முதல் பரிசு என் பிரெண்டு பொன்னிதான் வாங்குவாள். இன்னமும் அவள் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல கணீர் குரல். சரியான உச்சரிப்பு. நீ என்ன வாங்கினேன்னா கேக்கறீங்க, நான் 2 முறை கலந்துக்கிட்டும் ஒரு முறை இரண்டாவதும், மூன்றாவது பரிசு ஒரு முறையும் வாங்கினேன். எப்பவும் தூக்கத்தில் கூட, உலகு என்று முடியும் குறள் என்ன?, சுடும் என்று முடியும் குறள் என்னன்னு ஒரே சிந்தனையில் வீட்டில் இருக்கவங்க நிம்மதியை கெடுத்ததுதான் மிச்சம். என் அப்பாவுக்கு என்கிட்ட திருக்குறள் புக்கை வெச்சு கேள்வி கேட்டு கேட்டு வெறுத்தே போயிருக்கும்னு நினைக்கிறேன். இதைக் கேளு, அதைக் கேளு சரியா சொல்றேனான்னு பாருங்கன்னு உயிரை வாங்கியிருக்கேன். இப்ப நினைச்சா என் பையன் அப்படிலாம் கேட்டா பொறுமையா பதில் சொல்வேனான்னு தெரியல. ஆனால் இப்பலாம் ஒவ்வொரு குறளோட அர்த்தமும் நல்லா புரியும்போது எல்லா குறளுமே ஆச்சரியமான விஷயமாதான் எனக்கு இருக்கு. ஒவ்வொண்ணுமே எப்ப சொன்னாலும் அன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்றதாகத்தான் இருக்கு.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றெ உலகு.

எனக்கு என் அம்மா சொல்லி தந்த வாழ்க்கை முறை குரல்..
" இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான
நன்னய்யம் செய்து விடல் "

- ஆமா K.பாலசந்தர் ஒட புரொடுசர் தானெ திருவல்லுவர் ???? அவர் படத்தில தானெ முதல் சீனுல வருவாரு ???
ஒஹ்,, சாரி..அடிக்காதீஙக. சும்மா தான் கேட்டேன்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

நம்ம கட்சி தான்..மாலதி எழுதினதும் தாவி ஓடிவந்துட்டேன்....நானும் திருக்குறள் உக்கு அடிமை....ஒவ்வொன்னும் அதும் ரெண்டு வரியில் இத்தனை அர்த்தமுள்ளதாய் எப்படி சொனார்னு ஆச்சரியம்.
ஆமா தேவா நேரம் தான் இப்ப கிடைக்கிரதில்ல..அதே தான் என் கசின்ஸ்கு கூட குறள்னெல்லாம் சொன்னா தூரமா ஓடிடுவாங்க..நான் மட்டும் அப்பவும் விருப்பமா படிச்சிட்டிருந்தேன்..என் பொண்ணுக்கு எப்படியோ தெரீல...என் கனவருக்கு இப்ப நான் ஆங்கிலத்தில் அர்த்தமுள்ள தளங்களை காமிச்சு அவர் படிச்சப்ப அவருக்கும் ஆச்சரியம்..அவரும் இப்ப 1 குரளை படிச்சுட்டார்"அகர முதல.."
அப்ப தேவா ஒரு சகலகலாவல்லவி தான் .சும்மா இல்ல தமிழ்ல இப்படி கலக்கரீங்க.

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

இந்த குறள் இரண்டு எனக்கு பிடித்த குறள்.
என்றும் அன்புடன்,
சுஜாதா பாலாஜி.

ஹாய்,
இதுதா எனக்குப் பிடித்த குறள்
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"
பொருள்:
நாம பேசுறதுக்கு நிறைய நல்ல இனிமையான வார்த்தைகள் இருக்கும் போது வேண்டாத துன்பமான வார்த்தைகளை பேசுறது, ஒரு மரத்தில் சுவையான பழங்கள் இருக்கும் போது அதெல்லாம் விட்டுட்டு அதுல உள்ள கசப்பான காய்களை சாப்பிடுவது போன்றது.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

எனக்குப் பிடித்த குறள்கள் 1330
ஆனால் எனக்குத் தெரிந்த குறள்களில் ரொம்ப பிடித்தது

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

பொருள் - 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'.

என் கணவருடன் பணி புரியும் ஒரு பெண் திருக்குறள்களை எளிமைப் படுத்தியிருக்கிறார்கள். மாதிரிக்கு ஒன்று:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை

புதுக்குறள்

கணவனைத் தெய்வமாய் தொழுபவள் நாளும்
பெய்யெனச் சொன்னால் மழை மண்ணில் வீழும்

அவரும், நீங்களும் அனுமதித்தால் மற்றவற்றையும் தருகிறேன்.

அன்புடன்
ஜெயந்தி

தீபாவளி நேரத்தில் பட்டாஸ் விடும் குழந்தைகளுக்காக ஒரு திருக்குறள்:

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
பொருள்: அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சியே ஆகவேண்டும்; அதுவே அறிவுடமை; அவ்வாறு அஞ்சாதிருத்தல் மடமை.

தேவசேனா மேடம்
நீங்கள் பள்ளியில் படிக்கும்போது திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுகள் வாங்கியிருப்பதை கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எந்த பள்ளியில் படித்தீர்கள்?
உலக பொது மறை என்னும் கடலில் எனக்கு பிடித்த இன்னுமொரு தேன் துளி;
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
வாழ்க்கையை புரிந்துகொள்ள திருக்குறளை படித்தால் போதும்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

மாலதி மேடம், திருக்குறளைப் படித்து எவ்வளவோ நாட்களாச்சு.பள்ளியில் தோழிகளுடன் சேர்ந்து ரசித்து படிப்போம். என்னை மீண்டும் மலரும் நினைவுகளுக்கு அனுப்பிய உங்களுக்கு மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்