திருக்குறளை பற்றி

(மாலத - சொந்த ஊர் பொள்ளாச்சி. என் கணவரின் வேலை நிமித்தம் இப்போது திருச்சியில் இருக்கிறோம். அடுத்தது எந்த ஊரோ தெரியவில்லை. எனக்கு ஒரு பெண், ஒரு பையன், ஒரு பேரன் இருக்கிறார்கள். பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. பையன் ஃபோர்த் இயர் எஞ்ஜினியரிங் ஸ்டுடன்ட். என்னுடைய ஹாபீஸ் .....பெயின்டிங், கார்டெனிங், ட்ராயிங், தையல், நல்ல கவிதைகள் படிப்பது. பிடித்தது திருக்குறள். பிடிக்காதது டிவி ஸீரியல்கள். மிகவும் பிடித்த ( தினமும் ஒரு தடவையாவது மனதிற்குள்ளே சொல்லிக்கொள்ளும் ) திருக்குறள்... 7-வது அதிகாரத்தில் 7-வது குறளான 'தந்தை மகற்கு ஆற்றும்........ என்ற குறளும், 10-வது குறளான 'மகன் தந்தைக்கு ஆற்றும்.... என்ற குறளும் ஆகும். ஃபிரன்ட்ஸ் கொஞ்சம் திருக்குறளை பற்றி பேசுவோமா? ஒவ்வொருவருக்கும் பிடித்த குறளை சொல்லுங்களேன்.)

மாலதி வேற த்ரெட்டில் துடங்கியது இது..அங்கே பல பக்கம் வந்து விட்டதால் இங்கே தனி த்ரெட் தொடங்கிட்டேன்..

ஆஹா..எல்லாரும் திருக்குறள் சொல்லி கலக்குறீங்க..எனக்கு தெரிந்த எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க..ரீஹா பொழிப்புரையும் குடுத்து அசத்திட்டாங்க..ஜெயந்தி மாமி பொழிப்புரை அர்த்தம் எளிமையா புரியுது.. உங்கள் நேரம் அனுமதித்தால் நிறைய குறள் தாருங்கள்..

அழகான , எளிமையான பொழிப்புரையோட திருக்குறள் படிக்க வலைத் தளம் தெரிந்தால் சொல்லுங்கள்.

திருக்குறளில் இதுதான் பிடிக்கும் என்று வரையறுக்க முடியாது...எனக்கு தெரிந்தவை சில..

யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

அம்பிகா

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

தப்பா நினைக்காதீங்க ஜெயந்தி மாமி! இப்பெல்லாம் திருமணமான பெண்கள் பெய் என்று சொன்னால் மழை பெய்ய மாட்டேங்கிறதே! இதனால் நாம் கணவனை தெய்வம் போல் நினைக்க வில்லையா?இல்ல இந்த குறளுக்கு வேறு அர்த்தம் இருக்கா?

உண்மையான சந்தேகம் .நக்கல் இல்லை.. உண்மையன உள் ஆர்த்தம் தெரிந்து கொள்ளும் நோக்கமே.
அம்பிகா

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

நாவினாற் சுட்டப்புண் ஆறாதே ஆறிவிடும்
தீயினால் சுட்ட வடு.

தேவா எனக்கும் திருக்குறள் மனப்பாடம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் சின்ன வயதில் ஸ்டேஜ் பயம்.

ஜானகி

எனக்கும் அதெ குறள் தான் பிடிக்கும்

தோழி ஜானகி அவர்களுக்கு

எனக்கும் நேங சொன்ன குறள் ரொம்ப பிடிக்கும். அதோடு
குழலினிது யாலினிது என்பர்
தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்

கூட ரொம்ப பிடிக்கும்.

உங்களொட போஸ்ட் ஒன்னுல படிச்சேன் நீங்க கோவில்பட்டி பக்கம் என்று. என்னொட சொந்த ஊர் கோவில்பட்டி தன். நேங கொவில்பட்டில படிச்சீங்கலா. விருப்பம் இருந்தால் எந்த ஸ்கூல் என்று சொல்லவும்.

ஹைய் அம்பிகா

ஜயந்தி மேடம் கிட்ட கேள்விக்கு நான் பதில் சொல்வதர்க்கு மன்னிகவும். அவங்க கண்டிப்பா நல்ல பதில் சொல்வஙன்னு நினைக்கிரேன்.இந்த காலத்துல எந்த ஹஸ்பன்டும் தெய்வமா நடந்துகரது இல்ல.எந்த மனைவியும் ஹஸ்பன்ட தெய்வமா மதிக்கரதும் இல்ல.

