பாலக் பனீர்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

 

பசலைக்கீரை - 1 கட்டு,
மைசூர் பருப்பு (அ) பாசிப்பருப்பு - 1 தேக்கரண்டி,
பனீர்(கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் தயாரித்தது) - 1 கப்,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 2,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

கீரையை பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து 2 விசில் வரை வேக வைக்கவும்.
ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு, சுமாராக நறுக்கிய 2 வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெந்த கீரை,பருப்பு, வதக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்கவும்.
மீதி எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் வதக்கியபின் பனீர், 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கிரேவி திக்காக வந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

என்னோட தங்கை வீட்டுக்கு வந்திருக்கா..இப்ப அவதான் சமைக்கிறா.. பனீர்க்கு பதிலா கேப்ஸிகம் போட்டு செஞ்சா..சப்பாத்திக்கு நல்லா இருந்தது..

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அன்பு சங்கீதா,
வித்தியாசமா செய்து பார்த்திருக்கீங்க, அதனாலென்ன, இப்படி தான் புது புது ரெசிபி கண்டுபிடிக்க வேண்டும்.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்
நான் பனீருக்கு பதிலாக மஷ்ரூம் சேர்த்து செய்தேன். சுவை நன்றாக இருந்தது.
செல்வி.

சவுதி செல்வி

அன்பு செல்வி,
பணீருக்கு பதில் மஷ்ரூம், ரெண்டும் கிட்டதட்ட ஒருமாதிரி சுவை வரும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சூப்பர் பாலக் பனீர் முதல் முறையா செய்யறேன். பலர் வீட்டில சாப்பிட்டா ஒரு பச்சைவாசனை வரும். சொன்னதை அப்படியே பாலோ பண்ணி செய்ததில் அருமையா வந்தது. வனிதாவின் மின்ட் ரொட்டி மற்றும் ராய்தாவுடன் சாப்பிட ரொம்ப அருமை. இதெல்லாம் செல்விம்மா வாரத்திலே செய்திருக்கலாம்ன்னு அதிரா சொல்வது கேக்குது :((

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு இலா,
நலமா? பருப்புடன் சேர்த்து வேக வைத்து அரைப்பதால் பச்சை வாசனை இருக்காது. மின்ட் ரொட்டிக்கு நல்லா இருக்கா? அப்ப செய்துட வேண்டியது தான். ரொம்ப நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்விமா.. நீங்க ஊருக்கு போயிருப்பிங்கன்னு நினச்சிட்டேன். உண்மையிலே நல்லா வந்து இருந்தது நோ பச்சை வாசம். அவர் ஆபிஸிலும் இந்த ரெசிபிக்கு நல்ல வரவேற்ப்பு முக்கியமா நார்த் இந்தியன்களிடம் இருந்து. ரொம்ப தேங்க்ஸ்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

hai madam unkaloada palla panneer ruchiyaa irrunthathu.panneer eppady charpathu.fry panne charpingala.eppady fry pannuvathu.nan fry panniyapothu karrinthupoiirruthu.

அன்பு எரிக்,
பாராட்டுக்கு நன்றி. இதில் சேர்க்கும் பனீரை ஃப்ரை பண்ண வேண்டிய அவசியமில்லை. அப்படியே சேர்க்கலாம்.
அப்படி ஃப்ரை பண்ணனும்னு நினைத்தால் எண்ணெய் நன்கு சூடானதும் சிறிய சதுரங்களாக நறுக்கிய பனீரை சேர்த்து, தீயை மிதமாக்கி 2 நிமிடங்கள் வதக்கி எடுத்தால் போதும். மேலே லேசாக பிரவுன் கலர் வரும். அது போதும். எடுத்து வெந்நீரில் போட்டு வைத்திருந்து தேவையான போது நீரை வடித்து சேர்க்கவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

very thanks.இனிமல் பன்னும்பொது இப்படி பன்ட்ரென்.

அன்பு செல்வியக்கா,
நலமா? வீட்டில் அனைவரும் நலமா?! ரொம்ப ரொம்ப நாளாச்சு உங்க பதிவுகளை இங்கே பார்த்து, உங்களோட பேசி...

நேற்று இரவு சப்பாத்திக்கு உங்களோட இந்த குறிப்பு செய்தேன். ரொம்ப ரொம்ப சுவையா அருமையா இருந்தது. எங்க வீட்டில் எல்லாருக்கும், குறிப்பா என் பொண்ணுக்கு ரொம்ப‌ பிடிச்சுபோச்சு! அம்மா, சப்பாத்தி செய்யும் போது, இதுப்போல சைட் டிஷ்ஷே செய்ங்க என்று சொன்னாள்! :) குறிப்பை விருப்பப்பட்டியலிலும் சேர்த்தாச்சு! அருமையான குறிப்புக்கு மிக்க நன்றி செல்வியக்கா!! Take care.

அன்புடன்
சுஸ்ரீ

செல்விக்கா,
பனீர் ரெசிபின்னாலே வீட்டுல‌ பசங்களுக்கு ரொம்ப‌ ஃபேவரட்! இங்க‌ நான் பதிவு போட்டதுக்குபிறகு, இந்த‌ ரெசிபி நிறையமுறை செய்திருக்கேன், மீண்டும் இன்னைக்கு டின்னருக்கு செய்தேன். கார்லிக் நாணுக்கு சூப்பரா இருந்தது.

அன்புடன்
சுஸ்ரீ