attention 1 2 3

குழப்பமோ குழப்பம்

கர்ப்பிணி பெண்கள் பகுதில இருக்கற என் கேள்விக்கு உடனடியா வந்து பதில் சொல்லிட்டு போங்க சகோதரிகளே. கொஞ்சம் விட்டா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும். இதை படிச்சிட்டு நேரா அங்க தான் வரணும் புரிஞ்சதா?

அன்புடன்,
ஹேமா.

அடுத்த குழப்பம் :-)

சரி கர்ப்பம் குழப்பம் பத்தி தெளிவு கிடைச்சாச்சு. அடுத்ததா வேற ஏதாவது பேசலாம்.

எனக்கு சமைக்க ஆர்வமா இருக்கு, கல்யாணம் ஆகி இந்த 10 மாசத்துல என்னால ஆன சைவ அட்டம்ஸ் எல்லாம் தேடி தேடி சமைச்சிட்டு தான் இருக்கேன். ஆனா கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சுட்டெ வருது ஆர்வம்.

ஏன்னா நான் நிறைய காய்-பழம் இப்படி தான் சாப்பிடுவேன். கணவருக்கு சாப்பிட பிடிக்கும் ஆன வயிறு முட்ட 3 வேளையும் சாப்பிடுபவர் இல்லை (ஹிஹி நான் நல்லா தாங்க சமைக்கிறேன்). ஏதாவது புதுசா செஞ்சா நான் தான் வாயை திறந்து வார்த்தையை பிடுங்கணும்- நல்லாருக்கு இல்லைனு. அப்படியே நல்லா இருந்தலும் ஒரு வேளை தான் உள்ளே போகும், எனக்கு எப்படி ஒரு ஆளுக்கு ஒரு வேளைக்கு மட்டும் வர்றா மாதிரி சமைக்கறதுனே புரியல. மினிமம் பண்ணறதே5 - 6 பேருக்கு பண்ணர மதிரி பண்ணரேன் அனா நிறை வீணா தான் போகுது கடைசில. எப்படி சமாளிக்கலாம்? ஒண்ணூமே சமைக்காம இருந்தா மாமனார் மாமியார் வரும் போதும் ச்மக்கவே தெரியாதே. ஏதாவது வழி இருக்க இதுக்கு?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

என்னடா சுபா தான் ஊருக்கு போயிட்டாங்களேனு பார்க்கறீங்களே சும்மா அவங்களுக்கு சப்ஸ்டிட்யூட் ;-)

எல்லோருக்கும் இனிய தித்தித்துக் கொட்டும் தீபாவளி அமையட்டும். அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

சிரிச்சிட்டு இருக்கேன் :-) இப்ப தான் interview கால் வர போகுது. டென்ஷனா திறந்தா, உன் பதிவ பாத்து ஒரே சிரிப்பு :-)

ஆமா, நான் பாத்தேன். ரொம்ப மரியாதையா பேசி இருக்கேன்ல. அது ஏன் தெரியுமா. அவ்வளவு டென்ஷன்ல, ஓடறதுல இருந்தேன் அப்ப :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹேமா கெக்கெபெக்கென்னு சிரிக்கிரேன்...அதே தான்...நானும் திருமனம் முடிஞ்சதும் இப்படி பல முறை டென்ஷனாகியிருக்கேன்..அபம் வேனுஙும்போது மேல இருப்பவர் 1.5 வருஷத்துக்கு தரமாட்டேன்டார்..அப்ரம் அழுது புலம்பி ஒரு குறும்பிப் பொண்ணை வாங்கினேன் அவர்ட..
ஹர்ஷ் டென்ஷன் வேண்டாம் எல்லாம் நல்லபடியா நடக்கும்.

அறுசுவை மக்களே ..என்னால் எந்த த்ரெட்ட்லும் நுழைய முடிவதில்லை....ஆனால் படிச்சுட்டேன் ஒரு வழியா..

எந்த த்ரெடிலும் என்னாலும் உள் நுழைய முடியவில்லை :( அதனால் இங்கே பதில் கொடுக்கிறேன்.

