கூட்டாஞ்சோறு வார சமையல் 7 (11/11/2007 - 18/11/2007)

லென்ரில் சூப் --- திருமதி நர்மதா #5197

மீன் இறால் பிரியாணி --- திருமதி மனோகரி #2631

சிம்பிள் மாங்காய் சாதம் --- திருமதி ஜெயந்தி #4940

ஆலு பரோட்டா --- திருமதி செய்யதுகதீஜா #3730

இறைச்சிவடை --- திருமதி ரசியா #5921

ராஜ்மா கிரேவி --- திருமதி அனிதாசாந்தி #5642

நட்ஸ் புலவு --- திருமதி முத்துலட்சுமி #2909

சிக்கன் சாப்பீஸ் - 2 --- திருமதி அஸ்மா #2_75

தாய்லாந்து வெள்ளரிக்காய் சாலட் --- திருமதி தேவசேனா #5626

கஸ்டர்ட் அப்பிள் புடிங் ---திருமதி நர்மதா #5924

மட்டன் முட்டை சாப்ஸ்---திருமதி சரஸ்வதி #4391

மைக்ரோவேவ் பாதாம் அல்வா --- திருமதி ஹவ்வா_அலியார் #3867

இதனை கூட்டாஞ்சோறு ஃபெப்ரவரி குறிப்பா மாத்தி இந்த மாதம் இதனை செய்வோம்...ஆனால் ரோஸை தான் கானவில்லை

நீங்க பேசும் வரும் போது என் தம்பி கூட பேசிக்கொண்டிருந்தேன்.
ரொம்ப சாரி இப்ப முடிந்தா வாங்க
இல்லை, இவினிங்க் 4.30 க்கு வாங்க
ஜலீலா

Jaleelakamal

இல்லை ஜலீலாக்கா சாரி வேனாம்.கொஞ்சம் பூரிவேனா செஞ்சு கொடுங்க:-). என் பொன்னு எழுந்துட்ட அதான் சொல்லாம கொள்ளாம போயிட்டேன்.

எல்லோரும் எங்கே??நான் இங்க ஏதோ வேன்டுதல் மாதிரி பலபல வேலைகளுக்குகிடையில் ஓடி ஓடி வந்து பதிவு போட்டுட்டு போறேன்...மற்றவர்கள் எங்கே?புது செர்வெர் வந்தாச்சுங்கோ

தம்பிக்கு பத்து நாளா உடம்பு சரியீலையாம்.
தூங்காம பேசிக்கொண்டிருந்தான் அதான் உங்களை வெயிட் பன்ன் சொன்னேன்,
சரி பிறகு பார்க்கலாம், நீங்கள் கோபித்து கொண்டீர்கள் என்று நினைத்தேன்

ஜலீலா

Jaleelakamal

அறுசுவை மாறியிருக்கிறது. புதிய பதிவுகளைக் காணவில்லையே. "எனது பக்கம்", "வெளியேறு" இவை இரண்டும்தான் இருக்கிறது. உங்களுக்கும் அப்படியா. pls சொல்லுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமாம் அதிரா

நன்றி தளிகா, இங்கு ஜலீலா அக்கா குறிப்பிட்டார் தனது செய்முறை இருக்கிறது இட்டலி,தோசை உளுந்து அரிசி பாவித்து செய்வது என்று கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது உங்கள் குறிப்பில் இருக்கிறதா? எங்கிருக்கிறது. நம்பர் சொல்ல வேண்டாம் எப்படி போய்பார்ப்பதென்று சொல்லுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன தளிகா ரொம்ப ஃப்ரீயாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. பேசலாமா? உங்கள் சன்ஸைன் ஸாஜிடரஸ் என்று எழுதி இருந்தேனே படித்தீர்களா. ஞாயிற்றுக்கிழமைகளில் என் கணவர் வீட்டில் இருப்பதால் எனக்கு கம்ப்யூட்டர் கிடைப்பது கஷ்டம். புது அருசுவை ஓகே. 'சந்தைக்கு புதுசு' நன்றாக இருக்கிறது. ஆனால் விலை கொஞ்சம் அதிகமோ அடுத்தடுத்து புதுசு என்ன வருகிறது என்று பார்ப்போம். போட்டிகள் வைக்க சொல்லிஎழுதி இருந்தேன். அந்த லெட்டரையே காணோம். பார்ட்டி மெனு, தினசரி காம்பினேஷன் மெனு, குழந்தைகளின் பிறந்த நாளை சிக்கனமாக சிறந்த முறையில் கொண்டாடும் முறைகளையும் எழுத சொல்லி அதில் சிறப்பாக எழுதுபவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கலாம். என்ன தளிகா சரிதானே? . மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. சகோதரிகள் தங்கள் கருத்துகளை எழுதுங்கள்

மாலதிக்கா பார்த்தேன் அன்று பதிவை..இரண்டு நாளும் கெஸ்ட் இருந்ததால் பேச முடியலை...சொன்னது சரி தான் போல.வீட்டிலும் சரி வெளியிலும் சரி மற்றவர்களுக்கு ஏதாவது செய்து கொடுப்பது கவனிப்பது என அதை நல்ல செய்வேன்..ஆனால் குடும்ப பொருப்புக்களை ஏற்றெடுக்க மாட்டேன்..எல்லாம் அவர் தான்..ஒரு வேளை அதை தான் சொல்ராங்களோ.,
என் கதையை வந்து பாருங்க:-)...ஓடி ஒடி பதிவு போடறேன்..காலையில் பரோட்டா,வெஜிடபில் ஸ்டஃபிங்,மதியம் ரோடி ,சேலட்,இரவு அப்பம்,முட்டை குழம்பு என இப்பொழ்து முட்டை குழம்பை தவிற மற்றவை செய்வதற்கு இடையே ஓடி ஓடி வந்து கொண்டிருந்தேன்..எனக்கு சமையல் என்றால் அது மட்டும் செய்தால் பத்தாது..ஒரு ஐடெம் பன்றதுக்கு என் பொன்னு 4 ஐடத்துக்கான வேலையை வெச்சிருப்பா..எல்லாத்தையும் இழுத்து போட்டி,கொட்டி வீசி விளையாடியிருப்பா...என்ன யாரையும் கானோம்னு ஆள் ஆளுக்கு பதிவு போடாட்டால் அப்டியே இருக்குமேன்னு நான் எழுப்ப வந்தேன்:-D..இப்ப பொன்னு கைல பிஸ்கட் கொடுத்துட்டு வந்தேன்...இனி நேரம் கிடைக்கும்பொழுது மற்றவை.
நீங்கள் சொன்ன போட்டி ஐடியா சூப்பர் தான்..எனக்கும் போட்டி வைக்காலாமே என்று தோன்றியது ஆனால் என்னென்னன்னு தெரீல..
அதிரா நீங்க கேட்டது புரியலையே...என்ன கேட்டிருக்கீங்க?இட்லி தோசை செய்முறையா?

மேலும் சில பதிவுகள்