இரட்டை குழந்தை பற்றி

கர்ப்பிணி பெண்கள் பகுதியில் இருக்கும் அனைத்தும் உபயோகமான தகவல்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மேலும் இரட்டை குழந்தை (ட்வின்ஸ்) பற்றிய தகவல்களும் இருந்தால் இன்னும் உதவியாக இருக்கும்.

நன்றி.

இந்திரா என் பொன்னு சரியான அட்டஹாசம் பன்ரா..அதனால் அவசரமா ஒரு பதிவு

இரட்டை குழந்தை கர்ப்பம்னு தானே சொன்னீங்க..ஒன்னே ஒன்னு இப்ப சொல்ல விரும்புவது பெரியவர்கள் ரெண்டு குழந்தைக்கு சாப்பிடனும்னு நல்ல 4 தட்டு சாப்பாடு கொடுப்பாங்க..அப்படி கன்டபடி சாப்பிட்டு உடம்பு ஏறினால் பின்னாளில் கஷ்டம்
நல்ல சத்தான உணவை மட்டும் பார்த்து பார்த்து இரு குழந்தைக்கும் கிடைக்கும்படி சாப்பிட சொல்லூங்கள்..
எண்ணை வகைகளை முடிந்த வரை தவிர்த்து மற்றவை எப்பொழுதும் போல் சாப்பிடட்டும்.
இரண்டு குழந்தையை கர்ப்பமானால் ப்ரெக்னன்சி சிம்ப்டம்ஸ் கூட அதிகமாக இருக்கும்..மார்னிங் சிக்னெஸ்,கழுத்து நெரிப்பது போன்ற உணர்வுகள் முதலிய கர்ப கால அசௌகரியங்கள் இருமடங்காக இருக்கலாம்.
அதனால் இயன்ற அளவு உடல் சோர்வாகாத படியான வேலைகளை மட்டும் செய்யட்டும்..துணைக்கு அருகில் யாராவது இருந்தால் நல்லது
இப்பொழுதே குழந்தை பிறந்த பின் அதனை பராமரிப்பதற்கு நம் மனதை தயார்படுத்திக் கொள்ள சொல்லுங்கள்..ஒரு குழந்தை பிறந்து அதை பராமரிப்பதற்கே நேரம் கிடைக்காது..இரண்டு என்றால் இன்னும் கொஞ்சம் சிரமம்...ஆனால் நம்மை நாமே தயார்பfஉத்திக் கொண்டால் எதுவும் கஷ்டமில்லை.
தவறாமல் செகப்களுக்கு போகவும்..ஒரு நல்ல மருத்துவரிடன் போவதும் முக்கியம்.
வேற இனி என்ன சொல்ரதுன்னு தெரீல.எத்தனை மாதன் ஆகிறது

ரொம்ப நாளைக்கு பிறகு தங்களிடம் பேசுகிறேன்.
அக்காவிற்கு பெண் குழந்தை பிறந்து ஐந்து மாதம் ஆகிறது.
குழந்தை நன்றாக இருக்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அக்கா எனக்கு போட்டொ அனுப்பிவைத்தார்கள்.

இப்படிக்கு
இந்திரா

indira

மேலும் சில பதிவுகள்