உமா

அந்த பதிவு உங்களை நேரடியாக தாக்கியாக தான் எனக்கு பட்டது. வேண்டும் என்றே யாரோ நீங்கள் சொல்வதை மிகவும் கேவலப்படுத்தி பேசியது போல இருந்தது. அதுவும் அதை சொல்லி இருந்த விதம் கொடூரத்தின் உச்சம். நானும் ஒரு தாய் தானே? என்னால் என் மகனுக்கு ஒரு சிறு காயம் ஏற்பட்டாலும் உடனே அழுது விடுவேன். எனக்கு எப்போதுமே குழந்தைகளை யாராவது குரூரமாக பேசினால் சுத்தமாக பிடிக்காது. எல்லா தாய்மார்களுக்கும் அப்படித்தானே இருக்கும்.

ஆனால் இந்த மாதிரி ஆட்கள் இப்படிப்பட்ட reaction தான் எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட அற்ப சந்தோசத்தை கொடுக்க வேண்டுமா என்று யோசித்தேன். ஆனால் குட்ட குட்ட குனியும் பெண்கள் இவர்கள் என்று தப்பு கணக்கு போட கூடாது பாருங்கள்? அது தான் என்னை அந்த பதிவை போட செய்தது.

என் உடல் நலம் தற்போது சிறிது பரவாயில்லை. உங்கள் விசாரிப்புக்கு மிக்க நன்றி :)

அன்புடன்
உமா

உங்களுடன் பேச வேண்டும் என்று எனக்கு வெகு நாட்களாக ஆசை. நீங்கள் எல்லாரிடமும் அன்பாக பேசும் விதம், உங்கள் வெளிப்படையான பேச்சு, நடந்து கொள்ளும் விதம் எல்லாம் எனக்கு பிடிக்கும் :) வெளிப்படையான பேச்சுக்கு நம் தளிகா தான் ராணி :) அவர்கள் பேசும் விதமும் எனக்கு பிடிக்கும். இப்போது தான் எனக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது உங்களுடன் பேச :)

வேலை ரொம்ப பிசியாக இருக்கிறது ஜானகி. :( என் வேலையும் அப்படிபட்டது. சில சமயம் வீட்டுக்கு வர இரவு 10 ஆகிவிடும். உங்களுடன் எல்லாம் பேச எனக்கும் ஆசைதான். ஆனால் நேரம் கிடைப்பதுதான் பிரச்னை. நான் பார்ட் டைம் படிக்கவும் செய்கிறேன். அதான் வந்து படித்து ரசித்து விட்டு போய்விடுவேன்.

ஆமாம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இந்தியா செல்கிறோம். 6 வாரங்கள். நீங்கள் எங்கும் செல்லவில்லையா? ஆஸ்திரேலியா பழகி விட்டதா? இது அருமையான நாடு. பழகிவிட்டால் மிக அருமையான நண்பர்கள். எனக்கு இந்தியன் நண்பர்கள் மிக மிக கம்மி. அறுசுவையில் தான் தமிழ் :) ஆனால் என் தோழிகள் தோழர்கள் எனக்காக எதையும் செய்வார்கள் :) அதனால் தைரியமாக எல்லாருடனும் பழகுங்கள். உங்கள் சொந்த வாழ்கையில் ஏமாற்றம் அடைந்து இருக்கிறீர்கள் அல்லவா? அதை படித்து எனக்கு அழுகையாக வந்தது :( ஆனாலும் உடைந்து போகாமல் தைரியிமாக வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம் என்று வந்து இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் வெற்றி அடைவீர்கள் :)

என் இனிய சகோதரிக்கு என் உளமார்ந்த தீபாவளி நாள் வாழ்த்துக்கள் :)

அன்புடன்
உமா

அருசுவை தோழிகள் அணைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

இந்தியாவில் இல்லாதவர்கள் எப்படி எல்லாம் தீபாவளி
கொண்டாடுகிரீகள் ?எனக்கும் சொல்லுங்களேன்....

என்றும் அன்புடன்
அனிதா

hi

டியர் ஹேமா
எப்படி இருக்கீங்க ? குறைவா சமைக்கனும்னா, எல்லா பொருளையும் பாதியா குறைச்சு , முக்கியமா நீங்க சமைக்கிற பாத்திரத்தின் அளவையும் குறைச்சு செஞ்சு பாருங்க..
நான் சின்ன பாத்திரத்தில் செஞ்சு தான் கம்மியா சமைக்க ஆரம்பச்சேன்...அதான் ...உங்களுக்கும் ஓர்க் அவுட் ஆகுதானு செஞ்சு பாருங்க

என்றும் அன்புடன்
அனிதா

hi

மேலும் சில பதிவுகள்