செட்டிநாடு சிக்கன்

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிக்கன் - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 1,
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
மிளகு - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

சிக்கனை சுத்தம் செய்து கொழுப்பு,தோல் இல்லாமல் ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, சோம்பு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கரகரப்பாக அரைக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வதக்கவும்.
வதங்கிய பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, வேக வைத்த சிக்கன்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செந்தமிழ் அக்கா இன்று இந்த செட்டிநாடு சிக்கன் செய்தேன்ம்கருவேபிலையை மட்டும் மறந்துட்டேன் போடுவதர்க்கு இருந்தாலும் நல்லா இருந்தது ,இதுவரை நான் இஞ்சி பூண்டு இல்லாமல் இறைச்சி சமைத்தது இல்லை 1/4 கிலோ இறைச்சிதான் குறிப்பிட்டுள்ளீர்கள், ஆதலால் செய்து தான் பார்ப்போமே என்று தான் முயர்ச்சித்தேன் வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருந்தது!கொத்தமல்லியை எப்பொழுது சேர்க்கலாம் என்று கொஞ்சம் தடுமாறினேன் சரி என்று கடைசியில் சேர்த்தேன்!சுவை அபாரம்!நன்றி அக்கா.

ஹாய் ரஸியா,
பாராட்டுக்கு நன்றி. கறிவேப்பிலை வாசத்திற்கு தானே, ருசியிலொன்றும் மாறுபாடிருக்காது. கொத்தமல்லி தூவ மறந்திட்டேன்பா. இஞ்சி, பூண்டில்லாமல் செய்யும் என்னோட இன்னொரு குறிப்புமுள்ளது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

romba superba. thanks

அன்பு அரசி,
பாராட்டுக்கு நன்றிமா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ரஸியா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த செட்டிநாடு சிக்கனின் படம்

<img src="files/pictures/chettinad_chick.jpg" alt="picture" />

கலர்ஃபுல்லா வெச்சிருக்கிறதே ரொம்ம்ப ரசனையோடு இருக்கு. பாராட்டுகள் ரஸியா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.