இப்பொ எல்லாம் தமிழ் நாட்டுல நல்ல மழை பெய்யுது அம்பிகா.பேங்களூர்ல இப்பொ ஒரு ரென்டு நாலதன் மழை நின்னிருக்கு.காவெரி தண்ணி தரலைன்னு கூட இப்பொல்லம் சொல்ல தேவையில்லாத அளவுக்கு நல்லாதன் மழை பெய்யுது.அதனால இனிமெ மழை நிருத்த சொல்ரதுக்கு தன் பத்தினி பெண் வெனும்னு நினைகிரென். வாசுகி வள்ளுவர் மனைவி வள்ளுவர் கூப்பிட்ட உடனெ வாளிய கினதுல விட்டு வந்தாங்களாம்.அந்த வாளி கிணத்துக்குள்ள விழுகாம அப்பிடியெ நின்னுச்சாம்.இதெல்லம் நடக்கிர காரியமா.இப்பொ எல்லம் பிசியா இருக்கும் பொது ஹஸ்பன்ட் செல்ல்பொனெல கூப்பிட்டாலெ கட் பன்ர காலம் இது.

எனக்கு சொந்த ஊர் கோவில்பட்டி பக்கத்தில் ஒரு கிராமம் ஆனால் வள்ர்ந்தது, படித்தது எல்லாம் சென்னை தான். தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜானகி

தீபாவளி வாழ்த்துக்கள் ஜானகி.வாழ்த்துக்களுக்க்கு ரொம்ப நன்றி.

அம்பிகா எனக்கு எல்லா குறளும் பிடிக்கும். ஆனா கடை பிடிக்கறது!
என் கணவர் "நான் பச்சை காக்கா பறக்குதுன்னு சொன்னா நீ ஆமாம்ன்னு தலையாட்டணும்" என்று சொல்கிறார். நடக்கிற காரியமா?

திருக்குறளைப் படிப்போம், ரசிப்போம், பட்டம் வாங்குவோம்.
ஹி ஹி ஹி ஹி ஹி அதன்படி நடப்பது இன்றைய கால கட்டத்தில் கஷ்டம்தான். முடிந்தவரை முயற்சிப்போம்.
அன்புடன்
ஜெயந்தி

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

மோப்பக்குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

தீயினால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

இந்த குறள்கள் எனக்கு மகவும் பிடித்த குறள்கள்.

மறுபடியும் திருக்குறளை பற்றி ஆரம்பித்தற்கு நன்றிகள் பல.........
இன்றைய காலக்கட்டதிற்கு ஏற்ற ஒரு குறள்

1. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
இதன் பொருள் - நாட்டில் நடப்பவைகளை உடனுக்குடன் உண்மையாக ஒற்றன் மூலம் தெரிந்துகொண்டு அரசாள்வது மன்னனின் கடமையாகும்.

2. நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.
இது நட்பை பற்றிய குறள். இதற்கு விளக்கம் சொல்ல தேவை இல்லை.

3. அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
பொருள் - அறிவே நம்மை காக்கும் பெரிய அரண்.

4. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
பொருள் - நுட்பமாக கேட்டு புரிந்து கொள்ளும் திறன் வேண்டும்.

அம்பிகா..!!...உங்க சந்தேகத்திற்கு ஒரு சிறு விளக்கம் கூற ஆசைப்படுகிறேன்.
பெண்கள் மழையை கூட பெய்விக்க முடியும் என்ற நேரடியான அர்த்தத்தை கொள்ளகூடாது. அதாவது தன்னுடைய கடமைகளை சரிவர செய்து குடும்பத்தை பேணி பாதுகாக்கும் பெண்ணானவள் கூறும் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு இருக்கும். அவளால் எதையும் சாதிக்கமுடியும் என்பதைத்தான் வள்ளுவர் கொஞ்சம் மிகைப்படுத்தி ' பெய்யென பெய்யும் மழை'... என்று கூறி இருக்கிறார்.

மாலதி பாருங்கலேன் கரெக்ட்டா ஒரு வருடம் பிறகு இன்று நாம் தொடங்கி வைத்துள்ளோம்.நவம்பர் 7 2007 அன்று கடைசி பதிவு உள்ளது.எதேச்சையாக இன்று நாம் பார்த்துள்ளோம்.

மேலும் சில பதிவுகள்